To search this blog

Monday, March 5, 2012

Thirukachi Nambigal Sarrumurai - திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை


March 2nd, 2012 was the Sarrumurai (Birth celebrations) of Acharyar Thirukachi Nambigal.  He was born in Poovirunthavalli, which is now known as ‘poonamallee’ lying around 20 km away from Central Chennai enroute to Bangalore, Kanchi, Vellore, Thiruvallur and Tirupathi.   His parents were Veeraghavar and Kamalai. 

Nambigal served Kanchi Peruralalar by doing ‘aalavatta kainkaryam – (service of providing air by hand fan) and was an acharyan of Swami Ramanujar.  It is believed that Arulalar spoke to Nambigal in person.   Through him, Devathirajar gave message of ‘Six words’ to Ramanuja. 

Here is something on  Thirukachi nambigal and some photos taken during the purappadu. 


வெள்ளிக்கிழமை – 2nd March 2012 -  இன்று 'மாசி மிருகசீர்ஷம்'  - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள். 

திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார்.  இவர் சௌம்ய வருஷம்,  1009 ஆம் ஆண்டு,  வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.  சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்லும் மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது. 

இன்று : பூனமல்லி / பூந்த மல்லி  என பலவாறு  மருவி அழைக்கபடுகிறது.  இங்கே திருக்கச்சி நம்பிகளுக்கு  பிரதானமாக கோயில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள்- திருக்கச்சிநம்பிகள் கோயில்தான் அது. இங்கே காஞ்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார். பூவிருந்தவல்லி என்பது தான் கால போக்கில் இப்படி மருவி விட்டதாம். திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 

திருக்கச்சி நம்பிகள் தினமும் பூக்கள் சமர்ப்பித்து திருகச்சியிலே தேவராஜ பெருமாளுக்கு திரு ஆலவட்டம் (விசிறி) திருப்பணி செய்து வந்தாராம்.  தேவாதிராஜர் அர்ச்சாவதாரத்தை தாண்டி,  இவருடன் பெருமாள் தினமும் உரையாடி வந்தாராம்.   இளையாழ்வார்  (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம்.  அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன.  "அஹமேவ பரம் தத்வம்" - என்பது முதல் வார்த்தை.  'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும்.  நாம் "இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே சிறப்பு"என்பதை உணர வேண்டும். 

இவரது சாற்றுமுறை  - (Friday) 2nd March 2012 அன்று; -  காலை நம்பிகள், ஸ்ரீ பார்த்தசாரதியுடன் தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளி, மாலை 'இராமானுஜ நூற்றந்தாதி' கோஷ்டி செவி மடுத்து புறப்பாடு கண்டு அருளினார்.  அன்று மாலை எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே : 




Adiyen Srinivasa dhasan.  

2 comments:

  1. Thank you Sampath Swamin. Very Inspiring to read your stuff daily.I am amazed at your commitment in spending time to write the blog. We truly appreciate your time. Hope all are doing well at home.

    Kazhiyur Narayanan (Hope you remember me, Siemens Narayanan, Vasudevapuram. Sowmi's classmate)

    Adiyen.

    ReplyDelete
  2. Dear Narayanan

    Sure, I remember you so well. Hope all are well - do keep in touch

    Regards - Sampathkumar S

    ReplyDelete