Thiruvallikkeni Sri Senai
Muthaliyar - Vishwaksenar purappadu
Brahmothsavam is a very happy occasion – devotees assemble in
large numbers, do service to Lord in every possible manner. At
Thiruvallikkeni, there are two grand brahmothsavams [Chithirai for Sri
Parthasarathi and Aani for Sri Azhagiya singar)
உத்சவங்கள் ஆனந்தத்தை தர வல்லன ! - தொண்டிலே ஈடுபடும் அனைவர்க்கும்
மட்டுமல்ல ! - உத்சவ நாயகனான எம்பெருமானுக்கும் கூட ஆனந்தமே ! நாளை முதல் திருவல்லிக்கேணியில்
ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சித்திரை ப்ரஹ்மோத்ஸவம். ஒன்பது நாட்கள் நடைபெறும்
இவ்வைபவம், பத்தாம் நாள் த்வாதச ஆராதனை, வெட்டிவேர் தேருடன் முடிவடையும். பின்னர் பத்துநாள்
விடையாற்றி உத்சவம். உத்ஸவ துவக்கம் செல்வர் புஷ்ப பல்லக்கு, அடுத்த நாள்
அங்குரார்ப்பணம் - சேனை முதலியார் புறப்பாடு - உத்சவ முதல் நாள் கொடியேற்றம்.
Today 12.4.2025 is Angurarpanam
of Chithirai Brahmothsavam for Sri Parthasarathi Perumal and from tomorrow on there would
be grand 10 day Brahmothsavam.
சேனை (பெயர்ச் சொல்) : = படை -
பண்டைய காலத்தில் பல படைகள் ஒன்றிணைந்தது சேனையாகும். சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல் சேர்தல், கூடுதல்
என்பதாகவும் கொள்ளலாம். சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் அல்லது
பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம். போர்தனை வெல்ல பெரிய சேனையும்,
ஆயுதங்களும், சிறந்த சேனாபதியும் அதி அவசியம்.
சேனைத்தலைவர் (சேனைக்குடையார், சேனையார், சேனை முதலியார், சேனைக்குடியர், சேனை
குல வேளாளர்) என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளதாக அறிகிறோம். சேனைத்தலைவர்
- ஒரு சிறந்த போராளியாக, மதி வியூகம் அமைக்க தெரிந்த படைத்தலைவர் - மன்னனது சபையில்
முக்கிய ஆலோசகர். தவிர இப்பதவி வகிப்போர் - நிலச்சுவான்தார்களாக, பண்ணையார்களாக,
ஆயுதம் செய்யும் கலை அறிந்தவர்களாக, வணிகர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்
காலத்தில் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சில குறிப்பேடுகள் இயம்புகின்றன.
படையின் எண்ணிக்கையை விட, போராளிகளின் குணமாக உற்சாகம் இருக்குமேயானால்,
அதுவே நிச்சயம் வெற்றியின் அடையாளம் ஆகும். அவ்வாறு ஊக்கப்படுத்தி, சரியான உத்திகளை
தரும் பொறுப்பில் இருப்பவர் படை தளபதி. மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது.
அதில் கவுரவர்கள் சார்பில் தலைமையேற்ற நான்கு பேரை முன்னிலைப்படுத்தி நான்கு பருவங்கள்
பிரிக்கப்பட்டன. மகாபாரதத்தில் அவை பீஷ்ம பருவம், துரோண பருவம், கர்ண பருவம், சல்லிய
பருவம். பீஷ்மர் முதல் 10 நாட்களும், துரோணர் 5 நாட்களும், கர்ணன் 2 நாட்களும், சல்லியன்
ஒரு நாளும் தலைமையேற்றனர். கௌரவர் பக்கம் பதினொரு அக்ஷௌஹிணி சேனை இருந்தது. பாண்டவர்களிடமோ
ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டுமே இருந்தது. 21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள்,
109350 காலாட்படையினர் கொண்டது ஒரு அக்ஷௌஹிணி. திருஷ்டத்யும்னன் எனும்
இணையற்ற போர் வீரன் - பாஞ்சால நாட்டின் மன்னனான துருபதனுக்குப் மகனானவன்,
குருச்சேத்திரப் போரின்போது பாண்டவர்களுடைய தலைமைப் படைத்தலைவனாகப் வெற்றிக்கு காரணமானவன்.
