Today 23.02.2021 is Shukla Baksha Ekadasi in the month of Masi
2021. At Thiruvallikkeni Sri
Parthasarathi Perumal had periya mada veethi purappadu in the evening – it was
Sri Peyalwar’s moonram thiruvanthathi rendition in the goshti.
ஸ்ரீவைணவம் ஒரு எளிய மார்க்கம்.
நாம் வாழ்வின் காரணமே நம் எம்பெருமான்.
நம் செய்யவேண்டியது - அவ்வெம்பெருமானையே நினைத்து அவனுக்கே கைங்கர்யங்கள் செய்து,
அவன் பெயரை எப்போதும் நாத்தன்னால் நவில உரைத்து, அவன் தாள்களை பற்றி அவனிடம் சேர்வதே
! .. .. எம்பெருமானை வாழ்த்தப் பெறுவதொரு
நாள் உண்டானால், கீழ்க்கழிந்த காலமும் மேல்வருங்காலமும் எல்லாம் நன்னாளாய் விடுமென்கிறார்
நம் தமிழ் தலைவன் பேயாழ்வார்.
நாம் நற்காரியங்கள் செய்யும் நாள் நன்னாளே ! .. ஏதோ
ஒருநாள் எம்பெருமானை வாழ்த்தப்பெற்றால் அந்த ஒருநாள் மாத்திரம் நல்ல நாளாகுமேயன்றி,
கீழே பழுதே கழிந்த காலமும் இனிமேல் வரப்போகிற காலமுங்கூட நன்னாளாய் விடுமோ? எனில், ஒருவன் நெடுங்காலமாக தரித்ரனாயிருந்து ஒருநாளில்
செல்வம் மிக்கவனானால், அவனுக்கு சென்ற நாட்களின் கெடுதல்கள் தோற்றமாட்டா !!
The Universe
and Cosmos are full of infinite wonders – the supreme being is the Brahman –
Sriman Narayana. The great philosophy of
Srivaishnavism had been passed down as tenets to the deserving disciple by the great perceptors Sri Vaishnava Acharyars over
ages. The disciple offers his surrender at Naaraayana's feet and the reverred
line of Acharya-Gurus. The disciple lives and maintains a sattvic life in
accordance with Vaishnava tenets.
It is
surrendering unto Him being guided by our Acaryas. Prapatti is neither mere faith in the saving
grace of Sriman nArAyaNA nor a mere prayer to Him for protection/ salvation / moksha.
Prapatti would not mean a mere surrender
and a life centered around serving Sriman Narayana. The concept of Prapatti encompasses all of
this & is much much more. Though "SaraNAgathi" is in general used
for denoting "surrender" – it is a life of ultimate surrender and
living under the lotus feet of Sriman Narayana.
Unfortunate
that in this beautiful World, mankind is full of egos, prejudices, unwanted
anger, betrayal and more .. even in doing kainkaryam, some feel that they are
superior and only their type of kainkaryam is of the highest order. Alas, we do not understand that doing
kainkaryam itself is a privilege handed over to us by Sriman Narayana and that
one should never ignore or ridicule other bagavatha involved in any kainkaryam
to the supreme Sriman Narayana.
இதோ இங்கே நம் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி ஓர் அற்புத பாசுரம் :
சென்றநாள் செல்லாத
செங்கண்மால் எங்கள்மால்,
என்றநாள் எந்நாளும் நாளாகும், - என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்,
மறவாது வாழ்த்துக என் வாய்.
Azhwar prays and guides us the way – seeking to becoming His slave, let our tongues forever praise his lotus feet without fall, uttering from heart that Pundarikakshan (the red eyed Lord – Senkan maal) is our adorable Lord. When this happens – those days which had withered when we did none good, the days of the future and every other day will be good days.
எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் மட்டுமே நிரந்தரமானவன் - ஒரு நாளும் அழிவில்லாதவன். அத்தகைய சிறப்பு மிக்க எம்பெருமானுடைய உபயபாதங்களுக்கே ஆட்பட்டு மறவாமல் என் வாய் வாழ்த்த வேணும், இங்ஙனம் நடந்தேறும் ஆகில், கீழ்க்கழிந்த காலங்களும், மற்றும் இனிமேல் வரப்போகிற நாள்களும் ‘புண்டரீகாக்ஷன் [செங்கண்மால்] நம்மிடத்து அன்புடையவனாய் இருக்கிறான் என்று சொல்லப்பெற்ற நிகழ்காலமுமாகிய எல்லாக்காலங்களும் நல்லகாலமேயாகும், என அறுதியிடுகிறார் நம் பேயாழ்வார்.
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
23.02.2021.
பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.
Very nice
ReplyDelete