In the ongoing Special Brahmothsavam for Sri Azhagiya Singar
at Thiruvallikkeni divyadesam today 8.3.2021 is
the seventh day – a very important day ~ it is
Thiruther for Perumal.
ஸ்ரீவைஷ்ணவ ஆலயங்களில் திருத்தேர் புறப்பாடு முக்கியமானது.
பல நூறு பேர்கள் கலந்து கொள்ளும் ஒரு அற்புத நிகழ்ச்சி. திருத்தேரில் பற்பல சிற்பங்கள்
அழகாய் அமைந்து இருக்கும். பூதங்கள், யாளி, சிம்ஹம், பாய்ந்து இழுக்கும் குதிரைகள்,
தேர்ப்பாகன் போன்ற பொம்மைகளும் தோரணங்களாக வண்ண திரைசீலைகளும் இருக்கும்.
எம்பெருமானுடைய பல்லாயிர திருநாமங்களை கூவி 'கோவிந்தா!, மாதவா!, கேசவா!, நாராயணா!, கண்ணா!, மதுசூதனா, ஹ்ரிஷீகேசா' எனப்பாடி ஆனந்தித்து அவனை அவனுறையும் பல்வேறு கோவில்களில் சென்று
சேவித்து, அவனது உத்சவங்களில் வாகன சேவைகளில் கண்டு இன்புறுகிறோம். இவற்றிற்கு மகுடமானது
வருடாந்திர ப்ரஹ்மோத்சவம். இந்த பத்து நாட்கள் விசேஷ வைபவத்தில் , திருத்தேர் கம்பீரமானது. அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும்.
அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை
"வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான
வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள்
எங்கும் மக்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன்
வாசலில் நின்று கொண்டு வணங்குவர்.
திருத்தேர் - ரதம் .. .. ரதங்கள் போர்களில் பெரும்பங்கு வகித்தன. மஹாபாரத யுத்தம் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும்
படமாக்கப்பட்டபோது - அதன் பிரம்மாண்டம் மிரட்டியது. "மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால்
கதை ஏது" என்பது ஒரு முதுமொழி.
ஊசி முனை நிலமும் தரமாட்டேன் என்ற துரியோதனனின் நிலைப்பாட்டால் குருக்ஷேத்திரத்தில் யுத்தம் மூண்டது. இரு அணிகளும் மிகப்பெரிய சேனைகளை தயார் செய்தனர். யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், ரதங்கள், பல்லாயிரக்கணக்கில் ஆயுதம் தாங்கிகள், அனைவரும் அணிவகுத்தனர். எங்கும் போரின் பேரரவம் கேட்டது. கவசம் ஆயுதங்கள் ஏந்தி அனைவரும் தயாராயினர். எங்கு புல்வெளியோ, எங்கு நீர் நிலையோ, எங்கு சம தரையோ ,எங்கு நிழலோ, எங்கு சைனியத்தை நிறுத்த வேண்டுமென்று யுதிஷ்டிரன் தேர்வு செய்தான். அனைத்து மிருகங்களும் நிம்மதியாக உணவருந்தி நீர் பருகி ஓய்வெடுத்தன.
யுத்தம் என்பது பேரழிவு. பாரதப்போர்தனில்
ரதங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நம்
எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி ஆயுதம் ஏந்தாமல் அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணினான். அதிரதர்கள்,
மஹரதர்கள், தேரில் ஏறி போர் புரிந்தனர். ஒவ்வொரு தெருக்கும் கொடியும் சாரதியும் பிரதானம்.
அர்ஜுனன் போன்று அற்புத போர் புரிந்தவன் சிறுவயது
அபிமன்யு. இந்த மஹாவீரனை தவறான முறைகளில்
கொன்றது ஒரு துரதிர்ஷ்டமான அத்தியாயம்.
