23rd day of Avani – 8th day of September 2012 is a day of Great significance. Today is the 8th day (Ashtami) from full moon (Pournami) and ‘Rohini’ Nakshathiram, the day of birth of Lord Krishna.
People all over celebrate this day in a manner that Lord Krishna is born in every house. They paint the footsteps of little Krishna in their houses, have the vigraha of Krishna adorn new clothes and offer choicest dishes to the Lord, many of which are referred to in the Naalayira Divyaprabandham also. Sri Periyazhwaar has sung songs celebrating all aspects from the birth of Sri Krishna, to His crawling, His toddling, requesting him to adorn ear rings; offering Him various flowers; bathing Him and more… Lots of fruits are also offered to Krishna at every home.
Bhagwan Krishna’s birth variously known as Gokulashtami, Krishna Jayanthi and more is often referred to in the South, as Sri Jayanthi. There is a notion that ‘Jayanthi’ refers to the birth date and thereby we have no. of Jayanthis !!! - Heard from Dr MA Venkatakrishnan, Head of Dept of Vaishnavism, University of Madras; a renowned scholar in Sanskrit and Vaishnavism that ‘Jayanthi’ connotes ‘muhurtham’ – among the various muhurthams i.e., the classification of time – one occurring between ‘Ashtami closer to Navami’ and on Rohini is known as ‘Jayanthi’ and it was on this muhurtham Lord Krishna was born. Because of the birth of Lord Krishna, this muhurtham also attained special significance. As Srivaishnavaites prefix ‘Sri’ with all auspicious things associated with Maha Vishnu, it became ‘Sri Jayanthi’ – hence there cannot be any other Jayanthis – the one and only Jayanthi is that of Lord Krishna. Just as the birth of Lord Rama is ‘Sree Rama Navami’ – that of Lord Krishna is ‘Sree Jayanthi’.
After the birth of Lord Krishna in the night, there was ‘Thirumanjanam’ for Lord Krishna at Sri Parthasarathi Swami Temple and in the morning of 9th Sept 2012, there was purappadu of Lord Krishna dancing atop Kalinga [the venomous snake] – in Sesha vahanam. Here are some photos taken during the morning purappadu.
இன்று [8th Sept 2012 – 23rd day of Avani] ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆன நமக்கு சீரிய நாள். மஹா விஷ்ணுவின் சிறந்த அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தவர் கண்ணபிரான்.
இன்று 'ஸ்ரீ ஜெயந்தி' என்றும் சிறப்புற கொண்டாடப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை' குறிப்பது என்பது போல - பல 'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன ! ஆனால் 'ஸ்ரீ ஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது.
"ஜெயந்தி" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்; ரோஹிணி நக்ஷத்திரத்தில் [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்தி' என்கிற முஹூர்த்ததில் ஸ்ரீ கிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார். கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீ ஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீ ராம நவமி' என்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி'. மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்தி' என கொண்டாடுதல் தகா! [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது]
கண்ணன் பிறந்த இந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லாரது இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடுகிறோம். யசோதை ஸ்ரீக்ருஷ்ணருடைய திருப்பா தங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் இட்டு கண்ணனை கொஞ்சி சீராட்டி வளர்த்தாக பெரியாழ்வார் பாடியுள்ளார். அந்த குழந்தை கண்ணன் நம் இல்லங்களுக்கு தவழ்ந்து தளர் நடையிட்டு வரும் அனுபத்தை ரசித்து, இல்லங்களில் கண்ணனின் திருப்பாதங்களை வரைந்து, பூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும் பக்ஷனங்களையும் படைத்தது நாம் கொண்டாடுகிறோம்.
பெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்" என - செந்நெல்லரிசியும், சிறு பயற்றம்பருப்பும்; காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்; மணம் மிக்க நெய்யும்; பாலும் ஆகிற இவற்றாலேயும் "கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை" எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார். தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது.
பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து, வாழ்ந்து, நாம் அறிவு பெற நல்லமுதமாம் 'ஸ்ரீ பகவத் கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளை பற்றியவருக்கு, நிர்ஹேதுக க்ருபை உடையவனான எம்பெருமான் எல்லா நலன்களையும் தானே அளித்து, நம்மை பாதுகாப்பார்.
எம்பெருமான் திருவடிகளே சரணம்; ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் [ஸ்ரீ சம்பத்குமார்]
very nice narration Sampath
ReplyDeleteadiyen
Narasimhan
Sir, excellent to know about perumal and so good photos - Mridula
ReplyDeleteDear Sampath Sir
ReplyDeleteExtremely well written - so much informative and thanks for the superb photos of Bala Krishnar........ Praveena