To search this blog

Wednesday, November 6, 2019

Thamizh thalaivan Sri Peyazhwar vaibhavam 2019


I have posted about Muthal Azhwargal anubhavam and the sarrumurai vaibhavam of Sri Poigaippiran and Sri Boothathazhwar.   7th Nov 2019 is  ‘Sadhayam’  in the month of Aippasi’ ~ the sarrumurai of Sri Peyalwar. 

ஐப்பசியில் ஓணம், அவிட்டம்,  சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - என ஸ்ரீமணவாளமாமுனிகள் தமது 'உபதேசரத்தின மாலையில்'  எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - வந்துதித்த நாள்களை சிறப்பித்தார்.                                          
ஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்ஒரு காலத்தி்லே திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே,              திருமயிலை புதர்கள் மண்டிமரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது  சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு  கேணியில்(கிணற்றில்அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹா விஷ்ணுவின்       ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்

Mylapore has been a shoppers’ paradise ~  this   historical place has two MRTS railway stations : Thirumayilai and Sri Mundakakanni amman temple.  In between runs Kutchery road, linking Beach Road with Luz Junction and you would have travelled many a times on this – do you know that one of the bylanes leads to a famous landmark with divine connection !  - the Arundale Street .. ..  next time, for sure when you travel on Kutchery road towards beach, you might take a turn and reach this place, if you have not visited this earlier…. at Arundale Street  – otherwise not so noticeable one… that winds its way towards Sri Madhava Perumal Kovil ~ and just a couple of yards in to the Street, lies this famous place with divine connection ~ the birth place of Azhwar – Sri Peyalwar.

Sri Peyalwar was born in a well in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street [described in the para above]  in Mylapore closer to Mylai Sri Madhaava Perumal Kovil.  At Thiruvallikkeni, the road adjacent to Sri Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri Peyalwar and this street is named after the Azhwar and is known as ‘Peyazhwar kovil Street’.


முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழைநாளில் திருக்கோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம்,இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரை இருவரும் வரவேற்றனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்தபோது, முதலில் பொய்கைஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாகக் கொண்டு  (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'க் கொண்டு (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.



 பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து

"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்,*
என்னாழி வண்ணன் பால் இன்று"
- என "மூன்றாம்திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார்.

Here are some photos of Sri Peyalwar at Thirumylai ~ Sri Madhava Perumal thirukovil [standing posture] and at Sri Adhi Kesava Perumal thirukovil [sitting posture]

திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே *
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே *
மருக்கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே *
மலர்க்கரிய நெய்தல் தனில் வந்துதித்தான் வாழியே *
நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே *
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே *
பெருக்கமுடன் திருமழிசைப்பிரான் தொழுவோன் வாழியே *
பேயாழ்வார் தாளினை இப் பெருநிலத்தில் வாழியே *

adiyen Srinivasa dhasan. [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]












No comments:

Post a Comment