For a Srivaishnavaite visiting Divyadesams and
having darshan of Emperumans in these places are of utmost importance. For Sri Vaishnavaites, the word Kovil, Thirumalai, Perumal Kovil would
refer to “Sri Rangam, Thirumala Tirupathi and
Kanchipuram” respectively.
The sacred
and most reverred temple of Sri Venkateswara is located on the seventh peak –
Venkatachala hill of Tirumala. The Lord
stands tall as bestower of all boons and lakhs of people reach here to have a
glimpse – a few seconds darshan of the Lord.
This beautiful temple in its present form owes a lot to the works of the
greatest Vaishnava Acharya – Sri Ramanujar.
Now there
are lots of facilities in the hill and the roads are very well laid. The transportation is at its best as there
are buses at almost every 5 minutes from the foothill to the top – the abode of
Lord. In olden days, people used to
climb the hill afoot which was arduous.
Sri Udayavar (Ramanujacharya) used to climb the hill on his knees
reverring the sacredness of the hill itself.
There are
now 3550 steps and for a healthy person would take around 4 hours to climb the
hill. The footsteps in most places are
well covered and there are shops which make available things to the pilgrims. The Tirumala Temple Devasthanam has also made
good arrangements which include taking care of the luggage of the devotees who
ascend the hill on foot. The baggage
deposited at Alipiri is carried free of cost and the ones deposited at the foot
of the hill can be collected at the top.
Also there are arrangement for issuance of tokens facilitating special
darshan for them. On the way stands a
deer park which attracts people. At any point of time, you can see thousands of
people climbing the hill by foot – the pilgrims include children, youth, old
people and those with some disabilities – all in the faith and wanting to have
darshan of the Lord Srinivasa climb happily singing paeans in praise of the
Lord and speaking of the greatness of the Lord.
At the
starting point, a huge statute of Garuda azhwar stands. There is Raja gopuram, Mysore gopuram, Gali
gopuram, tall statute of Prasanna Aanjaneya,
steep steps known as Mokali mitta (literally breaker of knees). On the way, TTD has installed statues
describing the Dasavatharam – 10 avatars of Lord as also that of Azhwars who
have sung about the divyasthalam. Near
the Mokali mitta stands a temple of Ramanuja charya. Legend has it that he took rest at this
particular place, when he was climbing the hill on his knees.
Here are
some photos taken recently when I had the great fortune of climbing the divine
hill by foot.
Adiyen Srinivasa dhasan.
********************************************************************************************
ஸ்ரீ
வைஷ்ணவர்களுக்கு "திருமலை" என்றால்
திருவேங்கடமுடையான் உறையும் திருவேங்கடம் என்பதுவே !.... திருமங்கை ஆழ்வார் தமது திருமொழியில் :
பேசுமின்
திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார்
தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாசமாமலர்
நாறுவார் பொழில் சூழ்தரும் உலகுக்கு எல்லாம்
தேசமாய்
திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே.
-
என்று
திருமலைக்கு சென்று உய்வு அடையுமாறு வழி காட்டுகிறார்.
திருவேங்கடமுடையானின்
திவ்ய தேசம் 'கலி யுகத்தில் கண் கண்ட தெய்வமாய் அருள்கள் அனைத்தையும் தரும் சிறந்த
இடமாய் திகழ்கிறது. மழையோ, வெயிலோ, குளிரோ பாராமல் இங்கே குவியும் பக்தகோடிகள் எம்பெருமானின்
சில வினாடி தர்சனம் பெற ஓடோடி வருகிறார்கள்.
திருப்பதி என்பது மலைக்கு கீழே உள்ள பகுதியையும் திருமலா என்பது திவ்யமான திருமலையையும்
குறிப்பதாக கொள்ளலாம். இந்த திவ்ய தேசம் ஏழு
மலைகளுக்கு நடுவே சிறப்புற மிளிர்கிறது.
"ஸ்ரீ
சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்" என
பாடப்படும் திருமலையில் உள்ள மலைகள் : சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி,
வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என ஏழு சிகரங்கள்.
சென்று
சேர் திரு வேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம் வினை
ஒயுமே! - திரு வேங்கடவனை காண திருமலை நடந்து ஏறி சென்று தரிசனம் செய்தல் மிக புண்ணியம். சுமார் ஐம்பது வருடங்கள் முன்பு கூட திருமலைக்கு
செல்வது சற்று கடினமானதாகவே இருந்து வந்தது. அந்நாட்களில் பஸ் வசதி குறைவு. மேலும்
ஏறிச் செல்வதற்கும் இறங்குவதற்கும் ஒரே வழிதான்.
இன்றைய நிலைமை வேறு. மிக எளிதாக பல வாகனங்கள் செல்கின்றன.
சில
வருடங்கள் முன்பு வரை, திருமலையில், கோவில் அருகே பல மடங்களும் தங்கும் விடுதிகளும்
இருந்து வந்தன. இப்போது அவை அங்கு இருந்த தடயம் கூட இல்லை. இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில்
கூட ஒரு தடவை, நாங்கள் கோவில் வாசல் மிக அருகே கற்பூரம் ஏற்றும் ஸ்தம்பம் முன்பு இருந்த
விடுதில் தங்கி உள்ளோம். அப்போது மேடாக இருந்த இடமெல்லாம் கூட துடைத்தாற்போல் கட்டிடங்கள்
இருந்த சுவடே இல்லமால் மாறி உள்ளன.
