18.12.2019 was a blessed day ~ we visited Porbandar. Little did we realise the significance of the
place Sudamapuri ! and more of the day !
.. .. it is our good luck.
அவல் : நெல்லை ஊறவைத்து, இடித்து,
அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும்
அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும்
ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும்
பயன்படுத்துகிறோம்.
Porbandar is known to us all as the birthplace of Mohandas
Karamchand Gandhi. Onshore explorations
in and around Porbandar brought to light the remains of a late Harappan
settlement dating back to the 16th-14th centuries BCE. There is evidence to
suggest that the Harappan legacy of maritime activity continued till the late
Harappan period on the Saurashtra coast. The discovery of ancient jetties along
the Porbandar creek signifies the importance of Porbandar as an active center
of maritime activities in the past.
Porbandar was the seat of the eponymous princely state in
British India. In ancient times Porbandar was known to be Pao Bandar, due to
its bread factories that used to export Pao ruti to Arab nations across Arabian
sea. Later the state belonged to the
Jethwa clan of Rajputs. The state was
subordinate to the Mughal governor of Gujarat until being overrun by the
Marathas in the latter half of the 18th century. After, they came under the
authority of the Gaekwad court at Baroda and eventually of the Peshwa.
All these would pale to insignificance, when we know the
important of this place having connection of Lord Sri Krishna and the legend of
his friendship. In Tamil, we know him as
Kuchelar – he is Sudama, a Brahmin childhood friend of Sri Krishna. Sudama
was poor ! ~ his father was Matuka and
his mother was Rochana Devi. His fortune
was his friendship with Lord in his early days.
Sri Krishna the Supreme God later
was to rule the nearby Dwaraka, while Kuchela’s life was entwined to abject
poverty. His wife Niyati reminded him
of his friendship with Krishna and egged him to go and meet the Lord for help. Incidentally, the image of
Kuchela perhaps is far different that what is depicted here at
Sudamapuri.
Sudama was reluctant but eventually went to meet him. In his
state of affairs, he could not afford any good gift, but remembered the liking
of his bosom friend to ‘aval’ (poha / beaten rice) – and he takes some aval in
a cloth as a present. Lord Krishna
whose manifestation was to prove so many things to this World, seized this
opportunity to prove His quality of approving friends, irrespective of their
stature. Krishna & His consort
Rukmani received Sudaama and treated him
so royally – with Lord partaking little bit of aval, the troubles of Kuchela
started vanishing. When
Sudama finally returns to his home, he finds a palatial mansion instead of the
hut he had left. He also finds his family dressed in opulent garb and waiting
for him. He lives an austere life after that, always thankful to the Lord. It
is the price of devotion to Lord.
It is our religion to submit ourselves completely to the Lord
without any expectation – it can never be trading of bakthi, seeking some
returns. Sudama, was poor, had nothing,
yet offered ‘aval’ with devotion and his life changed for ever. Lord did not reward him because Sudama was a
friend – but he was a sincere, astute, religious person – following the duties
cast on him.
Shri Krishna-Sudama is an immortal example of real,
non-materialistic friendship. It is a perpetual symbolic definition of real
friendship. At Porbadar there exists a
temple for Sudama - constructed in 1902 and 1907 at the centre of the city. Built
with white marble this temple has a number of carved pillars which decorate the
temple, open from all sides this temple has a shikhara which is decorated with
splendid architecture and carvings. These carvings are also visible above the
pillars and the arches which adjoin the pillars. With such architecture this
temple is dedicated to the shrine of Sudama which is built in simple structure.
There is a beautiful statue of Lord Sri Krishna embracing Sudama. The temple has a maze within its complex and
it is believed that if a person crosses
this maze all his sins would be forgiven.
We were delighted to know the real-life story of ‘Krishna
Sudama’ friendship and were fortunate to have darshan on ‘Sudama day’
(18.12.2019) at Dwaraka as also at the temple of Sudama. Below
is the story of Sudama and the value of
friendship with Lord himself, beautifully explained by Gurji Gopalavalli dasar,
posted with his permission.
