Thursday, May 6, 2010

Sree Parthasarathi Brahmothsavam 2010

அன்பர்களே 

இந்த பதிவு ஸ்ரீ வைஷ்ணவத்தையும் கோவில்களையும் தெரிந்துகொள்ள ஆர்வம் மட்டும் உள்ள ஆனால் பல விஷயங்கள் தெரியாதவர்களுக்காக அடியேனின் சிறு முயற்சி

திருவல்லிக்கேணி எனும் திவ்ய தேசம் ப்ருந்தாரண்யா ஷேத்ரம் அதாவது துளசி வனம் என வடமொழியில் பெயர்.சுமதி என்கிற மன்னன் திருவேங்கடமுடையானை தரிசனம் செய்து 
வந்தான்பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு
 மிகுந்த பிரேமைஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டான்.  சுமதி மன்னனுக்காக  ஸ்ரீ கிருஷ்ணர், பாரத போரில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்த திருகோலத்தில்சேவை சாதித்தார்இத்திருத்தலத்தில் மூலவர்திரண்ட புஜங்களோடு வலது 
கையில் சங்கம் ஏந்திஇடது கை பாதத்தைச் சுட்டிக்காட்டஉயரமாய் அகலமாய்கம்பீரனாய் 
பெரும் விழிகளோடு முகத்தில் வெள்ளை மீசையோடு இடுப்பில் கத்தியோடு சாளக்கிராம 
மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார்வேங்கடகிருஷ்ணன் 
என்று பெயர்வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் 
குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார்ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் 
உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார்வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் 
தம்பி சாத்யகியும்அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும்பேரன் அநிருத்தனும் 
காட்சி தருகிறார்கள்சாத்யகிக்கு  முன்னே  ஆசனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் 
எழுந்தருளியிருக்கிறார்இந்த உற்சவருக்கு பார்த்தசாரதி என்று பெயர்

ஸ்ரீ பார்த்தருக்கு சித்திரை மாததில் பிரம்மோத்சவம் நடை பெறுகிறது.  திருவல்லிக்கேணி எம்பெருமான் அழகு. புறப்பாடு சிறப்பு. வாகனங்கள் மிக அழகு; சாற்றுப்படி அற்புதம்; திவ்ய பிரபந்த கோஷ்டி சீர்மையானது; பெருமாளை வீதி புறப்பாட்டில் ஏளப்பண்ணும் ஸ்ரீ வைஷ்ணவ தென்னசார்ய ஸ்ரீ பாதம் தாங்கிகளின் லாவகம் மற்றும் கட்டுப்பாடு பாராட்டத்தக்கது

இவ்வருடம் ஏப்ரல் 27  அன்று உத்சவம் அங்குரார்ப்பணம் நடந்தது. 28 அன்று சுவாதியுடன் கூடிய பௌர்ணமியில் காலை கோடி ஏறி காலை பெருமாள் பிரமாதமான தர்மாதி பீடத்தில் புறப்பாடு கண்டு அருளினார் ;   உத்சவத்தின் போது எடுக்கப்பட்ட சில புகை படங்கள் இங்கே
                                                    புதிதாக சமர்பிக்கப்பட்ட குடைகள் 
                                                                     தர்மாதி பீடம் 



                                   இரண்டாம் நாள் (29/04/2010) காலை சேஷ வாகன புறப்பாடு.  


மூன்றாம் நாள் (30/04/10) காலை அற்புதமான கருட வாகனத்தில் காலை 
கோபுர வாசல் சேவையுடன் புறப்பாடு துவங்கியது.  


                                 03/05/10  - 6    ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம் -  புண்ய கோடி விமானம் 




                                                           04/05/10 -  7   திருத்தேர் 





                                                           06/05/10 - 9   ஆள் மேல் பல்லக்கு 

                                                         போர்வை களைய ஏளும் பார்த்தர்
                                           போர்வை களைந்த பின் வடிவழகிய பெருமாள் 


                                                                                               அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.



No comments:

Post a Comment