“EEkkadu Thaangal Thiruvooral Uthsavam -
Thiurvallikkeni Emperuman
Thirumanjanam at Eekkadu”
Contrary to the notion
that Cows and many other animals sleep standing – cattle typically lie down to sleep or simply to rest,
usually leaning forward on their chest and forelimbs or lying completely on
their sides. Cows need their sleep to stay healthy; just as other animals do –
so at 2.30am this morning, cows were dozing at Thiruvallikkeni streets, while
the Temple area was busy – yes purappadu at midnight (early morning)
நான் ரொம்ப 'பிசி' என்று
சொல்லிக்கொள்ளும் பலரும் ஒரு நாளில் என்னவெல்லாம் உருப்படியாக செய்கிறோம் ? - ஒரு நாள்
திடீரென 'எவ்வளவு பயனற்ற வாழ்வு ' கழித்துள்ளோம் என்பது புரியும். பக்த சிரேஷ்டரான பொய்கையாழ்வார் அருளிச்செய்கிறார்.
:
பழுதே பலபகலும்* போயினவென்று *
அஞ்சி-
அழுதேன்* அரவணைமேல் கண்டு தொழுதேன்*
பழுது : பயனின்மை ~ so may
precious days in life have goneby wasted – I lament and cry for that .. .. ..
to my fortune I saw the ocean-hued red-eyed Lord reclining on the serpent bed,
-his feet caressed by lapping waves -and offered worship to him; and I realize
that is the meaning of life.
The
city of Chennai does not have good river worth its name ~ there is Buckingham
canal, Coovum river and .. river Adyaru. You cross Adyar river at some
places while traversing the city. Apart from couple of dilapidated
disused bridges – the bridges in the city over the river Adyaru are :
Thiru Vi Ka bridge at Adyar; bridge at Kotturpuram; Maraimalai adigalar bridge
at Saidapet, causeway in West Saidapet; at Jafferkhanpet and one at Manapakkam.
Chennaites will never
forget Dec 2015 when torrential rains swamped the city and water flowed over
the bridge across Saidapet, inundating many places with transportation coming
to a standstill. The river Adyaru
emanates from Malaipattu tank at
Manimangalam Village and traverses 42.5 km, flowing into Bay of Bengal. On that fateful day when it flowed over
bridges, it was reported that it was
carrying more than one lakh cusecs of water on December 2 and 3, much
more than the official account.
On the banks of ‘Adayaru’
lies Ekkattuthangal, now an industrial belt and at Ekkadu there is a piece of
land owned by Perumal. Sri Parthasarathi
visits this place once an year and has thirumanjanam - @ 3 am when even cows
were asleep, Sri Parthasarathi perumal had purappadu in palanquin – traversing
through the city, halting at many a places including Thirumylai Sri Madhava
Perumal templs and Sri Adhi Kesava Perumal temple; has purappadu with Sri
Peyalwar at Chithiraikulam; reaches His
land at around 11 am, has thirumanjanam, again starts around 3 pm, purappadu at
Saidapet, reaches back Thiruvallikkeni in the night.
If you are lucky, today,
you may have darshan of Sri Parthasarathi having this special purappadu or go
to the Ekkattuthangal and have darshan of thirumanjanam. Today 27th Jan 2019 is a tough and demanding day for the
kainkaryabarars of Thiruvallikkeni – the sripadhamthangigal, Battar,
Adhyapakas, various others engaged in doing service to Emperuman – for it is a
long journey crisscrossing the city.
திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நடக்கும் ஒரு சிறப்பு
உத்சவம் "ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உத்சவம்". அடையாறு ஆற்றங்கரையில் கிண்டி அருகே உள்ள
ஈக்காடு தொழிற்பேட்டைக்கு ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் எழுந்து
அருள்கிறார்.
திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் : நித்யப்படி, மாதந்திர, வருஷாந்திர உத்சவங்கள் பலவும் சிறப்புற
நடைபெறுகின்றன. திருநக்ஷத்திரம் கணக்கு இல்லாமல் நடக்கும் ஒரு சிறப்பு
உத்சவம் "ஈக்காடுத்தாங்கல் திருவூறல் உத்சவம்". கிண்டி
அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டை பிரசித்தி பெற்றது. இது அடையாறு ஆற்றங்கரையில்
உள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் இங்கு எழுந்து
அருள்கிறார். மாசி மாதம் மற்ற சிறப்பு உத்சவங்கள் ஏதுவும் இல்லாத ஒரு
ஞாயிற்றுக் கிழமை இவ்வுத்சவம் நடைபெறுகிறது. இவ்வருடம் இவ்வுத்சவம்
இன்று 27.1.2019 சிறப்புற நடைபெற்றது.
மண்டகப்படி என்ற
வார்த்தையை கேள்வியுற்று இருக்கிறீர்களா ? அகராதியின்படி இப்பெயர்ச்சொல்லுக்கு
: திருவிழாக் காலத்தில் உற்சவமூர்த்தியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்வதற்காக
ஒருவர் அல்லது ஒரு சமூகத்தினர் ஏற்கும் பொறுப்பு என உள்ளது.
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்
நேராக எழுந்தருளாமல் வழியில் பல இடங்களில் இளைப்பாறுகிறார். திருக்கோவில்கள்,
சில நிறுவனங்கள், தனியாரின் வீடுகள் சில இந்த வரிசையில் உண்டு. பல வருடங்களாக
இவ்விடங்களில் பெருமாளுக்கு 'மண்டகப்படி' உண்டு. பெருமாள் இவ்விடங்களில் எழுந்து
அருளி, காத்து இருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஒவ்வொரு
வருடமும் காலசந்தி முடிந்து அதிகாலை ஒரு மணியளவில் பெருமாள் திருக்கோவிலில்
இருந்து புறப்பாடு கண்டருள்வார். இவ்வாண்டு எம்பெருமானின் திருமேனிக்கு அதீத
கடினங்களை குறைக்க - மண்டகப்படி உள்ள இடங்களில் பெருமாள் இறங்கி இளைப்பாறுதல் அல்லாமல்,
ஸ்ரீபாதம் தாங்கிகளின் தோளிலேயே இருந்து, பக்தர்களுக்கு சேவை அளித்தார். இவ்வருடம்
புறப்பாடு அதிகாலை 3 மணியளவில் துவங்கியது. புறப்பாட்டின் பொது எடுக்கப்பட்ட
சில படங்கள் இங்கே.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
(ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
PS : Mylai Sri Adhi Kesavaperumal Sri Peyalwar mangalasasanam
and purappadu in another post.
Mandagappadi at Vijay Avenue
Superb coverage and explanation. We are indebted to you for your this daily service. We are learning a lot.
ReplyDeleteWhen I was in Nayakamar St West Mambalam, I had the blessings of having the divine dharshan in a residence of a devotee in Postal Colony, when Sri Parthasarathy Perumal used to go once a year to Ekkattu Thangal. Now I read the background explanation and blessed, we are. Since then, in 2012 moved to Bangalore.
ReplyDeleteExcellent write up.
ReplyDelete