There was not much of buzz nor any spoke of the day here at these places but
social media carried many posts on Kuchela day and the celebrations elsewhere
including Guruvayur.
The temple at Sudamapuri seen now was renovated and built by : Maharaja
Rana Shri Bhavsinhji Madhavsinhji Sahib Bahadur, the Maharaja of Porbandar
belonging to Jethwa dynasty, who ascended the throne of princely state of
Porbandar in 1900 and ruled till his
death in 1908.
Adiyen Srinivasa dhasan [Mamandur Veervalli Srinivasan
Sampathkumar]
#மார்கழி #முதல் #புதன்கிழமை ! (#குசேல_தினம்)*
ஆமாம்
! சனாதன தர்மத்தில் இன்று (இந்த வருடம் 18.12.2019, புதன்கிழமை) நண்பர்கள் தினம் !
ஏனென்றால் துவாரகையின் ராஜனான க்ருஷ்ணனுக்கும், ஏழ்மையில் வாழ்ந்த சுதாமாவுக்கும் இடையில்
இருந்த நட்பு தான், மிகச்சிறந்தது.
*இன்று
#குருவாயூரில் #சுதாமா தினம் (#குசேல தினம் என்று சொல்வார்கள்)*. பகவான் கண்ணனை சுதாமா
ஒரு *#மார்கழி மாத, முதல் #புதன்கிழமை* துவாரகையில் சந்தித்தார். இந்த விஷயத்திற்கு
புராண பிரமாணங்கள் எனக்குத் தெரிந்தவரை இதுவரை கண்டதில்லை. எங்காவது இருக்கலாம், ஒரு
நாள் கண்ணன் பிரமாணம் காட்டித்தருவான். எப்படியாயினும் குருவாயூரில் வருஷாவருஷம் இந்த
தினத்தை விசேஷமாகக் கொண்டாடுகின்றதால், வேறு பிரமாணம் அவசியமில்லை.
*சுதாமாவின்
#மனைவியின் பெயர் #சுசிலா !* ஸ்ரீமத்பாகவதத்தில் சுதாமாவிற்க்கு 27குழந்தைகள் என்று
சொல்லப்படவில்லை. சுதாமா ஏழ்மையை ஆசையாய் ஏற்றார். சுசிலாவும் மனதார ஏழ்மையை ஏற்றாள்.
ஏழ்மை ஒருவனை எல்லா விதத்திலும் பக்குவப்படுத்துகிறது. நம் மனதில் தெய்வ நம்பிக்கையில்
குறை காரணமாக, தரித்திரம் கஷ்டம் என தீர்மானித்துவிட்டோம். *#ஏழ்மையில் #வாழ்வில்
#நடப்பதெல்லாம் #நாராயணன் #செயல் என்று ஏற்போம் !* பணம், பதவி, அந்தஸ்து வந்துவிட்டால்
எல்லாவற்றையும் மாற்றலாம் என்ற மமதை வந்துவிடும்.
ஆனாலும்
பசி மிகப்பெரிய கொடுமை. பிள்ளைகளின் பசி பெற்றோரை பொய் சொல்லவைக்கும், திருடவும் தூண்டும்.
