Having
celebrated the birth of Lord Krishna on 6th Sept.
2015, there is lot more to celebrate. Lord Krishna was born in every
house of His devotees; in the morning of 7th Sept, there was
purappadu of Bala Krishnan [KalingaNarthanakannan] visiting various places.
In
the evening, occurred the grand purappadu of Sri Parthasarathi, as
‘Krishna with flute’ in beautiful sitting posture on ‘Punnai tree’
[Pinnakilaivahanam]. BalaKrishnar was there in the vahanam too. On
this occasion, ‘uriyadi’ – the game of hitting the hanging object [with hidden
gifts inside] with sticks is played, specially by Yadavas, the
cowherds, the clan of Lord Krishna Himself. The game is very fierce as
the clubbing with a stick is made most tough with others fiercely
throwing water on the player. The water twirled out of cone shaped
pitchers would flow like a whip and can cause some pain too, when struck.
This is a traditional game.
Triplicane
has a fair sprinkling of Yadavas and there was grand uriyadi at the entrance of
the Temple and at Singarachari Street – Nagoji Rao Street intersection. Here
are some photos of the purappadu. One can have darshan of Lord
Krishna at the feet of Lord Parthasarathi, sitting on Punnaikilaivahanam.
கிருஷ்ணஜெயந்தி நன்னாளில் ஸ்ரீகிருஷ்ணபகவான் தன்னை அன்புடன் அழைத்த பக்தர்கள் இல்லங்களில்
எல்லாம் பிறந்து, அவர்கள் அணிவித்த புத்தாடை உடுத்தி, நம் இல்லங்களிலே தள்ளித்தளர்நடையிட்டு,
நாம் அவருக்கு சமர்ப்பித்த "செந்நெல்அரிசி சிறுபருப்புச் செய்த அக்காரம் நறுநெய்பால்";
“கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை”;
“அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில்
கலந்த சிற்றுண்டிகள்”; “நாவற்பழம் முதலான பழங்கள்' ஆகிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். நாமும்ஆனந்தித்தோம்.
இப்படியாக நள்ளிரவிலே பிறந்த கண்ணபிரான், மறுநாள்காலை – 'காளிங்க நர்த்தனனாய்" திருக்கோலம் பூண்ட
கண்ணன் தாள் பணிந்தோரை எல்லாம் தயவுடன் காப்பவன், பாலகண்ணனாக – சேஷவாஹனத்தில் புறப்பாடு கண்டு அருளினார். இப்புறப்பாட்டின் போது பக்தர்கள், கண்ணனுக்கு வெண்ணை
சமர்ப்பிக்கின்றனர்.
மாலை ஸ்ரீபார்த்தசாரதிபெருமாள் புன்னைகிளை வாஹனத்தில் எழுந்து அருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புல்லாங்குழல் ஊதும் மிக அழகிய திருக்கோலத்தில்
'ஆயர்பாடியில் ஆயர்களோடு குரவை கோத்தமாமாயன்' – புன்னைகிளைவாஹனத்தில், கூடவே பாலகண்ணனும்
எழுந்து அருள புறப்பாடு கண்டு அருளினார்.
திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாககொண்டாடுவர். சிலஇடங்களில்
'உரியடி' என்று எழுதப்பட்டாலும் 'உறியடி' என்பதே சரி. தமிழில், உரி என்கிற வினைசொல்லுக்கு, தோலைநீக்கு'
அல்லது ஒருமுகத்தல் அலகு' என்றே பொருள்படும். உறி என்ற பெயர்ச்சொல் பண்டங்கள், தயிர் போன்றவை வைக்கும் பொருட்டு தொங்கவிடும் உறி – எனவே இது உறியடி.
நாலாயிரதிவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறிபற்றி -முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல்
4). “ உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*. அடுத்த பாசுரத்தில் " கொண்டதாளுறி கோலக்கொடுமழு" என்றும்
வருகிறது. இந்த உறியடி விளையாட்டில் உயரமானகம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின்
வழியாக தேங்காய்க்குள் பரிசுபொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்கவிடப்படுகிறது. இளைஞர்கள்
தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி. பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம்
வாகாய் சுழற்றி வேகமாய் உறியடி அடிக்கவருவோர்மீது
பலர்அடிப்பர். இது சாட்டைஅடி போன்றுவிழும்.
புறப்பாட்டின்போது எடுக்கப்பட்ட சிலபடங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.
No comments:
Post a Comment