Monday, May 10, 2010

இன்று முதல் தமிழ் பாடம், [First Tamil lesson today or is it tamil lesson from today]


தலைப்பில் ஒரு கால் புள்ளியிட்டால் இரண்டு அர்த்தங்கள் தொக்கி நிற்கும.  ஒன்று இன்று ஆரம்பித்து தமிழ் பாடம் மற்றது இன்று முதலாம் பாடம். தமிழ் கற்று கொடுக்கும் அளவு எனக்கு தெரியாது ஆனால் ஆர்வத்தின் காரணமாக, வலை உலகில் தேடி, அங்கங்கே படித்ததில் பிடித்ததை எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இது முதல் முயற்சி.  மொழி தேடலில் ஒரு சிறிய இனிய ஆரம்பம். 

 தமிழ் இலக்கணம் மிகவும் கடினமானது என பள்ளி நாட்களில் சரியாக பயிலாமல் விலகி இருந்து விட்ட பல மாணக்கர்களில் ஒரு சிலருக்காவது மறுபடி வாய்ப்பு கிடைத்தால்  அறிந்து கொள்ள ஆர்வம் வரலாம்.  அப்படிப்பட்ட உங்களில் ஒருவனின் ஒரு சிறிய முயற்சி இது.  மொழியை கற்பதோடு அல்லாமல் பிழையின்றி எழுவதற்கும் இலக்கணம் அவசியமாகிறது.  

மொழி:
ஒருவர் தமது கருத்தை பிறரிடம் பகிரிந்து கொள்ள உதவும் கருவியே மொழிஅங்ஙனம் பகிர்தல் இரண்டு வடிவங்கள் பெரும்அவைவரி வடிவம்ஒலி வடிவம்.
ஒலி – ஒருவர் பேசுவதால் உண்டாகும் ஓசையே ஒலி.
அவ்வோசைக்கு கொடுக்கப்படும் வரி வடிவமே எழுத்து.
தமிழ் எழுத்துக்கள்:
உயிர் எழுத்துக்கள் (12), மெய் எழுத்துக்கள்(18), உயிர்மெய் எழுத்துக்கள்(216), ஆய்த எழுத்து(1) ஆக 247 எழுத்துக்கள்.
உயிர் எழுத்துக்கள்:
தமிழ் மொழிக்கு உயிர் நாடியாய் விளங்கும் அ’ முதல் ஔ’ வரையிலான எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள்ஓசையின் மூல காரணமாய் விளங்குவதாலும் இவை உயிர் எழுத்துக்கள் எனப்பட்டன.
இவற்றுள்  – ஆகிய குறுகிய ஓசை உடைய எழுத்துக்களை குறில்எழுத்துக்கள் என்பர்.
 – ஆகிய நெடிய ஓசை உடைய எழுத்துக்களை நெடில்எழுத்துக்கள் என்பர்.
மெய் எழுத்துக்கள்:
உயிர் இல்லாத உடம்பு(மெய்ஆற்றலற்றதுஅது போல்தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமலும் உயிர் எழுத்துக்களின் துணை கொண்டு இயங்கும் எழுத்துக்கள் ஆதலில் இவை மெய் எழுத்துக்கள் எனப்பட்டனஇதனை ஒற்று எழுத்து என்றும் அழைப்பர்.
உயிர்மெய் எழுத்துக்கள்:
உயிர் எழுத்து பனிரெண்டும்மெய் எழுத்து பதினெட்டும் சேர்ந்து உருவாகும் 216 எழுத்துக்கள்உயிர்மெய் எழுத்துக்கள்.
.டுக்  .
ஆய்த எழுத்து:
 – இதுவே ஆய்த எழுத்து.   (http://tamilgrammer.wordpress.com/)
   
ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது ொல் எனப்படும்
.காவீடுகண்போ 
சொல்லின் வகைகள்   :   
பெயர்ச்சொல் 
வினைச்சொல் 
இடைச்சொல் 
உரிச்சொல் 

பெயர்ச்சொல் :   
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்பொருள்இடம்காலம்சினைகுணம்தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்ஆதலால் பெயர்ச்சொல் 

பொருட் பெயர் 
இடப் பெயர் 
காலப் பெயர் 
சினைப் பெயர் 
பண்புப் பெயர் 
தொழிற் பெயர் 
என்று ஆறு வகைப்படும்

