To search this blog

Thursday, March 9, 2017

Thavana Uthsavam 4 - 2017 : செவிக்கின்பம் ஆவது செங்கண்மால் நாமம்

Today 7th Mar 2017 is day 4 of  Thavana Uthsavam -  Sri Parthasarathi perumal adorned Pandian Kondai and had  Sengol [the kireedam known as Pandian kondai as it replicates the one worn by Lord NamPerumal rendered to him by a Pandian King known as Sundara Pandian and the scepter worthy of an Emperor].  It was Thiruvathirai too and hence double treat – after the veethi purappadu [Nanmukhan thiruvanthathi] – inside it was Ramanuja Noorranthathi for Sri Udayavar.

Some basic Q on what sounds sweet to the ears ? – where do human beings rest ? – and does one feel like writing or singing poetry ? – who would deserve it best  - our Thirumazhisaippiran has these simple answers.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி தவன உத்சவத்தில் நான்காம் நாளான இன்று, எம்பெருமானுக்கு விசேஷமாக பாண்டியன் கொண்டையும், செங்கோலும் சாற்றின  அற்புத திருகோலம். பெரிய மாட வீதி புறப்பாட்டில் நான்முகன் திருவந்தாதி சேவாகாலம். இன்று திருவாதிரையானதால் -  கோவில் உள்ளே மணிமண்டபத்தில், உடையவர் வீற்றிருக்க இராமானுச நூற்றந்தாதி சேவை.


பேரரசர்களுக்கான செங்கோலுடன் பாண்டியன் கொண்டை அணிந்த அற்புத திருக்கோலத்தில் நம் பார்த்தசாரதி பெருமாளைக் கண்டால் கவி பாட விழையலாம் !   எம்பெருமானைத் தவிர்த்து மற்றையோரைச் கவிபாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் ஏற்றி குறைக்கவேண்டும்.  எம்பெருமான் (மட்டுமே)  கவிக்கு நிறைந்த பொருளாயிருப்பன்.  எவ்வளவு அழகாக விளக்கினாலும், அவ்வார்த்தைகள் இன்னமும் அதிகம் தகுமே ! என்பதாகவே இருக்கும்.  

திருமழிசைப்பிரான் எளிய வரிகளில் எம்பெருமான் பெருமையை நமக்கு அளிக்கிறார்.

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.


செவிக்கு இன்பம் ஆவது, புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே; இந்த பூவுலகத்திலே வசிப்பவரெல்லாரும்  நிழல்பெற ஒதுங்குவதற்கு  இடமாவதும் அத்திருநாமமே.  அற்புதமான கவிகளுக்கு எல்லாம்   நிறைந்த பொருளாயிருக்கு  எம்பெருமானை அடையப்பெற்றபின், மனமார்ந்த்து சிந்தித்தால் ~ மறை வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்எம்பெருமானே*

அடியேன் ஸ்ரீனிவாசதாசன் [திருவல்லிக்கேணி எஸ். சம்பத்குமார்]


Credits : www.dravidaveda.org / ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி  உரை





No comments:

Post a Comment