திருமலை
அவ்வளவு இயற்கை அழகும், வளமும் கொண்ட ஒரு அற்புத பிரதேசம். அடர்த்தியான வனம் - அங்குள்ள
மரங்களும், மலை அமைப்பும், ஆங்கங்கே சல சலவென பிரவகிக்கும் அருவிகளும் ரம்மியமானவை. முன்பு மிக கடினமாக இருந்த மாலை பாதை இப்போது ஓரளவுக்கு
சுலபமாக பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அலிபிரி எனும் மலை அடிவாரத்தில் கருடாழ்வார் பிரம்மாண்டமாய் நிற்கும் இடத்தில் இருந்து திருமலையை அடைய சுமார் 3550 படிகள் ஏற வேண்டும். பலவிதமான பக்தர்கள் - வெவ்வேறு ஊர்களில் இருந்து
வருபவர்கள், குழந்தைகள் முதல் முதியோர் வரை பல பிராயத்தினர் வேங்கடவனை காண வேண்டி நடந்து
வருகின்றனர். சாதரணமாக நான்கு மணி நேரங்களில் மலை ஏற இயலும்.
அலிபிரி
அருகே தேவஸ்தானம் அலுவலகம் உள்ளது. இங்கே பக்தர்கள் தங்கள் இடம் உள்ள மூட்டைகளை ஒப்படைத்து விட்டு கஷ்டமில்லாமல் மலை ஏறலாம்.
பல ஊர்களில் இருந்து பன்மொழி பேசுவோர் மலை ஏறுகின்றனர். திருவேங்கடவனின் பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும்
அவனை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி அவனருள் வேண்டி நெஞ்சுருக ஆயிரகணக்கானோர் மலை
ஏறுகின்றனர்.
பண்டெல்லாம்
வேங்கடம் என ஆழ்வார் பாடிய இத்திருக்கோவில் ஏறும் வழியில் சரித்திர நிகழ்வுகளும், அவற்றை
விளக்கும் பெயர் பலகைகளும் உள்ளன. ஏறும் வழியில்
- கருடாழ்வார், ராஜ கோபுரம், மைசூர் கோபுரம், காலி கோபுரம், விஸ்வரூப பிரசன்ன ஆஞ்சநேயர்,
விஷ்ணு பாதம், முழங்கால் முறிச்சான் என பல
இடங்கள் உள்ளன. அழகான மான்கள் பூங்கா உள்ளது.
பல கடைகள் உள்ளன. ஒன்றிரண்டு இடங்களில் நடக்கும் பாதை இறங்கி வரும் பஸ் பாதையில் அமைந்து
உள்ளதையும் காணலாம்.
தசவாதார
சிலைகள் அழகாக உள்ளன. மேலும், திருமலை பெருமாளை
மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களின் சிலைகளும்
- அவர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. சுமார்
2900 படிகள் ஏறியதும் முழங்கால் முறித்தான்
என்ற இடம் உள்ளது. நமது ஒப்பாரிலாத இராமானுஜர் திருமலையை தமது முழங்கால்கள் தவழ ஏறி வந்து,
இவ்விடத்தில் இளைப்பாறியதால் இப்படி பெயர் சிறப்பு பெற்றது இவ்விடம். இங்கே உடையவருக்கு
விஜய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.
இப்போது
நடந்து வரும் பக்தர்கள் திருவேங்கடமுடையனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு
உள்ளதால் அவர்கள் தனி வரிசையில் பெருமாளை சேவிக்க
இயல்கிறது.
விநா வேங்கடேசம்
ந நாதோ ந நாத ; சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச
ப்ரசீத ப்ரசீத ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
:
வேங்கடேசனைத்
தவிர வேறு தலைவன் இல்லை! வேறு தலைவன் இல்லை! எப்போதும் வேங்கடேசனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்! நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
நிகரில்
அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை அடைந்தார்க்கு எல்லா சிறப்பும் கிடைக்கும்
என்பது திண்ணம்.
அடியேன்
- ஸ்ரீனிவாச தாசன்.
|
To search this blog
Saturday, November 20, 2010
Ascending Thirumala by foot and worshipping Lord Srinivaasa
Subscribe to:
Post Comments (Atom)
Sampath Anna....thanks for the fantastic write up....true guide for those who are visiting Thirumala
ReplyDeleteEven though I visited Tirupathi many times, the information provided by you is excellent.
ReplyDeleteLong live Lord Balaji's Name and Fame and beauty of Seven Hills...
Om Namo Narayana !!!
Sir My name is venakatakrishnan I am very much touch by your postings in this blong. I have a request to make... I have read the Parthasarthy swami Suprabatham when I was young. I lost that book while shifting house 10yrs back I couldnt get that. Please post a copy of that so that I can take a printout and read.. I made request in many sites.. they are submitting sri venkatesa suprabatham which is different from sri parthasarthy suprabatham of tiruvallikeni.. It would be a great help for many who dont know about the suprabatham... Thanks a lot for your spritual work.
ReplyDeletedear sampath,
ReplyDeletethis is such a motivating article. i realise that one must not miss a trip up the Ezhumalai on foot when there is still strength left in the body.
the pictures are guiding.
keep writing.
Dear Venkatakrishnan, I do have a copy of Sri Parthasarathi Suprabatham. In some time, i can scan and send it to you. Please provide your e mail id. - Sampath
ReplyDelete