பொருள்இடம்காலம்சினைகுணம்தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு அன்றும்பொருள் முதலாறு என்றும் கூறுவர்

பொருட்பெயர் மனிதன்பசுபுத்தகம் 
இடப்பெயர் சென்னைதமிழகம் 
காலப்பெயர் மணிநாள்மாதம்ஆண்டு 
சினைப்பெயர் கண்கைதலை 
பண்புப்பெயர் இனிமைநீலம்நீளம்சதுரம் 
தொழிற்பெயர் படித்தல்உண்ணல்உறங்குதல் 

இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டுஇவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்

1. இயற்கைப் பெயர்கள் 2. ஆக்கப் பெயர்கள் 
1. இடுகுறிப் பெயர்கள் 2. காரணப் பெயர்கள் 
1. சாதாரண பெயர்கள் 2. பதிலிடு பெயர்கள் 
1. நுண்பொருட் பெயர்கள் 2. பருப்பொருட் பெயர்கள் 
1. உயிர்ப் பெயர்கள் 2. உயிரில் பெயர்கள் 
1. உயர்திணைப் பெயர்கள் 2. அஃறிணைப் பெயர்கள் 
1. தனிப் பெயர்கள் 2. கூட்டுப் பெயர்கள் 

வினைச்சொல் 

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும்முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும்முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்

முற்று இருவகைப்படும்அவை 

1.தெரிநிலை வினைமுற்று 
2.குறிப்பு வினைமுற்று 

எச்சம் இரண்டு வகைப்படும்அவை 

1.பெயரெச்சம் 
2.வினையெச்சம் 

தெரிநிலை வினைமுற்று 

செய்பவன்கருவிநிலம்செயல்காலம்செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும் 

கயல்விழி மாலை தொடுத்தாள் 


குறிப்பு வினைமுற்று 

பொருள்இடம்காலம்சினைகுணம்தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றிசெய்பவன்கருவிநிலம்செயல்காலம்செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று 
ஆகும்

அவன் பொன்னன்

எச்சம் 
பெயரெச்சம் 

பெயரெச்சம் என்பதுபெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்றமுற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும்பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம்குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்

படித்த மாணவன் 


வினையெச்சம் 

வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்றமுற்றுபெறா வினைச் சொற்கள் ஆகுமவினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்

படித்துத் தேறினான் 


இடைச்சொல் 

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது

 முதலிய வேற்றுமை உருபுகளும்போலஒப்ப முதலிய உவம உருபுகளும் 
என்னும் சுட்டுக்களும்யா முதலிய 

வினாவெழுத்துக்களும்; `உம்முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று 
கூறப்படும்

மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும்இடை நிலைகள்சாரியைகள்விகுதிகள்தமக்கெனப் பொருளையுடைய மற்றுதான் முதலியனவும் 
இடைச்சொற்களாகும்

அவன்தான் வந்தான் 
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும்பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்
உரிச்சொல் இருவகைப்படும் 

1.ஒரு பொருள் குறித்த பல சொல் 
2.பல பொருள் குறித்த ஒரு சொல் 


ஒரு பொருள் குறித்த பல சொல் 

சாலப் பேசினான்
உறு புகழ்
தவ உயர்ந்தன
நனி தின்றான்
இந்நான்கிலும் வரும்சாலஉறுதவநனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன

பல பொருள் குறித்த ஒரு சொல் 

கடிமனை காவல் 
கடிவாள் கூர்மை 
கடி மிளகு கரிப்பு 
கடிமலர் சிறப்பு 
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் காவல்கூர்மைகரிப்புசிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும் 

பொருள் இலக்கணம் 

பொருள் இரண்டு வகைப்படும்அவை

அகப்பொருள் 

புறப்பொருள் 

நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம்பொருள்வீடு ஆகிய (இன்பம் ஒழிந்தமூன்று பேறுகளை பற்றியும் கூறுவது அகப்பொருள் எனவும்அறம்பொருள்வீடு ஆகிய (இன்பம் ஒழிந்தமூன்று பேறுகளை தவிர்த்து கொடைபுகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்

முதல் படம் பெரிய பாடம் ஆகிவிட்டது.  பின்னர் தொடர்வோம்.

அன்புடன் - தமிழ் ஆசையுள்ள ஸ்ரீனிவாசன் சம்பத்குமார் 

No comments:

Post a Comment