Today is 4th Oct 2021 – a day in the month of Puratasi ~ the tamil month of Purattasi has a pride of place. Devotees throng Vishnu temples, especially Tirupathi and other temples of Lord Srinivasa. In this month, there will be the annual Brahmothsavam at Tirupathi. Purattasi Sanikkizhamaigal are very significant and in Thiruvallikkeni there would be purappadu of Sri Azhagiya Singar.
Though everything else is open, Temples are closed for 3 days a week ! – the managers of the Temple would not care for the devotees as no action is contemplated – it is Govt instructions now uptil 31st Oct – so it is weekly off – denial of darshan for devotees ! how sad !! – when will all these change !If It's Tuesday, This Must Be Belgium – was an American romantic comedy film made by Wolper Pictures and released by United Artists in 1969. It was directed by Mel Stuart – what could be its relevance here ?
இது புரட்டாசி மாதம். பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. தமிழ் வருடங்கள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் வருடங்களுக்கு இடப்படுகின்றன. சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும். சம்ஸ்கிருத வார்த்தைகளே நாளடைவில் மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன. பெரும்பாலும் ஒரு மாதத்தில் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி மாறி வரும். இதில் பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரமோ அதுவே அந்த மாதத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும். சித்திரை மாசத்தில் சித்ரா நக்ஷத்திரத் தன்றுதான் பௌர்ணமி வரும். அதனால் சித்திரை மாசம் என்றானது.
புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி தமிழ் ஆண்டின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். நமது முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு சனிக்கிழமையும் மிக விசேஷம்.
How tolerant are you ? – what was once common (till a few decades ago !) is rare and uncommon now. Those days, families used to travel together – they would plan and go on pilgrimage to temples sharing food and everything. In the present World, everyone of us require privacy and luxuries and in general, are averse to travelling together. That way, people do not assemble and stay together even in family marriages ! now a days.
முன்பெல்லாம்
திருமலை அருகில் செல்லும்போதே 'கோவிந்தா, கோவிந்தா'
என்ற கோஷம் அதிகமாக கேட்கும்.
கைகளை உயர்த்தி எம்பெருமானை தியானித்து, மெய்மறந்து, திருமலை வாசனின் பெயர்களை
நாம சங்கீர்த்தனமாக சொல்லி பாடுதல் பக்தி.
இந்த புரட்டாசி மாசத்தில், முக்கியமாக சனிக்கிழமைகளில், தெருக்களில் பலர் கோவிந்த
நாமத்துடன் வளம் வருவார். திருவல்லிக்கேணியில்
சுட்டெரிக்கும் வெய்யிலிலிலும் - திருநாமம் அணிந்து, மாட வீதியை அங்கப்ரதக்ஷிணம் செய்பவரை சிறுவயதில்
பார்த்துள்ளேன்.
திருப்பதி
மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா - திருப்பதி மலைவாழும் வெங்கடேசா !!
அன்பென்னும்
அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்;
அதில்
ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என்
மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
.. .. பக்தி ரசம் சொட்டும் பாடல். படம் : திருமலை தென்குமரி -இந்த படம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், மனோரமா மற்றும் பலரும் நடித்து இருந்தனர். சில குடும்பங்கள் சென்னையிலிருந்து திருப்பதி முதல் தென்குமரி வரை ஆன்மீக யாத்திரையாக செல்வதையும் அவர்களது பயணமுமே திரைக்கதை. இந்த திரைப்படத்தில்.. திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில், திருத்தணி முருகன் கோயில், மைசூர் அம்மன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், கேரளா குருவாயூரப்பன் கோயில் தென்குமரி குமரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு இவர்கள் செல்வதாக படம். மிக நல்ல படம் - இது போன்ற படங்கள் தமிழில் கடந்த 30 வருஷங்களில் வருவதே இல்லை. காலம் மாறி விட்டது.
திரு சீர்காழி கோவிந்தராசனின் கம்பீர குரலில் - திரு குன்னக்குடி வைத்தியநாதனின் இன்னிசையில் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள் : திருப்பதி மலைவாழும்
In this holy month of Purattasi - there is the practice of ‘Maavilakku’ ~ lighting a lamp on rice flour richly added with jaggery, ghee, placed in a form reminiscing the holy Thirumala hills and the Lord of the Seven Hills – Srinivasa. People firmly believe that Thirupathi Balaji visits every home when such lamp is lit. Purattasi is also the time for 9 day Navarathri celebrations. This year Mahalaya Amavasai is on 6th Oct 2021 - there will be purappadu of Sri Vedavalli Thayar inside the temple with rendition of siriya thirumadal.
The film
referred earlier – “If It's Tuesday, This Must Be Belgium” released in 1969 was a romantic comedy film made by Wolper
Pictures and released by United Artists, directed by Mel Stuart and was filmed on location throughout Europe, and
features many cameo appearances from various stars. It is of the genre ‘road film’. Charlie (McShane) is an amorous English tour
guide who takes groups of Americans on whirlwind 18-day sightseeing tours of
Europe. A road movie is a film genre in
which the main characters leave home on a road trip, typically altering the
perspective from their everyday lives. Road movies often depict travel in the
hinterlands, with the films exploring the theme of alienation and examining the
tensions and issues of the cultural identity !
Thirumalai
Thenkumari was a road movie and reportedly was influenced by the film mentioned
above. Reminiscing the good olden days,
here are some photos of Purattasi Masapravesam Sri Parthasarathi Perumal
purappadu at Thiruvallikkeni divyadesam on 18.09.2011 in Canon Powershot As
1100.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4th Oct 2021.
🙏🙏🙏🙏
ReplyDelete