To search this blog

Wednesday, October 25, 2023

My heart-felt tributes to Thirukkovil kainkaryabarar MA Balaji

‘Mr Munsamy oru  1.2.1’ - என்ற சுஜாதா கதை படித்து இருப்பீர்களா என தெரியாது !! 

இன்று ஐப்பசி சதயம் - திருவல்லிக்கேணியில் காலை ஸ்ரீபேயாழ்வார் பல்லக்கில் எழுந்தருளி, அவருடன் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் அவரது சன்னதிக்கு எழுந்தருளினார் - அவ்வமயம்  ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் குழுமி இருந்த  திருவல்லிக்கேணி வாசிகளுக்கு ஓர் பேரிடி வந்திறங்கியது.  ஒரு பால்ய நண்பனின் மரணம் - வெறும் மறைவு அல்ல, தென்னாசார்ய ஸம்ப்ரதாயத்திற்கு ஒரு பேரிழப்பு. 

மெய்யூர் எனும் கிராமம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது - அழகிய ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் உள்ள இடம்.  இந்த இடத்தை சொந்தமாக கொண்ட மெய்யூர் குடும்பத்தினரான ஸ்ரீ பாலாஜி ஸ்வாமி இன்று காலை 9 மணி அளவில் திருநாடு அலங்கரித்தது மிக மிக துக்கமான செய்தி.  ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்  திருவடிகளில் பல வருஷங்கள் இடைவிடா கைங்கர்யம் செய்த உன்னதமான கைங்கர்யபரர்.

 


உடன் பழகியோரிடையே  பெருமதிப்பை பெற்று அவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்.  எனக்கு பள்ளிநாட்கள் முதலே அவரை நான் நன்கு அறிவேன்.  +2 படிப்பு முடிந்து நாங்கள் அனைவரும் கல்லூரி சென்று, பின்னாளில் பணத்தை தேடி ஓடி, சில பதவிகள் பெற்று பெருமிதம் கொண்ட காலத்தில், பாலாஜி தன் தனித்துவத்தை உணர்த்தினான்.  பள்ளி காலம் முடிந்து சில நாட்கள் சில வேலைகள் செய்தான்.  புகைப்படத்துறையில் கொண்ட ஆர்வத்தில் அந்நாளில் திருவல்லிக்கேணியில் பிரபலமாக இருந்த 'தஞ்சை மூர்த்தி ஸ்டூடியோவில்' பணியாற்றினான்.  புகைப்படம் எடுத்தல், நெகட்டிவ்களை பிரிண்ட் போடுதல் போன்ற திறமைகளையும் கற்றான். 

திருக்கோவில் கைங்கர்யத்தில் அதீத ஈடுபாடு கொண்டு - உள்துறை கைங்கர்யபரர் ஆனான்.  விரைவில், திருக்கோவிலில் - வஸ்த்ரகோட்டடி, திருமடைப்பள்ளி, சன்னதி கைங்கர்யம் என ஒவ்வொன்றையும் சிறப்புற செய்தான். இளம் வயதிலேயே சிகையுடன் முழு கைங்கர்யபரர் ஆகவும் திருக்கோவில் பணியாளராகவும் பணியாற்றினான்.  

பளிச்சென்று அழகான திருமண், தூய பஞ்சகச்சம் ஆடை, மேலும் சில நாட்களில் தகடி, சால்வை அணிந்து - திருக்கோவிலில் - அருளிச்செயல், உள்துறை, திருமஞ்சனக்குடம், ஸ்ரீபாதம், திருக்குடைகள்,  சாமரம் (திருத்தேரில் பிரதானமாக), கட்டியம் சேவித்தல் என அனைத்து கைங்கர்யங்களிலும்  மிளிர்ந்தான்.  திருமடைப்பள்ளி கைங்கர்யம், அதுவும் மிக உஷ்ண நிலையிலுள்ள பிரசாதங்களை கொண்ட பெரிய பாத்திரங்களை லாகவமாக கையாண்டு, பக்தர்களுக்கு சிந்தாமல், சரியாக ஒரே அளவில் விநியோகம் செய்த சிறப்பாளன்.  

அல்லிக்கேணி அருளிச்செயல் கோஷ்டி - திரு பாலாஜி இடது ஓரத்தில் - அவர் தந்தை வலது ஓரத்தில்.