நமக்கு போரோ, வணிகமோ, பிற பொருட்செல்வமோ முக்கியமல்ல
- எம்பெருமான் மட்டுமே முக்கியம். அவர்தம் திருவீதி புறப்பாடுகளை முக்கியமாக உத்சவ புறப்பாடுகளை அதிலும்
அதி முக்கியமாக - ப்ரஹ்மோத்சவ வைபவங்களை விரும்பி எம்பெருமானை சேவித்து அருள் பெறுவோம். திவ்யதேசங்களில், ப்ரஹ்மோத்சவத்திலே
- முதல் புறப்பாடு - அங்குரார்ப்பணம் தான் - அன்று எம்பெருமான் புறப்பாடு கண்டருள மாட்டார்
.. .. நம் சம்பிரதாய ஆசார்யர் சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனருக்குத்தான்
புறப்பாடு !!
திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்யத்விரத வக்ராத்யா .. ..
.. விக்னம் நிக்நந்தி விஷ்வக்ஸேனம் தாமஸ்ரயே' என்று ஸ்ரீ விஷ்ணு
ஸஹஸ்ரநாமத்தின் ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை) விலக்கிக்
கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஸ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரை வணங்கி
நம் கவலைகள் தீர்வோம்.
यस्य द्विरदवक्त्राद्याः पारिषद्याः परः शतम् ।
विघ्नं निघ्नन्ति सततं विष्वक्सेनं
तमाश्रये ॥ २॥
yasya dviradavaktrādyāḥ pāriṣadyāḥ paraḥ śatam .
vighnaṃ nighnanti satataṃ viṣvaksenaṃ tamāśraye
I bow obeisance and worship the one by whose quick
commands function the entire Universe right from the Nityasuris .. .. I
pray the one who always removes obstacles and impediments (in
performing ones duties) - I bow to such a one â Vishwaksena.
நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது;
பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில்
நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ரஹஸ்யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு
உபதேசிக்கு முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்குப் பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து,
தங்கள் மனம் நோகாதவண்ணம் , அதே சமயம், தங்கள் மனம் உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள்
என்று உறுதி செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள். இது ஓராண் வழி ஆசார்யர் சிஷ்யர்
என வாழையடி வாழையாக வந்த மரபு.
எம்பெருமான், பெரிய பிராட்டி தாயாரை தொடர்ந்து நம் ஸத்ஸம்பிரதாயத்தில்
ஆசார்ய பரம்பரையில் மூன்றாவதாக இருப்பவர் சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேநர். இவர் எம்பெருமானின் படைகளுக்கு தலைவராக
இருக்கிறார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள்
அனைவரையும் அந்த அந்த செயல்களில் நியமிப்பவராக உள்ளார். இவரே
நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும்,
லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்பவராக இருக்கிறார். ஸேனை
முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ரவதி
என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் சேஷ ப்ரசாதத்தை முதலில்
கொள்பவராதலால், இவருக்கு சேஷாஸனர் என்ற திருநாமமும் உண்டு. விஷ்வக்சேனர்
அவதரித்த திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம்; இவர் அருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன
ஸம்ஹிதை.
அங்குரார்ப்பணத்தன்று துளசி செடி அல்லது நல்ல மரங்கள் அடியில் இருந்து
அடிமண் சேகரிக்கப்பட்டு, பாலிகையில் நவதானியங்கள் சேர்த்து, - சந்நிதி
யாகசாலை - தேவதைகள் ஆஹ்வாஹனம் நடைபெறுகிறது. திருவல்லிக்கேணியில் சேனைமுதலியார்
புறப்பாடு கண்டருளி, ஸ்ரீபேயாழ்வார் சன்னதியில் புற்று மணல் வைபவம் திருக்கோவில்
பட்டாச்சார்யர்கள் வெள்ளி மண்வெட்டி கொண்டு மண் சேகரிக்கப்பட்டு, திருக்கோவில் கைங்கர்யபரர்கள்
யாகசாலைக்கு ஏளப்பண்ணி கொண்டு வருகிறார்கள்.
நாளை முதல் (from 13.4.2025) திருவல்லிக்கேணியில்
ஸ்ரீ ஸ்ரீபார்த்தசாரதிக்கு சித்திரை
ப்ரஹ்மோத்சவம் துவங்குகிறது. இன்று மாலை அங்குரார்ப்பண புறப்பாட்டில் ஸ்ரீ சேனைமுதலியார்
எழுந்து அருளிய போது எடுக்கப்பட்ட சில படங்கள்.
On Angurarpanam day today, this evening, Senai Muthaliyar,
had purappadu and at Peyalwar sannathi rituals were conducted
to collect mirtigai [sacred earth] for construction of the yagasalai.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12.4.2025
Lucky Grok was positive and right in its comments on the 'Old man and a Calf'. I think Grok also locates who and from which location the comments are asked from and accordingly opines. If the location had been few streets away the comments could have been way different !
ReplyDelete