To search this blog

Sunday, December 3, 2017

Thirukarthigai Chokkappanai 2017 : கார்த்திகை விளக்கீடு ~ "சொக்கப்பனை ".

Today is ‘Pournami’ and  Thirukarthigai ~ today 3rd Dec 2017 being Rohini in the month of Karthigai, today marks the thiruvavatharam of Thiruppanazhvaar.

At 8 pm, Sri Parthasarathi had purappadu on the occasion of Deepa Uthsavam after lamps were lit all over the temple and in all sannadhis.  The highlight of the day is the lighting of ‘chokka panai’ – a structure made of palmirah trunk and leaves stuffed with rice bran etc., ….. people put fireworks also into this bonfire.  This symbolizes burning of bad behavior and unwanted elements ~ the lamps symbolize blossoming knowledge.

From today starts ‘ananathyayanam’ and so no purappadu for sometime.  From  midnight of today, there will be thailakappu for Moolavar and there will be no darshan of moolavar in Sri Parthasarathi temple.  In the period of ‘Anadhyayanam’ ~ Divyaprabandham and Vedas will not be recited in Temples and at homes.  This tradition is followed in all Divyadesams.    

The Adhyayana Uthsavam i.e, Pagal Pathu and Irapathu Uthsavam start on 19th Dec itself.  On the 6th day of Pagal Pathu falling on 24th  Dec 2o17,  Thirumangai Azhwar’s Thirumozhi will be recited and at the time of rendering of Sthala pasuram ‘Virperu Vizhavum Kanjanum Mallum’ – screens will be off and from then on devotees will have full darshan of Sri Venkata Krishnan, the moolavar and other moolavar idols.  

இன்று கார்த்திகை மாதம் ரோகிணி  நக்ஷத்திரம் - திருப்பாணாழ்வார் சாற்றுமுறை.  பௌர்ணமி எனவே - திருக்கார்த்திகை தீபம். திருக்கோவில், சுற்றுக்கோவில் சன்னதிகள் அனைத்திலும் திருவிளக்கு ஏற்றப்படுகின்றது.


ஒவ்வொரு திருக்கார்த்திகைக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி புறப்பாடு உண்டு.  இன்று முதல் திருக்கோவில் மூலவர்களுக்கு தைலக்காப்பு எனவே மூலவர் சேவை கிடையாது.  இவ்வருடம் பகல் பத்து 19.12 அன்று துவங்குகிறது.  24.12 (ஞாயிறு) ஆறாம் நாள் தல பாசுரம் (விற்பெரு விழவும்) சேவிக்கப்பெறும்போது மூலவர் திரை திறக்கப்பட்டு, சேவை உண்டு. 

நாம் சிறப்பாக கொண்டாடும் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இவ்விழாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு  இனிய கொண்டாட்டங்கள்  நடைபெறும்.  கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.  பனை மரத்தை இலக்கியங்கள் - , `பூலோக கற்பகவிருட்சம்’ என்று போற்றுகின்றன.



இன்றைய புறப்பாட்டின் மாற்றிய சிறப்பு  "சொக்கப்பனை ".. .. .. காய்ந்த பனை ஓலைகளால் கோபுர வடிவில் செய்து கோவில்களின் முன்னால் கார்த்திகை பண்டிகையன்று கொளுத்துவார்கள்.  இம்மரம்  திருக்கார்த்திகை தினத்தில்  ஆலயத்தின் முன்பெ  வெட்டவெளியில் நடப்படும் - பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பில் நடுவே பட்டாசு மத்தாப்புகளும்  கூட இடம் பெறும்.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டு அருளும் போது  திருக்குளம்  முன்பு  (முந்தைய யானை கொட்டாரம் இருந்த இடம் முன்பு) இந்த சொக்கப்பனை பட்டர் பெருமாள் விளக்குடன் ஏற்றப்பெறும்.  மக்கள் கூட்டமாக வந்து இதனை கண்டு களிப்பர்.  இன்றைய புறப்பாட்டின்  போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.












1 comment:

  1. மிக அருமை...தரிசித்தேன்..

    ReplyDelete