Celebrating the birth of Swami Ramanuja –
Thiru Avathara Uthsavam 2021
A great day today – ‘Chithiraiyil seyya Thiruvathirai’ – the
day of our Acarya Empermanaar thiruvavathara thinam. Wonder where is this ?
ஸ்வாமி எம்பெருமானர் ஒரு க்ருபாகடாக்ஷம். கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலைபோன்ற காருண்ய சீலம் கொண்டவர்.
சம்பத்து என்றால் செல்வம். ஸம்பத்து என்பது ஸ்மஸ்கிருதச் சொல். செல்வம் என்பது திரவியத்தையும்பொருட்களையும், பணத்தையும், கால்நடைகள், வாகனங்கள் போன்றவை மட்டுமல்ல ! அறிவுச் செல்வம்; ஒழுக்கச் செல்வம்; பொருட் செல்வம் ஆகிய மூன்றையும் குறிப்பிடும், “ஆரிய சம்பத்து” என்பது அறிவு வளர்ச்சி பற்றியதாகும். ரூப ஸம்பத்து, குண ஸம்பத்து - திரவிய ஸம்பத்து கூடத்தான் - இவை, எதை நாம் பெற்றால் நமக்கு ஸந்தோஷம் உண்டாகுமோ அவை. இது உலக இயல்பு. ஆனால் திருமாலடியார்கள் மீளாவுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இணங்குவரேயன்றி மற்றைய செல்வங்களையும், சுவர்க்கலோகத்து இந்திர பதவியையும் கூட விரும்ப மாட்டார்களாம்.
Of the three great exponents of Vedanta philosophy, BhagwadRamanuja with his aesthetic beautiful interpretations occupies the central place. Sri Ramanujar has the pride of place in the list of our Acharyars; he is hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar, Yathirajar, ThiruppavaiJeeyar, NumKovilannan, amongst other names was born in the year 1017 at Sri Perumpudur on ‘Thiruvathirai’ thirunakshathiram in the month of Chithirai.
Our Acaryar Swami Manavala Mamunigal was so attached at the feet of Sri Ramanujar and here is a verse from his Yathiraja Vimsati – which according to our learned vidwans came in to being as a result of the request of Swami Manavala Maminigal’s acharyan to compose a sthOthra grantham on Sri Ramanujar, when Mamunigal was a grahasthar and had the name of Azhagiya MaNavALa NaayanAr. These twenty verses constitute one of the most beautiful appeals to RaamAnujA for conferring his anugraham.
SrirangarAja charaNAmbhuja rAja hamsam
Srimadh ParAnkusa padhAmbhuja brungarAjam |
Sri BhattanAtha parakAla mukhAbhja Mitram
Srivatsa chi(h)nna CharaNam(SaraNam) YathirAjameedE ||
Mamunigal draws comparison to King Swan at the feet of Sriranganatha, great beetle settled to drink honey at the feet of Nammalvar, Sun who makes the lotuses blossom – I fall at the feet of Sri Kuresa, who is the mark of Srivatsa, Yatiraja – I worship. Mamunigal eulogises the emperor of SanyAsis , RamAnujA , who has chosen the lotus feet of Sri RangarAja as the seat of his permanent residence , just as a king swan would seek a beautiful lotus for its place of rest .
Nearly a thousand year ago, our Acaryar Sri Ramanujar on a pilgrimmage visited Srinagar searching for manuscript of Bodhayana-vritti, a commentary on the Brahmasutra by Bodhyana. His ardent disciple Kuresar was able to memorise it in one glance; the commentary of Udayavar is known as Sri Bashyam ~ Goddess of learning Saraswathi approving Sri Bashyam conferred the title ‘Bashyakara’ on Sri Ramanujar. Thus was fulfilled the main desire of Alavandhar – writing of an authoritative and illuminating commentary on Brahma sutra.
Today 5.5.2022 dawned so happily - Emperumanar 960 was grandly celebrated in 1977 – one may not have good memory of that; in 2017 it was 1000 and this year 1005 – the modern day equipment & technology ensure capture by way of photos and videos of the grand celebrations at Thiruvarangam, Thirumala, Thirukachi, Sriperumpudur, MelukoteThiruvallikkeni and at many many more places. So many places – Thiruvarangam, Thirumala, Thirukachi, Thiruvallikkeni, Sriperumpudur, Thirukurungudi, Melukote, Mathura, Pushkar, Kashmeeram, KOngunadu and more are associated with Him as he traversed the Nation by foot, propagating vishitadvaita concept.
