Sri:
Srimathe Raamanujaya
Namaha:
Srimath Varavara Munaye
Namaha:
The 10 day long Uthsavam
of our Greatest Acharyar ‘Swami Manavala Maamunigal” starts today (16th
Oct 2017) at Thiruvallikkeni (also in other Divyadesams). 25th
0ct 2017 (Wednes) 8th day in
the tamil month of Aippasi) would be a great day for all Thennacharya Sri
Vaishnavaites – for this day “Aippaisi Thirumoolam’ marks the birth anniversary
of Acharyar Sri Manavala Mamunigal.
Acharyar
Sri Manavala Mamunigal, the reincarnation of Adisesha, born
in Kidaram in Tamilnadu, in the year 1370 AD. His parents
named him Azhagiya manavalan, after the Lord Himself. Today it rained in
Triplicane and adiyen could not have darshan of our Acharyar in purappadu and
here are some photos of Sri Manavala Mamunigal at Holy Tirupathi (famously Kizh Thirupathi at
the foothills of Holy Thirumala)
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா ; ஸ்ரீமத் வரவர முனயே நமஹா :
இன்று 16.10.2017
- திருவல்லிக்கேணி மற்றும்
அனைத்து திவ்யதேசங்களிலும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உத்சவம்
ஆரம்பித்துள்ளது. இந்த மாதம் 25.10.2017 அன்று -
- ஐப்பசி திருமூலம் - ஆசார்யர் சாற்றுமுறை சீரிய நாள்.
ஸ்ரீ வரவரமுனி என்று கொண்டாடப்படும்
நம் ஆசார்யர் பாழ்பட்டு கிடந்த ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை
ஏற்று ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தியவர். தன்
ஆச்சாரியர் திருவாய் மொழி பிள்ளை ஆணையின் பேரில் ஆழ்வார் திருநகரியில்
ஸ்ரீராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ
விம்சதி இயற்றியதனால் யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டவர்.
** Mamunigal at Thirupathi **
நம் ஆசார்யர் அருளிச்செய்த
நூல்களிலே 'ஆர்த்தி ப்ரபந்தம்' பெருமை பெற்றது.
பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என ஸ்ரீமன் நாராயணனை புகழ்ந்தது
போல - இராமனுசனிடத்திலே மிக மிக ஈடுபாடு பெற்ற நம் பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது முதல் பாசுரத்திலேயே
'வாழி யதிராசன், வாழி
யதிராசன்,
வாழி யதிராசனென வாழ்த்துவார்*
வாழியென
வாழ்த்துவார் வாழியென வாழ்த்துவார்* தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர்
தலை **
தொழுது எழு என் மனனே என
நம் சிறப்பு வாய்ந்த யதிகட்கெல்லாம் தலைவனான ஸ்ரீராமானுஜரை வாழி, வாழி, வாழி என வாழ்த்துபவர்களின்
திருவடிகளில் விண்ணகத்து நித்யஸூரிகளும் தலை பணிவார்களாம் ~ அவ்வளவு சிறப்பு எம்பெருமானாரை
பின்பற்றும் ஸ்ரீவைணவர்களுக்கு உண்டு என்கிறார் நம் சுவாமி மணவாள மாமுனிகள்.
கீழ் திருப்பதி எனப்படும்
ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் உறையும் திவ்யதேசத்திலே
எழுந்தருளி இருக்கும் நம் ஆசார்யர் தமது சில புகைப்படங்கள் இங்கே.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
16th Oct 2017.
**** This pic credit Sri APV
Vijay
No comments:
Post a Comment