Today 2.2.2024 is Thai Swathi – at Thiruvallikkeni divaydesam, Sri Azhagiya Singar had siriya mada veethi purappadu. Mind wanders back to another Swathi 3 years ago ! .. .. it was Swathi on 8.1.2021 !!
மார்கழி 24 - ஜனவரி 8ம் தேதி 2021 வெள்ளிக்கிழமை
ஸ்வாதி ~ அன்று திருவல்லிக்கேணியினிலே தெள்ளியசிங்கப்பெருமாள் கோபுர வாசலில்
திரளான பக்தர்கள் குவிந்து இருந்தனர். இயல்புக்கு மாறாக சற்று வித்தியாசமான மனா ஓட்டம்
இருந்தது. ஆம். கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த மேற்கு
வாசல் அன்று திறந்து ஸ்ரீதெள்ளியசிங்கர் திருவீதி புறப்பாடு கண்டருளினார்.. திருப்பாவையில்
'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் ' !!: விழித்து
எழுந்து வீறுநடை போடுவதை ஆண்டாள் விவரித்தது போலே ஸ்ரீ அழகியசிங்கர் மார்கழி ஸ்வாதியில் திருவீதி புறப்பாடு கண்டு
அருளினார்.
Swami Nammalwar feels indebted and expressed his gratitude to all those – who fall at and uphold the feet of those bagavathas who are indebted, surrendered to and holding the feet of Sriman Narayana. Here is a pasuram from Thiruvaimozhi.
ஸ்வாமி நம்மாழ்வார் - எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார். நாதன் என்பதற்கு யாசிக்கப்படுபவன் என்றும் யாசிப்பவன் என்றும் ‘இருவகையாகவும் பொருள் கொள்ள வியாகரண சாஸ்த்ரம் இடந்தரும். தெள்ளியசிங்கர் கம்பீரம், அழகு, ஸ்வரூபலாவண்யமயமானவர்.
இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின்
அற்புத திருவாய்மொழி பாசுரம் :
நாதனை
ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப்
பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம்
பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும்
பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே.
தலைவனும், பூமியும் தெய்வ
உலகமும் ஏத்துகிற வாசனை பொருந்திய திருத்துழாய் மலரைத் தரித்தவனும், அழகிய நீண்ட சக்கரத்தையுடைய
எந்தையும், எல்லார்க்கும் உபகாரகனுமான எம்பெருமானுடைய பாதங்களை வணங்குகின்ற அடியார்களை
வணங்குகின்ற அடியார்கள்தாம் சொல்லப்படுகின்ற பிறப்புகளில் எல்லாம் எம்மை அடிமை கொண்டவர்கள்
ஆவார்கள்,’ என்கிறார் - சடகோபன் இந்த பாசுரத்தில்.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
No comments:
Post a Comment