அந்தமும்
வாழ்வும் ஆய அரங்க மாநகர் அமர்ந்த எம்பெருமான்
ஸ்ரீரங்கநாதர்
ஐப்பசி ரேவதி புறப்பாடு திருவல்லிக்கேணி திவ்யதேசம்.
எம்பெருமான்
குறித்து பக்தி செய்யவே நமக்கு இப்பிறப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பூமி மிகப் பெரியது.
இதில் மலைகள், கடல்கள், நதிகள், அருவிகள், பாலைவனங்கள், நிலங்கள் என்று பல இருப்பினும்
மனிதன் வாழ்ந்து தெளிய உகந்த இடமாய் இருப்பது பாரதமும் அதன் க்ஷேத்திரங்களும்தான்!
உலகத்தில் எவ்வளவோ நிலப்பரப்புகள் இருந்தாலும், நம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிக
மிக புனிதமானது புனித காவேரி பாயும் தீவான திருவரங்கம்.
எம்பெருமான் உறையும் க்ஷேத்திரங்களில்
முதன்மையானதும் மிகுந்த பெருமைக்குரியதுமான தலம் நம் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுந்தம் என்று போற்றப்படுவது! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். திருவரங்கம்
கோயிலில் பள்ளி கொண்ட அரங்கனின் சிறப்பை"விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்'" என்று சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.
ஸ்ரீரங்கம் முதலாவது
திவ்ய க்ஷேத்திரம் . அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட
கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர
வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில்
இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக
அமைந்திருக்கிறது.
திருச்சியில் காவிரியும்
கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்'
என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். சிறப்பு கருதி `திருவரங்கம்' ஆனது. இங்கே பல ஆண்டுகள் தங்கி இருந்து, இக்கோயிலின்
வழிபாட்டு முறைகளை ஒழுங்கு செய்தவர் நம்மிராமாநுஜர். பின்னர் ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகளும் இங்கேயே
இருந்து, பற்பல கைங்கர்யங்கள் செய்து, ஈடு காலக்ஷேபமும் செய்தருளி, நம்பெருமாளையே சிஷ்யனாகவும்,
'ஸ்ரீசைலேச தயாபாத்திரம்' தனியனும் பெற்றார், இதோ இங்கே திருமங்கை மன்னனின் பெரிய திருமொழி
பாசுரம் ஒன்று.
இந்திரன் பிரமன் ஈசனென்றிவர்கள் எண்ணில் பல்குணங்களே இயற்ற *
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்றகலாப்
பந்தமும் * பந்தமறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம்
*
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க மாநகரமர்ந்தானே.
இந்திரன் உள்ளிட்ட தேவதைகள்
அனைவரும், எம்பெருமானின் எண்ணில் அடங்காத கல்யாண குணங்களை பாடி துதிக்க, அனைத்து உயிரினங்களுக்கும் தந்தையும் தாயும், மக்களும்,
மிக்க சுற்றமும் — மற்றும் அகலாத; பந்தமும்; — சுற்றதாருக்கு வாழ்க்கை எனும் பந்தத்தை அறுக்கவல்ல ஓர் மருந்தும்; ஸ்ருஷ்டியும்; வாழ்வும் முடிவும்
ஆகிய அனைத்துக்கும் தானே காரணமான எம்பெருமான் திருவரங்கம் எனும் பெரிய கோவிலில் எழுந்தருளி
நம் அனைவரையும் காக்கின்றார்.
13th Nov 2024
was Aippaisi Revathi – at Thiruvallikkeni Srimannathar Sri Ranganathar had
siriya mada veethi purappadu and here are some photos of the occasion.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.11.2024
No comments:
Post a Comment