Worshipping Sri Ramanujar at his Avathara sthalam and elsewhere will cure us of all sins and rid all diseases, keeping away mental distress and strain. Bhagwad Ramanuja with his aesthetic beautiful interpretations occupies the central place
இன்று நன்னாள் ~ எம்பெருமானார் அவதார திருநாள் ..இராமானுசர் 1005 இன்று. நமது பாரததேசம் புண்ணியபூமி. ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு வேதமும், ஆசார்யர்களுமே பிரதானம். அநுதினமும் நாம் அநுஸந்திக்கும் தனியனில் எம்பெருமானையும், ஆழ்வார்களையும், எம்பெருமானாரையும், நமது ஓராண்வழி ஆசார்யர்களையும் தொழுது – ஸ்ரீமன் நாராயணனுக்கே அடிபணிபவர்கள் நாம். தீமனம் கெடுத்து, ஸ்ரீமன்நாராயணனை தொழும் மனமே தந்து, அறியாதன அறிவித்து, பரமபுருஷனைக் காட்டிக்கொடுக்கும் ஆச்சார்யர் மிக உயர்ந்தவர். அவர் நமக்கு உலாவும் பெருமான். ஆச்சார்ய ரத்னஹாரத்தில் நடுநாயகர் ஆன நம்சுவாமி எம்பெருமானார் சாற்றுமுறை! சித்திரையில் செய்ய திருவாதிரை- இன்று, இந்த நல்லுலகமே எதிர்பார்த்துகாத்து இருந்த ~ சீரியநாள் –ஒப்புயர்வற்ற நம்மிராமாநுசமுனியின் ஆயிரத்து ஐந்தாவது பிறந்தநாள் சாற்றுமுறை. .
திருவரங்கத்து அமுதனார், ஒரு அளப்பரிய பக்தர். எம்பெருமானரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர். அவர் தமது இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார். இதோ இங்கே ஒரு பாசுரம்.
எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று
இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில்
புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள்
சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில்லார்,
பத்தி ஏய்ந்த இயல்விதென்றே!!.
இப்பூவுலகில், நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து (பெருஞ்செல்வம்) உடையவர்
இராமனுசரே என்று அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத துஷ்டஹ்ருதயர்களான மனிசர்கள், இந்நூலைப் பழிப்பார்களேயாயின் அன்னவர்களுடைய
பழிப்பே இதற்குப் புகழாய்விடும்; அவ்வெம்பெருமானாருடைய நித்யஹித்தமான
கல்யாணகுணங்களுக்கு தகுதியான அன்பையுடையவர்களான மஹான்கள் இந்நூலானது பக்தியோடு
கூடின ப்ரவ்ருத்தியையுடையதென்று திருவுள்ளம் பற்றி, இராமனுசனது திருநாமங்களைக்
சொல்லுசின்ற என்னுடைய (இந்தப்) பாசுரமாலைகளிலுள்ள குற்றங்மளைக் காணமாட்டார்கள் என உடையவரைப்பற்றி
பாடுவதனால், இந்நூலின் ஏற்றம் என்கிறார் அமுதனார். .
உய்ய ஒரே வழி, உடையவர்
திருவடி. நம் ஆசார்யர் ஸ்ரீ ராமானுசரின்
புகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை கற்று, பாடி அனுபவிப்போம்.
For me today dawned so nicely - around 0430 am .. .. Swami Emperumanar came out bangara vagili at holy Thirumala, anointed with sandalwood paste over His thirumeni .. .. yes, this time, had darshan of Swami Ramanujar at Thirumala – morning purappadu – Ramanusa noorranthathi goshti presided by His Holiness Thirumalai Periya Kelviappan Sri Satakopa Ramanuja Periya Jeeyar Swami & His Holiness Thirumalai Ilaiya Kelviappan Sri Govinda Ramanuja Chinna Jeeyar Swami.
The holy Thirumala offers extreme tranquilty and bliss - it is a challenge to be there and have darshan of Thiruvengadamudaiyan and more so, to attend thiruveethi purappadu and .. .. to take some photographs of Swami Udayavar of Thirumala Tirupathi. Emperumanar’s krupa kadaksham flowed to us thus this day and here are some photos of Swami Emperumanar and purappadu.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5th May 2022
Udayavar thiruvadigale charanam 🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteEnna bagyam.Udayavar thiruvadigale charanam
ReplyDelete