To search this blog

Sunday, March 28, 2010

THIRUVALLIKKENI SRI MANNATHAR PALLAVA UTHSAVAM







திருவல்லிக்கேணியில் இப்போது பல்லவ உத்சவம் நடக்கிறது.  ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு கண்டு அருளுகிறார்.

திருவல்லிக்கேணி தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால் , இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட உத்சவம் என நினைக்க வாய்ப்பு  உள்ளது.  சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர்.    தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம்விளங்கியது.  தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை  ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.  இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றிப் பாரசீகம்,  ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். தந்திவர்மன் (கி.பி 775-825) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன்  ஆவர் .  இவன் இரண்டாம் நரசிம்மவர்மனின் மகன்.  இவரது கால கல் வெட்டு திருகோவிலில் உள்ளது.

தமிழ் கோப்பில் சில அர்த்தங்கள் தேடினபோது :
****   பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம் 
****   ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.
****    பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.
****     பஞ்சி ஒளிர்விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க,  செஞ் செவிய கஞ்சம் நிகர்சீறடியள் ஆகி,  -  கம்ப   ராமாயணம்.  
****  சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.  ‘விளக்கம்  மிக்க  செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை.

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. இந்த பல்லவ உத்சவம் என்பது பல்லவர்கள் சம்பந்தபட்டதல்ல !  பல்லவம் என்பது காலம். பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீ  ரங்கநாதர்  திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கபடுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளு  முன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கல்பூர ஆர்த்தி கண்டு  அருள்வார்.  தினமும் ஸ்ரீ ரங்கநாதர் பெரிய வீதி புறப்பாடு கண்டு அருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருட  சேவையும் பிறகு ஸ்ரீ ரங்கநாதர்  ஸ்ரீ வேதவல்லி தாயார் திரு கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.  மூன்றாம்  நாள் புறப்பாட்டின் போது எடுத்த  சில படங்கள்  இங்கே : பெருமாளின் திருப்பாதங்களில் அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.  

அடியேன்  ஸ்ரீனிவாச தாசன்














2 comments:

  1. பெருமாளின் புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
    பகிர்தலுக்கு நன்றி..

    ReplyDelete
  2. Madam, Thank you. In case you want high resolution photos taken by me, please do let me know. I will mail them to you.

    ReplyDelete