Sree:
Srimathe
Raamanujaya Namaha:
Srimath
Varavara Munaye Namaha:
The 10
day long Uthsavam of our Greatest Acharyar ‘Swami Manavala Maamunigal” started
today (11th Oct 2012) at Thiruvallikkeni (so also in other
Divyadesams). 20th
October 2012 – Saturday (4th day in the tamil month of Aippasi) would be a great day for all
Thennacharya Sri Vaishnavaites – for this day “Aippaisi Thirumoolam’ marks the
birth anniversary of Acharyar Sri Manavala Mamunigal.
Acharyar Sri Manavala Mamunigal considered the reincarnation of
Adisesha, was
the son of Thikalakidanthan thirunavirudayapiran thatharannan, a disciple of
Sri Pillailokacarya, and Sriranga nacciyar. He was born in Kidaram in Tamilnadu, in the year 1370 AD. His parents named him Azhagiya manavalan, after the Lord
Himself.
Manavala mamunigal’s first work was
- Yatiraja Vimsati, twenty sanskrit stanzas in praise of Ramanuja.
Tiruvaymozhip pillai read the works and gave him the title Yatindra Pravanar. Nam Acharyar is revered under various names as “Yatheendra
Pravanar, Sri Vara Vara Muni, Mamunigal” He has
given us 19 granthams – 3 of them in Sanskrit and rest in Tamil &
Manipravalam.
On the first day of the
Uthsavam today, there was the Grand purappadu of Sri Mamunigal with Sri
Parthasarathi, beautifully adorned with ‘Pandiyan Kondai’ and Senkoal’ [Sceptre]
. Here
are some photos taken during the purappadu.
Adiyen Srinivasa dhasan.
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா ; ஸ்ரீமத் வரவர
முனயே நமஹா :
இன்று 11/10/2012 - திருவல்லிக்கேணி மற்றும் அனைத்து திவ்யதேசங்களிலும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின்
உத்சவம் ஆரம்பித்துள்ளது. இந்த மாதம்
20.10.2012அன்று [ஐப்பசி நான்கு - ஐப்பசி திருமூலம்] சாற்றுமுறை சீரிய நாள்.
ஸ்ரீ வரவரமுனி என்று கொண்டாடப்படும் நம் ஆச்சார்யர் பாழ்பட்டு கிடந்த ஸ்ரீரங்கம்
கோயில் நிர்வாகத்தை ஏற்று ராமானுஜர் காலம் போன்ற
நிர்வாகத்தை ஏற்படுத்தியவர். தன் ஆச்சாரியர்
திருவாய் மொழி பிள்ளை ஆணையின் பேரில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ
விம்சதி இயற்றியதனால் யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டவர். 1430 ஆண்டில்
ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் முன்னிலையில் -அவரது அவாவின் படி, ஓராண்டுகாலம் நம்மாழ்வார்
அருளிய திருவாய்மொழிக்கு –“6000-படி” அடிப்படையில் உபன்யாசம் நிகழ்த்தினார் . ஓராண்டு
கால இறுதி நாளன்று ஸ்ரீரங்கநாதரே சிறுவனாகவந்து
மாமுனிகளின் திறமையை பாராட்டி "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் "என்ற புகழ் பெற்ற
தனியனை நமக்கு அளித்தார். தென்னசார்ய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது இத்
தனியனே.
இவரது பல நூல்களில், உபதேச ரத்தினமாலை எனும் நூல் மிக எளிய
பாக்களில்ஆழ்வார்கள் பற்றிய அனைத்து விவரங்களையும், மற்றும் ஆச்சர்யர்கள் பற்றியும்
அழகாகஎடுத்து உரைக்கிறது.
இன்று இரவு மாமுனிகள் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுடன் சிறப்பான
புறப்பாடு கண்டு அருளினார். ஸ்ரீ பார்த்தசாரதி
பெருமாள் பாண்டியன் கொண்டை செங்கோல் உடன் அற்புதமாக சேவை சாதித்தார். அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
beautiful photos - great post - Renuka
ReplyDeleteAdiyargal Vaaza, Aranganagar vaazha; em Manavala Maamunigale Innum Oru Noorrandu irum........... Adiyen dhasan Mukundan
ReplyDelete