I
have posted about Muthal Azhwargal anubhavam and the birth of Sri Peyalwar in a
well in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni). 2nd Nov 2014 was ‘Sadhayam in the
month of Aippasi’ ~ the sarrumurai of Sri Peyalwar. In the morning Sri Parthasarathi
swami had purappadu to Peyalwar sannathi, had thirumanjanam and in the evening
– it rained once again, there purappaud
of Sri Peyazhwar with Sri Parthasarathi happened rapidly in the mada veethis
without Perumal taking the offerings on the Streets.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் "உபதேச ரத்தினமாலை"யில்
:
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * -
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *
நின்றது உலகத்தே நிகழ்ந்து.
-- என சிறப்பித்தார்.
ஐப்பசி
மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில்
அவதரித்தார். ஒரு காலத்தில்
திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள்
மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.
சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள
ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய
நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார். இவர் அயோநிஜர். இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும்
வீதியில் மிக சாதரணமாகஉள்ளது.
இவர்
அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி.
முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழை நாளில் திருகோவலுரில் ஒரு இடைகழியில்
சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது,
'ஒருவர் படுக்கலாம்,இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே
"ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரையும் வரவேற்றனர்.
ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்த போது, முதலில் பொய்கைஆழ்வார்
"வையம் தகளியா, வார்கடலே நெய்யாக (உலகத்தையே
விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார். பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'
(அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களைநெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார்.
Sri Peyalwar - photo taken last year...
பொய்கை
ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது
போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார், திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து
"மூன்றாம்திருவந்தாதி" அருளிச் செய்தார்.
"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக் கண்டேன்,*
என்னாழி வண்ணன் பால் இன்று" - என நூறு பாடல்கள் பாடினார்.
பேயாழ்வாரின்
பக்தி சுரக்கும் வார்த்தைகளில் இங்கே இன்னொரு பாசுரம் :
மருந்தும்
பொருளும் அமுதமும் தானே,*
திருந்திய
செங்கண்மாலாங்கே, - பொருந்தியும்
நின்றுலக
முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம்
தாயோன் அடி.
For
us, the lotus(red) eyed Sriman Narayana Himself is the medicine; its innate
healing power; the Sweet Nectar – the power of wellbeing as well. He is one who made the Universe, swallowed,
remade, and went on to measure it, by
seeking a gift of three feet of land …..
and to Him we offer obeisance.
முதலாழ்வார்களின்
சாற்றுமுறை வைபவம் திவ்யதேசங்களில் சிறப்பாக நடை பெற்றது. திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்
ஆழ்வாருக்கு தனி சந்நிதி (தனி கோவில் என்றுசொல்லலாம்) அமைந்துள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி
கோவிலுக்கு வடக்கு பக்கம் கோவிலைஒட்டி அமைந்துள்ள வீதியில் இந்த கோவில் உள்ளதால், இந்த
தெரு "பேயாழ்வார் தெரு". இன்று காலை
[2.11.2014] ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் இங்கே
எழுந்துஅருளி திருமஞ்சனம் முதலியன கண்டு அருளி - சாயந்தரம் பெருமாள் ஆழ்வார் சேர்ந்து
புறப்பாடு கண்டு அருளினர். மாலை மழை பெய்ததான்
காரணமாக புறப்பாடு துரித கதியில் தட்டு இல்லாமல்
நடை பெற்றது.
திருப்பாற்கடலில்
(ஆதிசேஷனாகிற) சயனத்தின்மேல் பள்ளி கொண்டிருப்பவனுமான எம்பெருமானை, நாடோறும் பணிந்து
(இருக்குமவர்கள்) துக்கங்களை அனுபவிக்கமாட்டார்கள் ~ அவனது அடி சேர்ந்து இன்புறுவார்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
No comments:
Post a Comment