To search this blog

Saturday, December 17, 2022

Sad ! Sad !! - Chozha period Perumal Koil goes missing !!!!!

Though comparison would be invidious, my thoughts went to Nellai Siva (who !!) -  how sad !?!?   The bane of our Society 



          We do not feel proud about ancient heritage and culture

•          Many of us do not go to temples daily

•          Even when we go, it is on the run, a hurried hush – not devoting time for the Lord as we look for quick darshan

•          Some big temples attract thousands and even lakhs of devotees – not all of them.

•          We do not visit our ancestral place and old heritage temples, many of them now are lying in bad shape with few devotees and no money for daily rituals too, and no proper care by its caretakers – HR&CE

•          Temples have been looted, beautiful divine idols stolen and found in display at Museums and private collections elsewhere – these are idols – meant for worship in beautiful big temples built by Emperors

•          Worser still, in some places, in the garb of no protection, Temple idols (Gods) have been taken out and kept in locker rooms in some other temples.  The very purpose is lost – in the Temple, the Lord of the Temple has complete supremacy as elucidated in Sthala puranams – HR&CE which is caretaker and takes away all the revenue from big temples, offers no protection.  No security in place – they cannot spend on security but can buy new Innovas for its officers.  So the supreme Lord of one temple is huddled with some others in a completely different temple elsewhere

•          The subject matter of this post (as read in media) is the worst of all – a Temple itself goes missing ! 

பள்ளிகளில் படித்த பாபர் அக்பர், வாரேன் ஹேஸ்டிங்ஸ், கார்ன்வாலிஸ், டல்ஹவுசி பிரபு கதைகளை மறந்து, சேர, சோழ, பாண்டிய, குப்த, புலிகேசி, நாயக்கர் மன்னர்களை நினையுங்கள் !!   கிபி.907 முதல் கிபி.953 வரை கிட்டதட்ட 50 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்த சோழ மன்னர் - பராந்தக சோழன்.  முதலாம் ஆதித்தனின் மகன். இவரது தந்தை இராசகேசரி என்பதால் இவர் பரகேசரி என்னும் பட்டத்துடன் அறியப்பட்டவர்.  முதலாம் பராந்தகருடைய பிள்ளைகள். இராஜாதித்தன், கண்டராதித்தன், உத்மசீலி, அரிஞ்சயன். சிறந்த உள்ளாட்சி நிர்வாகம், குடவோலை முறை, அற்புதக் கலைப்படைப்பான கோவில்கள் அதில் வடிக்கப்பட்ட அற்புதமான உள்ளங்கையளவு குறுஞ்சிற்பங்கள், வீரநாராயண ஏரி, சோழவாரிதி போன்ற எண்ணற்ற ஏரிகள் வெட்டி சிறப்பான நீர் மேலாண்மை, தில்லை சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தமை, வீரநாராயணன், வீரசோழன், சங்கிராம ராகவன், இருமுடிசோழன், பண்டிதவற்சலன் என எண்ணற்ற சிறப்புப் பெயர்களையும் கொண்ட மாமன்னன் இவர். 

இந்த  பராந்தக சோழனே  அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழப் பேரரசர் !  வரலாற்று சிறப்பு பெற்ற முதலாம் பராந்தக சோழரைச் சற்று புனைவுடன் இணைத்து கதாப்பாத்திரமாக வடிவமைத்து மக்களுக்கு தந்தார் கல்கி. 

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆட்சி ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அது முதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான். தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில், இவன் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான்.  

மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழனது  இயற்பெயர் வீர நாராயணன். அச்சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் ஆவான்.பல ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில், இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் (பொ.ஊ. 913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான். முடிவில் பராந்தகன் மதுரையைக் கைப்பற்றினான். போரின் முடிவில் பாண்டிய மன்னன் இலங்கைக்கு தப்பி ஓடினான்.   தன் தந்தை கட்டத்தவறிய பல கோயில்களை இம்மன்னன்  முயன்று கட்டினான்.  அய்யகோ !  இவை நாம் சரித்திரத்தில் படிக்கவில்லை, மக்களும் மறந்து விட்டார்களே !!

கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால்

உண்டறிந்து மோந்தறிந்து முய்யேனே - பண்டைத்

தவளவண்ணா! கார்வண்ணா! காமவண்ணா! கச்சிப்

பவளவண்ணா! நின்பொற் பதம். 

தொண்டைமண்டலத்திலே திருக்கச்சி எனும் ஊரில் அமைந்துள்ள திவ்யதேசத்தை பற்றி அழகிய மணவாள தாசர் எனப்படும் திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எழுதிய "108 திருப்பதி அந்தாதி" 



காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்துக்கு நேற்று வந்த ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்,“காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த கிபி. 1071-ம் வருட பழமையான நின்று அருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலை காணவில்லை” என்று புகார் தெரிவித்தார்.  

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் அருகே ஒரு பெருமாள் கோயில் களவாடப்பட்டு நம் மண்ணில் இருந்தே காணாமல் போயுள்ளது. பரந்தகத் தேவர் என்ற சோழர்காலத்தில் 1071-ம் ஆண்டு கட்டப்பட்ட நின்று அருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வழிபாட்டில் இருந்துள்ளது. பின்னர் கோயில் சீரமைப்பு என்ற பெயரில் அந்தக் கோயில் முற்றிலும் களவாடப்பட்டுள்ளது. இந்தக் கோயில் தொடர்பான கல்வெட்டு 1906-ம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்களால் (115 வருடத்துக்கு முன்னால்) கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  

சீரமைப்பு என்ற பெயரில் இந்தக் கோயிலில் இருந்த கல்வெட்டு, சிலைகள் அனைத்தும் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதன் பிறகு திரும்பி வரவில்லை என்று 80 முதல் 90 வயதுடைய பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.  திருப்பணி என்ற பெயரில் கோயில் களவாடப்பட்டதை அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு தெரிவிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஜிபி மற்றும் டிஜிபி அளவிலான அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  






Sadly, sadly – the beautiful idols in this post are not in any Temple and not being offered worship daily, but are placed in Madras Museum at Egmore !!!   Heart-felt appreciations to people like Mr Pon Manickavel and few others relentlessly fighting Hindu cause.  

Nellai Siva referred at the start is - Sivanathan Shanmugavelan Ramamoorthy  a comedian who has acted in some movies including ‘Kannum Kannum’ released in 2008  directed by G. Marimuthu, he was the Inspector in the scene when Vadivelu would complain of the well missing !!   

'கண்ணும் கண்ணும்' எனும் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, "அய்யா வட்டக் கிணறு, வத்தாத கிணறு, அந்த கிணத்தைக் காணோம்" என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காமெடி மிகவும் பிரபலம்.   திரைப்படத்தில் காமெடி வந்தால் சிரிக்கலாம் - ஒரு கோவிலே காணவில்லை என்பது கேட்கவே துக்கம் தொண்டையை அடைக்கிறது.  அந்த நடமாடும் நாதன்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு அளிக்க வேண்டும்.

 
With extreme sadness- S. Sampathkumar
17.12.2022 

3 comments:

  1. It is really a pity that the entire temple is missing.

    Even when Aswan dam was built in Egypt, the existing temple's all the stones were painstakingly numbered, documented, shifted and rebuilt completely modeling on the old temple.

    So much we care for heritage, in spite of existing documentation.

    We don't know how many such temples were undocumented and list for eternity.

    Pathetic sad state of affairs.

    ReplyDelete
  2. ...lost for eternity...

    Sorry about the typo.

    ReplyDelete
  3. Feeling very sorry for the news.....

    ReplyDelete