திருவல்லிக்கேணி ஸ்ரீ ராம நவமி உத்சவம் 2 [25th March 2012]
The Thiruvavathara Mahothsvam of Lord Rama is
Sree Ramanavami, which is celebrated as ‘9 days festival’. Today is the second day of the festival and
some photos of Lord Rama, accompanied by Seetha and Lakshmana are placed here.
The Lord with the Bow Kothandam will relieve us of all worries and falling at
his feet will lead to eternal bliss, freeing us from all trouble.
மன்னு
புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்த
சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின் திருவவதார மகோத்சவம் ஸ்ரீராம
நவமி.
எய்தான்
மராமரம் ஏழுமிராமனாய்*
எய்தான்
அம்மான்மறிய ஏந்திழைக்காய் - எய்ததுவும் *
தென்னிலங்கைக்
கோன்வீழச் சென்று குறளுருவாய் *
முன்னிலம்
கைக்கொண்டான் முயன்று *
--------- [ஸ்ரீ
பேயாழ்வார் மூன்றாய் திருவந்தாதி 52ம் பாட்டு]
இராமபிரான்
- வாலியைக் கொல்ல தனக்கு வலிமை உண்டு என தன் அடியவனான சுக்ரீவன் நம்புவதற்காக, அவன் ஒரு மரத்தை துளைக்கச் சொன்னபோதும்,
மராமரங்கள் ஏழும் துளைப்படும்படியாக அம்பு எய்தவன். தென் இலங்கைக்கு
அரசனான ராவணனை வீழ அம்பு எய்தவன் - தன் அடியார்களை எப்போதும் காப்பவன் - அத்தகைய
ஸ்ரீராமபிரானை வணங்கி தொழுவது ஒன்றே நமக்கு எல்லா பேற்றையும் அளிக்க வல்லது.
இன்று
(25/3/2012) திருவல்லிக்கேணியில்
ஸ்ரீராமநவமி உத்சவத்தில் இரண்டாம் நாள் புறப்பாடு நடந்தது. ஸ்ரீ ராமர்,சீதை , லக்ஷ்மணர் சேர்ந்து எழுந்து
அருளிய புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :
அடியேன்
ஸ்ரீனிவாச தாசன்.
No comments:
Post a Comment