To search this blog

Tuesday, January 16, 2018

Thai Amavasai purappadu 2018 ~ திருவல்லிக்கேணி தை அமாவாசை புறப்பாடு

எது நல்லது ? எது கெட்டது ?  எது உண்மை ? எது பொய் ? யாவர் நல்லவர் ? யார் கேட்டவர் ? -எவை செய்ய வேண்டியவை ? எவை செய்யக்கூடாதவை ?  - கேள்விகள் மேலும் கேள்விகள் - ஸ்ரீவைணவர்களுக்கு இது போன்ற ஐயங்கள் எழுவதில்லை. இங்கே நம் தமிழ் தலைவன் மயிலை பிறந்த ஸ்ரீ பேயாழ்வாரின் அமுத வாக்கு. 


தை மாதம் பிறந்து விட்டது.  இன்று அம்மாவாசை நாள்.  தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும்.  சூரியன் மகர இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

தை மாதப் பிறப்பு,  தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.  அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி.    உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட நம் நாட்டில் ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து, ஆறுமாதம் கழித்து அறுவடை முடித்து, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வணங்குவர். 


இன்று திருவல்லிக்கேணியிலே தை அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.



அதுநன்று   இது   தீதென்று  அய்யப்படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.

பேயாழ்வார் நமக்கு வழங்கும் அமுத அறிவுரை :  எது நல்லது, எது கெட்டது, எதை செய்ய வேண்டும் என்றெல்லாம்   ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்,  தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய (ஸ்ரீமன் நாராயணனுடைய) பொற்றாமரை மலர்ப்பதங்களையே தொழுவீராக !  அப்படி தொழும் அனைவருக்கும், எல்லா ஜென்மங்களில் செய்த பாவங்களும், உருமாய்ந்து விட்டு நீங்கி ஓடி விடும். 

Today 16th Jan 2018 is Amavasai in the month of Thai.  Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu today and here are some photos of the purappadu.


~ adiyen Srinivasa dhasan.








No comments:

Post a Comment