ஆனால் சுசிலா இதையெல்லாம் செய்யாமல் கண்ணனை சரணடைந்தாள். சுதாமா பெரிய ஞானி. உடல் கவலை,
வாழ்க்கை இவையெல்லாம் கண்ணன் இஷ்டம் என்று விட்டுவிட்டவர். அதனால் அவரால் இதையெல்லாம்
பெரியதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. *ஏனென்றால் குருகுல வாசத்தில், வேதபுருஷனான கண்ணனோடு
வேதம் பயின்றவர். வேதம் கற்று கண்ணனை அடைந்தவர் பலர். ஆனால் #கண்ணனோடு #வேதம் #பயின்றவர்
இவர் ஒருவரே !* அப்படிப்பட்டவருக்கு ஏழ்மை வரமன்றோ. நமக்குத்தான் தெய்வம் என்பது
ATMகார்ட் மாதிரி, வேண்டியவாறு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பு. *எல்லோரும் குருவை
அடைந்து கண்ணனை அனுபவிப்பர். சுதாமாவோ #கண்ணனோடு #குருவிற்கு சேவை செய்தவர்.*
சுசிலா
தாயாயிற்றே. பிள்ளைகளின் பசி எப்படி பொறுப்பாள் ?!? எப்படியாவது தன் கணவரை ஒரே ஒரு
முறை துவாரகா அனுப்பினால், எல்லாம் மாறும் என்று திடமாக நம்பினாள். பல நாள் சுதாமாவிடம்
துவாரகா போய்வரச் சொன்னாள். சரியென்று ஒரு நாள் கிளம்பினார். கண்ணனுக்குத் தர ஏதேனும்
தா என்றார் சுசிலாவிடம். வீட்டில் ஒன்றுமில்லையே. ஆனாலும் சுசிலா கலங்கவில்லை. அவளுக்கு
ஊரார் வைத்த பெயர் க்ஷுத்க்ஷாமா, அதாவது பசியால் இளைத்தவள் என்று அர்த்தம். சுதாமாவிற்கும்
பட்டப்பெயர் உண்டு, அதுதான் குசேலர். குசேலன் என்றால் கந்தலாடை உடுத்தியவர் என்று அர்த்தம்.
சுசிலா அருகிலிருந்த சில வீடுகளில் பிச்சையாக வாங்கினாள் அவலை. *#அவள் வாங்கிய #அவல்
தான் சுதாமா கண்ணனிடம் கொண்டு சென்றது.*
ஒருவழியாக
துவாரகா வந்து சேர்ந்தார் சுதாமா. கண்ணனுக்குத்
தன்னை ஞாபக்கப்படுத்த அவரிடம் இருந்த ஒரே அடையாளம் குரு மட்டுமே. *#குருவருள் தானே
#திருவருள்.* குருதியானத்தோடு துவாரகா வந்தவரை த்வாரகாதீசன் ஆசையாய் வாசல் வந்து வரவேற்றான்,
பழைய பால்ய சினேகிதனாகவே. அவரைக் கொண்டாடினான். *#வேதமாதாவின் #திருவடியைப் பிடித்த
சுதாமாவின் #திருவடிக்கு வேதபுருஷனான கண்ணனே #பூஜை செய்தான்.* எல்லா சுகமும் கேட்பவர்,
கண்ணணைப் பூஜிக்கின்றனர். ஏதும் கேட்காத சுதாமாவை, கண்ணனே பூஜித்தான். செல்வம் கேட்பவரைக்
கண்டால் கலங்கும் லக்ஷ்மிதேவியான ருக்மிணித் தாயார், இவரையே பக்திச்செல்வத்தின் அதிபதியாய்
கண்டாள்.
கண்ணன்,
இவர் சொல்லவந்த குருகுல நினைவுகளை, அவன் சொன்னான். தான் ஏதும் மறக்கவில்லை என்று புரியவைத்தான்
மாயன். சுதாமா நெகிழ்ந்தார். பேச்சுக்கிடையில் எனக்கு என்ன கொண்டுவந்தாய் என்றான்.
உயிரைத்தவிர அவர் உடலில் என்ன உண்டு, என்று ருக்மிணி மனதிற்குள் கண்ணைக் கோபித்தாள்.
