At
Kanchipuram, the grand Brahmothsavam of Sri Devathi Rajar is on and today [26th May 2013] is the fifth day of the
Uthsvam. At
Thiruvallikkeni and many other divyadesams also, Sri Varadharajar Brahmothsavam
is being celebrated.
On 5th
day today at Thiruvallikkeni, it was ‘Nachiyar Thirukoalam’ ~ Emperuman dressed
up as Thayar [Nachiyar]. At Thiruvallikkeni on 5th day of all
Uthsavams, ‘Thiruvirutham’ of Swami Nammazhwar is rendered by the Adyapaka goshti.
Srimannarayana-
the ever merciful Lord is always our esteemed protector. That is He is our
Rakshaka. He is glorified in the Vedas as the Supreme entity. He is "Veda
Mudalvan". The sublime beauty and oozing benevolence as exceptionally
visible in the Thirumugam [face] of Perumal – Nachiyar. A photo of Sri Varadharajar taken during Hastham thirunakshithira purappadu is also posted here to make you appreciate the beauty of 'sarrupadi alankaram'.......
இன்று வரதராஜர் உத்சவத்தில் ஐந்தாம்
நாள் ~ நாச்சியார் திருக்கோலம். சர்வலக்ஷணங்களும் பொருந்திய எம்பெருமான்
தாயராக நாச்சியார் திருக்கோலத்தில் மேலும் வாத்சல்யமும் சேர்ந்து மிக்க அழகாக பக்தர்களுக்கு
அருள் பாலித்தார்.
திருவல்லிக்கேணியில்
எல்லா பெரிய உத்சவங்களிலும் ஐந்தாம் நாள் ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவிருத்தம்'
சேவிக்கப்பெறுகிறது. ருக்வேத சாரமான திருவிருத்தம் 100 பாடல்கள் கொண்ட அந்தாதி; கட்டளைக்கலித்துறைப்
பாடல்களால் ஆனது. நம்மாழ்வார் 'பராங்குச நாயகியாய்' தம்மை பாவித்து பாடிய பாடல்கள்
இதில் உள்ளன. முதல் பாட்டில் "பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்"
மனித குலத்து குறைகளை கூறி அயர்வறுமமரர்களதிபதியான எம்பெருமானை தான் செய்யும் விண்ணப்பத்தைச் செவிதாழ்த்துக்
கேட்டருளுமாறு விண்ணப்பிக்கிறார்.
எம்பெருமானுடைய உத்தம புருஷத் தன்மையை அநுஸந்திக்கையாலே அப்பொழுதே அவனைக் கிட்ட
வேண்டும்படியான ஆசை கிளர்ந்து, ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தாமான தன்மையழந்து பிராட்டி
நிலைமையடைந்து ‘பராங்குச நாயகி’யானார். நாயகன் ஆன எம்பெருமானின்
ரூப வைலக்ஷண்யமுரைத்த நாயகியின் பாசுரம் இது:
கண்ணும் செந்தாமரை
கையும் அவை அடியோ அவையே*
வண்ணம் கரியது
ஓர் மால்வரை போன்று மதிவிகற்பால்*
விண்ணும் கடந்து
உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்*
எண்ணும் இடத்ததுவோ
எம்பிரானது எழில் நிறமே?
எம்பெருமானுடைய
திருக்கண்கள்; திருக்கைகள்; திருவடி என்னுமுறுப்புகள்
ஸாக்ஷாத் தாமரை மலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சனமாமலை போன்றுள்ளது; ஞானத்தில்
மேம்பட்ட பரமபதத்து நித்யஸூரிகளும் விவரிக்க
முடியாத அதி ரூப சௌந்தர்யம் எம்பெருமானது திருமேனியழகு.
திருவல்லிக்கேணி
உறை ஸ்ரீ வரதராஜர் கம்பீரம் மிக்கவர். அவரது அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது.
பெருமாள் தனது கல்யாண குணங்களை எல்லாம் நமக்கு அருளி, மிக அழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து
அபயஹஸ்தத்துடன் காட்சி தரும் எழில் மிகு திருக்கோலமே நாச்சியார் திருக்கோலம்; புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
No comments:
Post a Comment