 

இது தவிர வாகனங்கள் ஓட்டுதல், நல்ல பேச்சு திறம், அபார ஞாபக சக்தி, அலுவலக மேலாண்மை, படம்பிடித்தல் என பற்பல திறைமைகளை வெளிக்காட்டினான்.  முக்கியமாக எம்பெருமானுக்கு கைங்கர்யங்களில் அவனது ஈடுபாடும்,  உத்வேகமும், இளமை ததும்பும் ஆனந்தமும் - இவையெல்லாம் எப்படி என பிரமிக்க வைக்கும்.  திருக்கோவில் சம்பிரதாயத்தை நன்கு தெரிந்து கொண்டு, பல சபைகளில் நிர்வாகியாக, சம்பிரதாயத்தை காத்து, பக்தி மார்க்கத்தில் நிறைய இளைஞர்களை ஈடுபடுத்தினான் 

பெரிய குடும்பம் இவர்களது - தந்தை திரு மெய்யூர் ஆதி கோபாலகிருஷ்ணமாச்சார்; தாயார் (மறைந்த) திருமதி ஜெயமணி.  சகோதரர்கள் - திரு ரங்கராஜன், திரு முரளி, திரு நாராயணன், திரு, ரவி, திரு சடகோபன் மற்றும் ஸ்ரீமதி.  இவர்கள் குடும்ப ஒற்றுமையும் பாசப்பிணைப்பும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.  எங்கள் ஸ்ரீனிவாஸ் இளைஞர் நற்பணி சங்கத்தில் ஆரம்ப நாள் உறுப்பினர்; திருவல்லிக்கேணி பிராம்மணர் சங்க நிர்வாகி, திருக்கோவில் பஞ்சாங்கம், பிராம்மணர் சங்க பஞ்சாங்க வேலைகளை சிறப்புற புண்ணியவன் என நினைவலைகள் நீண்டு கொண்டே போகிறது.

 

திருக்குடை கைங்கர்யம் - ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை

  

சம்பிரதாய விஷயங்களை நன்கு அறிந்தவர் - திருக்கோவில் நடைமுறைகளை மனப்பாடமாக முறை மாறாமல் சொல்லவல்லவர். அனைவருடன் பழகியவர் எம்பெருமானிடத்தில் கைங்கர்யத்தில்   விசேஷ ஈடுபாட்டுடன், அவரைப் போன்று செய்வது மிகவும் கடினம். இன்று காலை திரு மெய்யூர் ஆதி சௌந்தரராஜன் எனும் பாலாஜி சுவாமி மறைந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாக இறங்கியது.  இவர் மறைவு வைகுந்தத்துக்கு ஏற்றம், இவ்வைஷ்ணவ உலகிற்கு பேர் இழப்பு. அவர் நித்திய விபூதியில் எம்பெருமான் கைங்கர்யத்துக்கு எழுந்தருளிவிட்டார். கைங்கர்யத்தால் நம்  மனதை கவர்ந்த   நம் பாலாஜி ஸ்வாமி இன்று தம் 59ம் வயதில் திருநாட்டை அலங்கரிக்க, திருவல்லிக்கேணிவாசிகள் நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் வழி அனுப்ப, சென்று விட்டார்.  

அவர் மறைவால் வாடும் அவர்தம் மனைவி, அவர் குமாரர் பதரி நாராயணன், அவர் சகோதரர்கள், சகோதரி, மற்ற உறவினருக்கு இந்த பிரிவை தாங்கும் மனோ பலத்தை அருளி, அவர்களை காத்தருள, நம் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானை வேண்டுகிறேன்.  

A few years ago – happened to be at his home when SYMA’s news letter Bliss (of which Yours Truly was the Editor) was delivered.  He came down with a copy in his hands.  I queried him on why not he spend a few minutes to read ?   It was hardly couple of minutes as it had reached him – he spontaneously reproduced the Q that was on page 3 and commented on the answer on page 4 too.  A man capable of Fast reading much as Chitti, the humanoid in Rajni starrer Enthiran (Robot) would do!   Decades before that  Sujatha wrote in ‘Mr Munsamy oru  1.2.1’ – of  a roadside rickshaw puller acquiring  super memory by an injection that were to last only for a short period !!  

If my thoughts are incoherent, forgive me,  I knew Balaji for atleast 50+ years, interacted frequently, admired him for his youthful exuberance and committed kainkaryam.  Heard he was unwell and had been hospitalized – but knowing him, expected him to bounce back with renewed vigour.  Sad, he is no more !  

Triplicane would miss characters like him and a great loss to our Srivaishnava samprathayam. 
 
With deep regrets – S Sampathkumar
25.10.2023 

5 comments:

  1. Very nice and fitting tribute to this ever smiling and simple personality. I'm sure he is now in a better place serving the Almighty. Prayers for his atma shanthi and Sathgathi -- Varun Sampathkumar

    ReplyDelete
  2. He was indeed a great kainkariya paral was very affectionate to all archakas..Great tribute to him swami.

    ReplyDelete
  3. Excellent tribute.

    ReplyDelete
  4. என் கணவர் பற்றி இவ்வாறு அற்புதமாக கூறியதற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  5. Realy v can't. C likethis great personality fully his life dedicated to shree Kaingaram sure shree partha sarathy swamy gve blessings in shree vaikundam I hope iam also one day go there and c shree balaji swamigal.soon.

    ReplyDelete