Sri Ramar
Pattabisheka Thirukolam ~ Theppam 2022
The 6th day of Theppothsavam is for Sri Rama Piran – the great Maryadha purush who crossed Ganges in boats driven by Guhan. .. .. On this day, Sri Ramar has purappadu in Pattabisheka thirulokam this occurs every year .. ..
தமிழரின் கடல் வாணிபம் மிகத் தொன்மையானது. தமிழர்கள் பெரிய பாய்மரக் கப்பல்களிலே சரக்குகளை ஏற்றிக்கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்துள்ளனர். தமிழர் நாவாய் வைத்து வாணிபம் செய்ததற்கு ஆதாரமாகப் பானை ஓடுகள், காசுகள், சுவரோவியங்கள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் இலக்கியங்களும் தமிழரின் கடலோடிய ஆற்றலைப் பறைசான்றுகின்றன. நாவாய் என்பது கடலில் ஓடும் மரக்கலக் கப்பல். வாய்நீரில் கிடக்கும் நாக்கு போல் நுனி குறுகி நீரில் ஓடும் கலத்தை நாவாய் என்றனர். இந்த நாவாய் வங்கம், கலம் என்னும் சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாவாயின் தோற்றம் பற்றியும், அவை இருந்த துறைமுகங்கள் பற்றியும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.எம்பெருமான் ஸ்ரீராமன் தந்தை சொல் காக்க - கூற்றுத்தாய் சொல்ல கொடியவனம் ஏகியவன். அவரது வனவாசத்திலே முதன் முதல் அறிமுகமானவனும் துணை செய்தவனும் குகன் ஆவான். அவனது பண்பு நலன்களைக் கண்ட இராமன், அவனைத் தன் தம்பியருள் ஒருவனாக ஆக்கிக் கொண் டான். குகன், வேட்டுவர் குலத் தலைவன்; அரையில் ஆடையும் காலில் தோல் செருப்பும் அணிந்தவன்; இடுப்பைச் சுற்றிக் கட்டிய ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்; வீரக் கழலுடன் அணிகலன்கள் பல அணிந்தவன்; இருளைத் தொடுத்தது போன்ற கருத்த தலைமயிர் கொண்டவன். பாறை போன்ற பரந்த மார்பும், இந்திரனது வச்சிராயுதத்தைப் போன்ற இடையும், நீண்ட கைகளும், கொடிய பார்வையும், பித்தன் போலத் தொடர்பில்லாத பேச்சும், கருமையான நிறத்தை கொண்டவன். கங்கையாற்றின் பக்கத்திலே அமைந்த சிருங்கிபேரம் என்று சொல்லப்படும் நகரத்தில் வசித்து வந்தவன். பொய் நீங்கிய மனத்தினன். ; யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன்; அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்.
ஸ்ரீராமபிரான் குகனை ஓடத்தை கொண்டுவருமாறு பணித்தான். வேடுவர் தலைவன் குகன், விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர்போலும் கண்களை உடைய இராமன் அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிவிட்டு, அழகு திகழ் சீதையோடும் இலக்குவனோடும் படகில் இனிதாக ஏறினான்.
கம்ப இராமாயணத்தில் அயோத்திய காண்டத்தில் குகப்படலம் அமைந்துள்ளது. இராமபிரானை மறுபடி அயோத்தி திரும்ப வேண்டி, பரதன் கங்கைக் கரை சென்றடைந்தபோது அதன் தென்கரையில் நின்ற குகன், ”இராமபிரானோடு போர் செய்வதற்குத் தான் இந்தப் படை திரண்டு வந்திருக்கின்றது” என்று நினைத்துச் சினம் கொண்டானாம். மரவுரி தரித்த நிலையில், இராமனிருக்கும் திசை நோக்கித் தொழுதவண்ணம் பரதன் வரக் கண்ட குகன், இராமனுக்குப் பின் பிறந்தார் பிழை செய்யார் எனக்கூறி படகில் ஏறி, பரதனின் அருகில் வந்து வணங்கினான். தன்னையும் கங்கை கரையை கடக்க உதவி செய்யுமாறு குகனை பரதனும் வேண்ட, அவன் கொணர்ந்த ஓடங்களை பற்றி கம்ப நாட்டாழ்வாரின் அற்புத வரிகள் இங்கே :
நங்கையர் நடையின் அன்னம்* நாண் உறு செலவின் நாவாய்.
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன
- கலந்த எங்கும், -
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின்,* அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும்* இருவினை என்னல் ஆன,-
அழகு மிளிர்ந்த மங்கையர் ஒய்யார நடையை ஒத்த, அன்னப் பறவைகள் கண்டு நாணப்படும் படியான, நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்; அக்கரையில் உள்ளாரை இக்கரையிலும்; ஏற்றி இறக்கும்தன்மையினால்; தேவருலகமாகிய அவ்வுலகத்தோடு; இவ்வுலகில் உள்ளாரை; ஏற்றி இறக்கும்; இருவினை - புண்ணியம், பாவம் என்னும் இருவினை; என்று சொல்லும்படியாக இருந்தனவாய்; கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி நெருங்கின; எங்கும் கலந்தன - எல்லா இடங்களிலும் சேர்ந்தன.
Pleasant things give
happiness to everyone and there cannot be more pleasant
sight than that of Sri Rama Pattabishekam ~ the eternal state of bliss- the
most complete picture of happiness to everyone in the Kingdom.
Kavichakravarthi Kambar describes the mega event saying it justified the
name of earth. Earth in Tamil is ‘Puvi’ [Bhoomi : பூமி] ~
which characteristically is the one with flowers [பூ]. The
sages and angels were outpouring choicest flowers from all directions, it was
raining fragrant flowers ~ earth appeared as if totally covered by those
flowers offered celebrating the Coronation celebrations of Sri Rama.
Today, the Lord treated his devotees – a fascinating depiction
of Sitadevi seated along Lord Sri Rama with the valiant Lakshmana holding
the umbrella and Sri Hanuman doing service at the lotus feet of the Lord.
Today, 7th Mar 2022 was Theppothsavam of Lord Rama –
and it was the most beautiful sarrupadi [alankaram] as ‘Pattabisheka
Ramar’. Here are some photos of the grand celebrations at
Thiruvallikkeni.
7.3.2022
Nice photos. கம்ப ராமாயண விளக்கமும் மிக சிறப்புடன் உள்ளது.
ReplyDelete