பாரதப்போர் தொடங்க சில நிமிடங்கள் முன்பு, தன் காண்டீபத்தை ஏந்திய அர்ஜுனன், “அச்சுதரே! என்னுடைய தேரை இரண்டு சேனைகளுக்கும்
நடுவில் கொண்டு போய் நிறுத்தும். நான் இருசேனைகளையும் முழுவதும் பார்க்கவேண்டும். இந்த
கெட்டபுத்தியுள்ள துரியோதனனுக்காக யாரார் வந்திருக்கிறார்கள் என்பதை நான் ஒருமுறை பார்க்கிறேன்”
என வினவினான். அர்ஜுனனின் சொல்லுக்கு இணங்க
ரதத்தைச் செலுத்திய ஸ்ரீகிருஷ்ணர் இரு சேனைகளுக்கும் நடுவில் சென்று பீஷ்மருக்கும்
துரோணருக்கும் எதிரே நிறுத்தினார்.
திரைப்படங்களில் புராணங்கள் பல விதமாக திரிக்கப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. எனினும் பகவத்கீதை பிறந்த சமயத்தை விவரிக்கும் 'கர்ணன்' திரைப்பட பாடல் மிக பிரபலமானது. கண்ணதாசனின் அற்புத வரிகளில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் இந்த படைப்பு சிலிர்க்கவைப்பது. மறுபடி மறுபடி கேட்க தூண்டும் பாடலின் காணொளி இணைப்பு இங்கே :
This morning Sri Azhagiya Singa perumal had
veethi purappadu via Peyazhwar street to
Thiruther @ 05.00 am - and @ 7 am it was -
thiruther vadam. Thousands of devotees together pulling the
gigantic chariot of Sriman Narayana. 0ne will realise the grandeur of rolling
juggernaut, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by.
Thiruther is a grand occasion of togetherness of people. In the goshti, first it was
Thiruvezhukkoorirukkai and then Thirumozhi of Thirumangai
Mannan.
திருமங்கை
மன்னனின் திருக்குறுந்தாண்டகம் ஒரு அற்புத பிரபந்தம். இறைவனைப் பெருநிதியாக
வர்ணித்து மாந்தர்களாகிய நமக்கு எது செல்வம், எது உயர்ந்தது, நாம் என் செய்ய வேண்டும்
என போதிப்பது !! ~ இங்கே ஒரு பாசுரம் :
கேட்கயான்
உற்றதுண்டு* கேழல்ஆய் உலகம் கொண்ட,*
பூக்கெழு
வண்ணனாரைப்* போதரக் கனவில் கண்டு,*
வாக்கினால்
கருமம் தன்னால்* மனத்தினால் சிரத்தை தன்னால்,*
வேட்கை
மீதூர வாங்கி* விழுங்கினேற்கு இனியவாறே.
மனிதர்களுக்கு
தேவைகள் : உணவு, உடுப்பு, இருப்பிடம் .. .. இவை கிடைத்தாயின், மேலும் பணம், பொருள்,
போகம், என தேடல் .. .. .. பண்டைய கால மன்னர்கள் - தண்ணீர், வெற்றிலைப்பாக்கு,
வாசனை திரவியம், மண், மாதர், ஆடையாபரணம், சூது சதுரங்கம் என
உல்லாசித்தனர். மனிதர்களின் வாய்வெகுவுதலும், பொழுது போக்குதலும், இப்பொருள்களிலேயே மாறிமாறி
நடந்தன !!
ஆயிரம்
ஆண்டுகள் முன்பு திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில்
வெகுவாக பொருந்தும். நிலை கேட்ட மாந்தர்களே ! ~ பொருளையும் பிற இன்பத்தையும்
தேடி அலையாதீர். ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி
நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.
Here are some photos of Sri Azhagiya Singar thiruther
vaibhavam on 8.3.2021.
~ adiyen Srinivasa dhasan (mamandur Veervalli Srinivasan Sampathkumar)
Very nice
ReplyDelete