Sri AzhagiyaSingarBrahmothsavam –
Day 6 – Churnabishekampurappadu
திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம்நாள்
~சூர்ணாபிஷேகம் உத்சவம் . இன்று [1st July
2015] காலை ஸ்ரீஅழகியசிங்கர் அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.
புறப்பாட்டின்போது எடுக்கப்பட்ட சிலபடங்கள் இங்கே :
சூர்ணாபிஷேகம்சிறப்பு.: சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள்
மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு
ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு
தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.
திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்தசூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு,
பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.
திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார்
அருளிய "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்"
அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால்
ஆன பிரபந்தம் இது. இதோஇங்கேதிருமழிசைப்பிரானின்ஒருபாடல்
:
வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளுநாளதாதலால் வணங்கி வாழ்த்தென் நெஞ்சமே
ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்ததன்றியும்
மீள்விலாத போகம் நல்கவேண்டும் மாலபாதமே.
Thirumazhisaimannan
says - the days in this earthern land
pass being cut short by sword, afflicted by illness and infirmity. When death hangs low and close, the heart
should realise that goodness lies in knowing the good and serving the holy feet
of Sriman Narayana, who only can grant
us the permanence – a life without return to this earth.
Today
[1stJuly 2015] is the 6th day of Brahmothsavam at ThiruvallikkeniDivyadesam for Sri
AzhagiyaSingar. This morning after
‘Choornabishekam’, Sri ThelliyaSingar hadpurappadu in ‘Golden
Chapparam’. In the purappadu, ‘ThiruchandaVirutham’ composed by Sri
ThirumazhisaiAzhwaar was rendered. These 120 songs are categorised
under ‘viruthapaa’
– they are replete with numbers and fall under a specialized category of tamil
grammar called ‘ennadukkicheyyul’.
Some
photos taken during the morning purappadu are here.
No comments:
Post a Comment