கருநாழி,
நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி ~ என்பனவற்றை கேள்விப்பட்டுள்ளீரா
? ~
when you have darshan of
Perumal of Thiruvallikkeni, do you care to look at the ornate dress, beautiful
ornaments, fascinating flower garlands, awe-inspiring Crown and more !! – do
look at this photo of Lord Sri Ranganatha and test your observation power as
you read this post.
The holy
divyadesam of Thiruvallikkeni is replete
with festivals all the time - after the grand Theppothsavam [float festival];
it was Thavana Uthsavam, Sri Rama Navami Uthsavam and now Pallava Uthsavam too started. Today 7th Apr 2017 is day 3 of Pallava Uthsvam and there was purappadu
of Lord Ranganathar in Sesha vahanam. It
was Thavana Uthsavam too for Srimannathar.
Thiruvallikkeni
is part of Thondaimandalam, associated
with Pallava dynasty. The Pallava Empire
was the largest and most powerful South Asian state in its time, ranking as one
of the glorious empires of world history. The Pallavas gained prominence after
the eclipse of the Satavahana dynasty.
Of the many Kings, Mahendravarman I
(600–630 CE) was very prominent and it was during regime, Pallavas
fougth Chalukyas – Pulikesi – the Vengi wars.
Mahendravarman was succeeded to the throne by his more famous son
Narasimhavarman I. Narasimhavarman 1
fondly known as ‘maamallan’ shared his
father’s love of art and completed the
work started by Mahendravarman in Mahabalipuram.
At Mahabalipuram besides the monumental
architecture, there are royal portraits too. One of them represents Simhavishnu (A.D. 550-580), flanked by two of
his queens, and the other - of his son
Mahendravarman (A.D. 580-630), also with two queens. Now don’t get carried away
– ‘Pallava Uthsavam’ is not associated with Pallavas or any other rulers for
that matter.
திருவல்லிக்கேணி
தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால், இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட
உத்சவம் என நினைக்க வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று
பெயர். தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம்விளங்கியது. பல்லவர்கள் தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு
தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில்
வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன்,
இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது.
பிற்காலப்
பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட
இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும்
மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன. தந்திவர்மன் (கி.பி 775-825) தென்னிந்தியாவை ஆண்ட
பல்லவ மன்னன் ஆவர் . இவன் இரண்டாம் நரசிம்மவர்மனின் மகன். இவரது கால கல்வெட்டு திருவல்லிக்கேணி திருக்கோவிலில் உள்ளது.
தமிழ் கோப்பில்
சில அர்த்தங்கள் தேடினபோது :
பல்லவம்
- இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம்
: தளிர் : தேயம்
ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.
பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க, செஞ்செவியகஞ்சம்
o நிகர், சீறடியள் ஆகி,
- கம்பராமாயணம்.
சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது
கம்பன் சொல்வது. ‘விளக்கம் மிக்க செழித்த
தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை.
Pallavam is
a period – it is the period when tender shoots spring up. During Pallava
Uthsavam, ‘Brindaranya Sthala mahimai’
is read before Sri Ranganathar at Thiruvaimozhi
mandapam inside Sri Parthasarathi Swami Temple.
After this there is periya maada veethi purappadu everyday. On Panguni Uthiram day, Pallava Uthsavam
concludes with Sri Ranganathar astride ‘kannadi Garudan’ and later there is Sri
Vedavalli Thayar Srimannathar Thirukkalyanam.
பங்குனி
உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. இந்த பல்லவ உத்சவம்
என்பது பல்லவர்கள் சம்பந்தபட்டதல்ல ! பல்லவம்
என்பது காலம். பூந்தளிர்கள் துளிர் விடும்
பருவம். ஸ்ரீ ரங்கநாதர் திருவாய்மொழி மண்டபத்தில்
எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது.
பெருமாள்
புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு அருள்வார்.
தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டு அருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று
அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர்
ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணமும் சிறப்பாக நடக்கிறது. மூன்றாம்
நாள் புறப்பாட்டின்போது எடுத்த சில
படங்கள் இங்கே : பெருமாளின் திருப்பாதங்களில் அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம். தவிர இன்று
மிக நேர்த்தியாக மாந்தளிர்களாலான பூச்சரமும் ஸ்ரீமந்நாதனை அலங்கரித்தது. படத்தில் உங்களால் கவனிக்க முடிந்ததா ?
One odd
reference to Pallavam is found in Thirumangai Azhwar in Thirumozhi ~: “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன்
பணவரங்கில்*, ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes the glory of Emperuman at Van Purudothamam
~ a divyadesam at Thirunangur (Perumal here is Sri Purushothaman) ... Azhwar
calls him the King of Kings – says the Lord ascended a Kadamba tree with plenty
of tender leaves, jumped on the hood of Kalinga
... .. .. .. .
திருமங்கை
மன்னன் 'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில் - தளிர்கள் பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல்
ஏறி, கொடியனான காளியனின் படமெடுத்த தலை மீது திடீரென்று வந்து சிக்கனக் குதித்து அருமையான
கூத்தாட்டம் செய்த தேவாதி தேவன் வாழுமிடம் என அருளுகிறார்.
Here are
some photos taken during the Pallava Uthsava Day 2 today. One can observe the just born foliage of
Mango leaves in the lotus feet of Lord Ranganathar ~ and did you observe that
beautiful looking garland of green orange tinge made of tender mango leaves ??
ஆரம்பத்தில் குறிப்பிட்ட
: கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி மற்றும் - உழக்கு, பிடி,
சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பன - பல்லவர் கால முகத்தால் அளவைகளாம் !!!
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
[
S. Sampathkumar.]
7th Apr 2o17.
No comments:
Post a Comment