ஆயினும் இவன் மனம் உள்ளபடி யாரறிவார். அவனே சொன்னான் " *பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோ மே பக்த்யா ப்ரயச்சதி ! ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மனஹ !!*. அதாவது
ஒரு இலையோ, பூவோ, பழமோ ஒரு சொட்டு ஜலமோ, அன்போடு பக்தியாய் தருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்
என்று சத்தியம் செய்து கைநீட்டினான். எல்லோரும் இவனிடம் கைநீட்டி கேட்பர். ஆனால் இவன்
கைநீட்டிக் கேட்டது சுதாமாவிடம். ஆனாலும் சுதாமாவிற்கு தயக்கம், இத்தனை பெரிய த்வாரகாதீசனுக்கு
இந்த அவலை எப்படிக் கொடுப்பது ?!? ஆனாலும் *அவல் தந்த அவள் மனதால் கண்ணனிடம் சரணடைந்தாள்.*
கணவரின் மனமும், போக்கும் மனைவிதானே உள்ளபடி அறிவாள். கண்ணன் அவள் குரல் கேட்டு, இங்கே
அவலைப் பறித்தான். எனக்கு மிகவும் பிடித்தது என்றான் அவள் தந்த ஒருபிடி அவலை வாயில்
மென்றபடி. இப்படிக் கண்ணனுக்கு சுசிலா தந்த அவலை சுதாமா கண்ணனுக்கு துவாரகையில் தந்த
நாளே, மார்கழி முதல் புதன்கிழமை.
ஒரு
பிடி அவல், அவள் பக்தியால், ஜோராக ருசிக்க, இன்னொரு பிடி எடுக்க, இங்கே இவள் (ருக்மிணி)
போதுமென தடுத்தாள். இவர் பக்தியை செல்வத்தால் அழிக்காதே என்றாள், கண்ணைச் சிமிட்டிச்
சிரித்தாள். ஒரு நாள் பொழுது முழுதும் பால்ய குருகுல வாசத்தைப் பேசியே கழித்தான்.
*ஆனாலும் மனதால் சுசிலாவின் துன்பம் தீர நீங்காத செல்வம் தந்தான். சுதாமாவின் துன்பம்
தீர தன்னையே செல்வமாகத் தந்தான்*
கண்ணன்
என்னும் செல்வத்தை சுதாமா பூரணமாக அனுபவித்த தினம் இன்று. கிளம்பும்போது, அவ்வப்போது
வா என்றானே ஒழிய கையில் ஒன்றும் தரவில்லை. எல்லாம் மனதாலே தந்துவிட்டானே... கண்ணனை
எப்படி தோழனாக அனுபவிப்பது என்று சொல்லிக்கொடுத்தவர் சுதாமா. உடுக்கை இழந்தவன் கைபோல்,
ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று, சொல்லாமலேயே அருள் செய்த உற்ற தோழன் கண்ணன்.
எல்லோருக்கும்
சுதாமா தின வாழ்த்துக்கள். நான் குசேலன் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் கண்ணன் சுதாமா
என்றே அழைத்தான். ஊராரைப் பொறுத்தமட்டில் அவர் குசேலன். கண்ணனைப் பொறுத்தவரை அவர் என்றுமே
அவனின் பிரியமான சுதாமா தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சுதாமா கண்ணனைப் பார்க்க துவாரகா
செல்லவில்லை. சென்றால் இன்னும் ஏதேனும் தந்துவிடுவானோ என்ற பயமே காரணம். இன்று நமக்கு
இதை அனுபவிக்க ஒரு வாய்ப்பு தந்தான் குருவாயூரப்பன். விடியற்காலை அப்பம், அவல், பழம்
என்று தரவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பரவாயில்லை.
எப்படியோ மார்கழியில் விடியற்காலையில் குருவாயூரப்பன் தியானம் செய்வது நல்லதுதானே.
மனதின்
எண்ணங்களே அவல். அப்படியே தருவோம். திருக்கோளூர் பெண்பிள்ளை நம் ஸ்வாமி ராமானுஜரிடம்
*அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே* என்றாள் ! *நாமும் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ
இன்று கண்ணனுக்கு அவல் தருவோமா அவளைப் போலே !*
குருஜீ
கோபாலவல்லிதாஸர் (18.12.19, குசேல தினம்)
‘Kuselan’ starring Rajnikant was an adaptation, amended to suit
Tamil audience by its director P. Vasu. A remake of the Malayalam film Kadha
Parayumbol (2007), it had Rajni, Pasupathi, Meena and Vadivelu. The film was
simultaneously made in Telugu as Kathanayakudu.
The plot revolves around a villager, who had shared a strong friendship
with a popular cinema actor in his youth.
அருமையான பதிவு.அடியேன் சீனிவாச தாஸன்.
ReplyDelete