Today
9th Aug 2014 is a very important day for Sri
Vaishanavites. Today being Uthirada Nakshathiram in the month of Aadi,
marks the birth of a great Acharyar – Aalavandar. Known as Yamuna Muni, Yamunaithuraivar,
Alavandar was the grandson of Sri Nathamunigal and son of Ishwara Munigal and
Sri Ranganayaki.
Every
summer gives trouble not only of sweltering heat but of the water shortage to
the residents of Chennai. Though there are four reservoirs of Poondi,
Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for drinking water needs of
Chennaites, there is another important water source that supplements daily
water supply to the city and that is more than two hundreds of kilo meters
away…… it is the Veeranam lake in Cuddalore from which water is brought in by
230 km long pipeline. The lake built by Chola kings has
been in news for long - located 14 km off Chidambaram; nearer Sethiyathope – it one of the water reservoirs
from where water is planned to be supplied to Chennai. The Veeranam project, to
supply water to Chennai, was conceived in 1967; later got mired in rampant
corruption. The project's completion in
2004 was a major political victory for the AIADMK government of the time due to
the project's long history of corruption and politicking. At some point of
time, water started flowing from the lake to Chennai.
“I take you all on timemachine (in a boat) to a period aeons ago … started
a great novel written in 1950” … the wonder Ponniyin Selvan of Kalki – much happens
here – the story starts with the description ‘bounded by Chozha
kingdom and Thondai naadu, nearer Thillai Chirrambalam is a vast ocean-like
lake ……….-and on that 18th day of Aadi – a young horse rider ‘Vanthiya Thevan’
was …… ’
தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும்
இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே
இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண
ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக்
காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’
என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித்
ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய
பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப்
பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது.
ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன்
மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப
வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில்
புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.
Sri
Vaishnavaites have more to know about this lake. The Veeranam lake derived its
name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to
Srivaishnavaites. It is here that our Acharyars Nathamunigal and later
Sri Alavanthar were born. Alavanthar was born at Veeranarayanapuram (present
day Kattu Mannargudi) in Tamil Nadu. Yamunacharya was a genius – a
child prodigy known for his prowess of eka-santha – graha (remembering
forever by learning only once). He was known for his sparkling intelligence,
didactic logic and exceptional devotion to Sriman Narayanan. His
defeating a much learned Akkiyalvan is very famous. After the debate, the
Queen hailed Yamunar as 'Alavandar'-' one who came to
rule / save me'.
It
was due to the ceaseless efforts of Sri Rama Mishra (Acharyar Manakkal nambi),
the desciple of Uyyakkondar that Yamunacharyar was initiated back to the
spiritual life. Sri Rama Misrar initiated Yamuna into the ultimate truths and
passed to him the spiritual treasures bequeathed to him by Sri Nathamuni. After
the initiation, Yamuna became the leader of Visistadvaita Vedantins and settled
at the holy place of Thiruvarangam. He gave our Sampradhayam, priceless
treasure-trove of 8 works of which most important are the : Chatusloki on
Pirattiyar; Sthothra Rathinam extolling Emperuman; Sri Geethartha Sangraham,
which formed the basis for Udayavar’s Gita Bashyam. He identified and gave us the Greatest of Acharyas – ‘Sri Ramanujar’
as he spontaneously called Udayavar ‘He is the First of all [aa muthalvan
ivan]’
இன்று (9th Aug 2014) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை.
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.
நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார்.
நிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற் றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற் றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.
- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார்.
நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.
ஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் " எட்டு "" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்,
ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.
Here
are some photos taken during today’s purappadu at Thiruvallikkeni divyadesam
No comments:
Post a Comment