To search this blog

Saturday, December 17, 2011

Arulmigu Maayappiraan Thirukovil – Kuttanattu Thirupuliyur.

Of the 108 Divyadesams sung by Azhwaars and reverred by Sri Vaishnavaties, 13 are situated in Kerala and known as “Malai Nattu Divyadesangal” – one amongst them is Thiru Puliyur – situate closer to Chengannur.  It is around 126 kilometers away from Thiruvananthapuram on way to Cochin and as you travel from Chennai – after Ernakulam, comes Thirupunithura, Kottayam, Chenganacheri, Thiruvalla – then the Railway Station of Chenganoor.

This divyadesam is closer to Changanoor.  This is a divadesam sung by Thirumangai Azhwaar and Nammazhwaar.  Locally it is known as a temple dedicated to Lord Krishna.  

There are a few steps to be ascended at the entrance and on top we have darshan of Lord Mahavishnu in reclining posture.  Inside, in typical Kerala style is the big temple – with dwajasthambam and a narrow entrance.  

Lord Krishna known as ‘Mayappiran” is in standing posture.  The Gopuram is a single vimana style tiled rounded structure.

Here are some photos taken from outside the temple.

குட்டநாட்டு திருப்புலியூர் மாயப் பிரான்  திருக்கோவில்

மலைநாட்டு திவ்யதேசங்கள் என வழங்கப்படுபவை பதின்மூன்று -குட்டநாட்டு திருப்புலியூர் என வழங்கப்படும் இத்திருக்கோவில் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி வரும் பாதையில் சுமார் 126 கி.மீ தொலைவில் உள்ளது.  சென்னையில் இருந்து இத்தலம் சுமார் 800    கி.மீ தொலைவில்  உள்ளது. எர்ணாகுளம்,  கோட்டயம்,  செங்கணாச்சேரி,  திருவல்லா, கடந்து - செங்கண்ணூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு இறங்கி இத் திவ்யதேசத்துக்கு செல்லலாம். 

திருமங்கை மன்னனும் நம்மாழ்வாரும் மங்களாசாசனம் பண்ணிய திருத்தலம் இது.  நம்மாழ்வார் காலத்தில் இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்திருக்க வேண்டும்.  இவ்வூர் குட்டநாடு  என்று அறியப்படுகிறது.   

திருக்கோவில் வாசலில் சில படிகள் உள்ளன. முகப்பில் சயனித்த
திருக்கோலத்தில் மஹா விஷ்ணு சேவை சாதிக்கிறார். படிகள்  ஏறி சற்று
நடந்து  த்வஜஸ்தம்பத்தை காணலாம்.  கேரளா பாணியில் குறுகிய படிகள் வழியாக உள்ளே சென்றால் - ஒற்றை கும்பமும், குவிந்த வடிவமைப்புமாக பல ஓடுகளுடன் கூடிய அழகான விமானம் உள்ளது.  இவ்விமானம் புருஷோத்தம / புருஷஸுக்த விமானம் எனப்படுகிறது.   சன்னதி உள்ளே  பெருமாள் கண்ணன்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில்அருளுகிறார்.  சப்தரிஷிகள்  "ஸ்ரீமன்   நாராயணனே தேவதைகளுக்கு எல்லாம் உத்தமன்" என பரதேவதா நிர்ணயம் செய்யுமாறு கிருஷ்ணர் - மாயப்பிரான் என ப்ரத்யக்ஷம்   ஆனதாக
ஐதீஹம்.  சப்த ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள். மற்ற அனைத்தும் மாயை என வழிபாடு செய்ய,  பெருமாள் மாயப்பிரானாக காட்சி அளித்த திருத்தலம் இது.

இத்தலத்து திருக்கோவிலை, பீமன் ஜீர்னோத்தாரணம் செய்தாராம்.
திருமங்கை ஆழ்வார் தனது "சிறிய திருமடலில்" ` ~~~~~~  "பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்" எனவும் நம்மாழ்வார்  திருவாய்மொழி எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழியில் பத்து பாடல்கள்  - மங்களாசாசனம் செய்துள்ளனர்.   கருமாணிக்க மலைமேல் எனும் பத்தில் - நம்மாழ்வார் - 'செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்; சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப்புலியூர்" எனவாரெல்லாம் பாடியுள்ளார்.
திருவாய்மொழி 8-9-10 :
அன்றி மற்றோர் உபாயமென், இவளந்தண்துழாய் கமழ்தல்*
குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி*
தென்திசைத் திலதம்புரை குட்டநாட்டுத் திருப்புலியூர்*
 நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே (3545)  - என

மாபெரும் மணிகள் பதிக்கப்பட்டு குன்றம் போல் உயர்ந்தோங்கும் மாளிகைகளின் நடுவில் எந்நேரமும் பக்தர்களின் கூட்டம் நிறைந்திருக்க தென்திசைக்கு திலகம் போல் விளங்கும் குட்டநாட்டுத் திருப்புலியூரில் துளசிமாலையின் மனம் கமழ நின்றிருக்கும் மாயப்பிரானுக்கு என் உள்ளம் நேர் படுவதைத் தவிர இதற்கு வேறு என்ன வழி இருக்கக்கூடும் என்று நம்மாழ்வாரால் திருப்பாசுரம் பெற்றது  இந்த திவ்யஸ்தலம்.  


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்





View of temple from the road



Close up view of the Gopuram (Maha Vishnu)

 The path leading to dwajasthambam

 View of dwajasthambam and entrance

Dwajasthambam

Sannathi - view from the back side

 Vimanam 

No comments:

Post a Comment