Sri Azhagiya Singar Yoga Narasimhar thirukolam 2o23
Sriman Narayana- the ever merciful Lord is always our sole protector. He is our Rakshak.
எம்பெருமான் பக்தர்களை ரக்ஷிக்க ஓடோடி பறந்து வருபவன். தன்னிடமே அபராதம் செய்தால் கூடப் பகவான் பொறுத்துக்கொள்வான்; தன் பக்தர்களுக்கு அபராதம் செய்தால், பொறுத்துக்கொள்ள மாட்டான் என்பதைக் காட்டும் அவதாரம் - அங்கப்பொழுதே தோன்றிய நரசிம்ஹ அவதாரம். அவ்வாறு கோவாக்னியாக தோன்றியபோதும், பகவான் . ஒரு கண்ணில் பிரஹ்லாதனுக்கு கருணையும், இன்னொரு கண்ணில் ஹிரண்யகசிபுவிற்கு கோபத்தையும் காட்டினான்.
திருவல்லிக்கேணியில்
அவ்வெம்பெருமான் மூலவர் - யோகா நரசிம்மனாக சேவை சாதிக்கின்றான்; உத்சவர் ஸ்ரீ அழகியசிங்கர். நடைபெற்று வரும் ஆனி ப்ரஹ்மோத்சவத்தில் இன்று 5ம் நாள் மாலை ஹனுமந்த வாஹனம். பத்தி உலாவில் ஸ்ரீதெள்ளியசிங்கனுக்கு 'யோக ந்ருஸிம்ஹன்'
திருக்கோலம்.
அடியேன்
ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர்
வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
1.7.2023
Adeyan mumukshu acharyar thiruvadegale saranam adiarpuda sevai
ReplyDelete