Ocimum Sanctum - is very important and divine one for Sri Vaishnavaites. Yes this is what we commonly worship as "Thulasi" . Tulsi, Thulasi, Holy basis is an aromatic plant in the family of Lamiaceae which is native throughout the Old World tropics and widespread as a cultivated plant. It is an erect, much branched subshrub 30-60 cm tall with hairy stems and simple opposite green leaves that are strongly scented. Leaves have petioles, and are ovate, up to 5 cm long, usually slightly toothed. Flowers are purplish in elongate racemes in close whorls. There are two main morphotypes cultivated in India —green-leaved (Sri or Lakshmi tulsi) and purple-leaved (Krishna tulsi). Tulsi is cultivated for religious and medicinal purposes, and for its essential oil. It is widely known across South Asia as a medicinal plant and an herbal tea, commonly used in Ayurveda, and has an important role within the Vaishnavite tradition of Hinduism, in which devotees perform worship involving Tulsi plants or leaves. Srivaishnavaites traditionally use japa malas made from tulsi stems or roots, which are an important symbol of initiation. Tulsi malas are considered to be auspicious for the wearer.
ஸ்ரீ வைஷ்ணவ கோவில்களுக்கு சென்றால் - பெருமாள் தீர்த்தம், திருத்துழாய் மற்றும் ஸ்ரீ சடகோபம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஸ்ரீமன் நாராயணனை தொழும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு துளசி மிகவும் முக்கியமானது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை "திருத்துழாய்" என தொழுவர். துளசி மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. பெருமாளுக்கு மிகவும் உகந்தது இது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு. இதன் வேறு பெயர்கள் : துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி. இதன் இனங்கள் : நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
துளசி செடி வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், இவற்றில் நன்கு வளரும். கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். இதன் இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் பல இடங்களில் திருத்துழாய் சிறப்பாக போற்றப்பட்டுள்ளது. "திருத்துழாய் தாரார் நறுமாலை" - சிறிய திருமடல் ; "மிக்கசீர்த் தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே" -(எம்பெருமானுடைய திருவடியிணைகளிலே பரம பாகவதர்கள் ஸமர்ப்பித்த திருத்துழாய் மலர்களின் பரிமளம்) - திருமங்கை மன்னனின் திருமொழி.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
**********************************************************************************
இதோ இங்கே இன்றைய தினமலர் பத்திரிகையில் இருந்து ஒரு செய்தி :
கும்மிடிப்பூண்டியை அடுத்த குக்கிராமத்திலிருந்து, திருப்பதி ஏழுமலையானை அலங்கரிக்கத் தேவையான துளசி, திருமலைக்கு தினந்தோறும் பயணித்து வருகிறது. பெருமாளுக்கான இந்த கைங்கர்யத்தை, கடந்த 18 ஆண்டுகளாக ஒரு தம்பதியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சிவனுக்கு உகந்தது வில்வம்; பெருமாளுக்கு உகந்தது துளசி. ஆழ்வார்களால், "திருத்துழாய்' என பக்தியோடு அழைக்கப்படும் துளசியை, தாயாராகவே பாவித்து வைணவர்கள் போற்றுகின்றனர். பெருமாளின் மார்போடு ஒன்றி, அலங்கரித்து அவரின் மன(ண)ங்கவர்ந்த துளசி, வைணவத் திருத்தலங்களில் தவறாது வழங்கப்படும் பிரசாதமாகவும் உள்ளது. திருமலை வெங்கடாசலபதியை அலங்கரிக்க தேவையான துளசி, சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குக்கிராமத்தில் இருந்து தினந்தோறும் பயணித்து வருகிறது.பெருமாளுக்கான இந்த புனித கைங்கர்யத்தை 18 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருபவர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் - மாரியம்மாள் தம்பதியினர்.
தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் துளசி பயிரிட்டு, அவற்றை புனிதத்தன்மையோடு, பக்குவமாய் பராமரித்து அறுவடை செய்து, திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினமும் அனுப்பி வருகிறார் சீனிவாசன்.ஏழுமலையானை சென்றடையும் துளசி என்பதால், பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை, அனைத்தையும் தன் கைப்படவே சீனிவாசன் செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின், அவரது மனைவி மாரியம்மாளும் இந்த கைங்கர்யத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.தினந்தோறும் மாலை 5 மணிக்கு அறுவடை செய்யப்படும் துளசியை ஈர கோணியில் சுற்றி, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கோயம்பேடு எடுத்துச்செல்லும் சீனிவாசன், அங்கிருந்து திருமலை செல்லும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து பஸ்சில், துளசியை ஏற்றி அனுப்பி வைக்கிறார்.
கடந்த 18 ஆண்டுகளாக, கடும் பனி, மழை பொருட்படுத்தாமல், நாள் தவறாமல் தன் சேவையை தொடர்ந்து வரும் சீனிவாசன், தினமும் 50 கிலோ துளசியை திருமலைக்கு அனுப்பி வைக்கிறார். பயிர்களின் பராமரிப்புக்கு என்று ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாய் செலவிடும் சீனிவாசன், திருமலைக்கு அனுப்பும் துளசிகளுக்கு கணக்கு பார்க்காமல், கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு சேவையை தொடர்ந்து வருகிறார்.அவரை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு வேளாண்மைத் துறை 6,000 ரூபாய் மானியம் வழங்கியது. சீனிவாசனின் சேவையை பாராட்டும் அப்பகுதி மக்கள், அவரை இன்னொரு ஆழ்வாராகவே பெருமையோடு போற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment