ஸ்ரீமன் நாராயணான எம்பெருமானே நமக்கு என்றென்றும் ரக்ஷகன்.
Today 6th Sept 2021 is Amavasai – and today is Avani Maham – masa thirunakshathiram of
Thirumazhisaipiran. We miss Emperuman
purappadu and other religious functions due to Covid restrictions, though
everything else seemingly is open.
In tough times in life or rather to ensure that we do not have to face tough times, we should surrender unto Sriman Narayana !
அவனை
அடைய நாம் என்ன செய்ய வேண்டும் ? ~ இருகை கூப்பி அவனடியே சரணம் புகுதல் வேண்டும். எவ்வளவு எளிதானது ~ நம் முயற்சி ஒன்றுமே வேண்டாமே
!! நம்முடைய ரக்ஷணத்தில் நாம் முயல்வதை விட்டிட்டு அவனுடைய ரக்ஷகத்வத்திற்கு
அவகாசம் கொடுப்போமாகில் அவன் எக்காலத்திலும் ரக்ஷண ஜாகரூகனாயிருந்தருள்வன்
என்பது மயர்வற மதிநலமுடைய பேயாழ்வார் வாக்கு. இதோ பேயாழ்வாரின்
பக்தி சுரக்கும் வார்த்தைகளில் அவரது மூன்றாம் திருவந்தாதியில் இருந்து ஒரு அற்புத பாசுரம்
:
அரணாம் நமக்கென்றும் ஆழி
வலவன்,
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன்,
- சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏது பிறப்பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து.
எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் எத்தகையவன் !!
~ திருவாழியாழ்வானை வலத்திருக்கையிலுடையவனும், முராஸுரனுடைய ஆயுளையும்,
வலிமையையும் போக்கின மொய்ம்பன் (மிடுக்கையுடையவனுமான பெருமான்) - அவ்வளவு சிறப்பு மிக்கவன்
நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில், நம்மிடத்தில் உள்ள எத்தகைய குறைகளையும் கருதாமல், நமக்கு
எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவேயிருப்பன், நெஞ்சமே இதை நன்றாக அறிந்து கொண்டு, ஆச்சரியமான
குண சேஷ்டிதங்களையுடையனான அப்பெருமானையே உபாயமாக புரிந்து கொண்டு, அவனது நாமங்களையே அநுஸந்தித்துக்
கொண்டிரு. என உரைக்கிறார் நம் பேயாழ்வார்.
Reminiscing
the good olden days – here are some photos of Sri Parthasarathi Perumal Amavasai
purappadu on 9.1.2016.
adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
6th Sept 2021.
No comments:
Post a Comment