Wednesday, May 12, 2010

THIRUVARANGAM CHITHIRAI THIRUTHER THIRUVIZHA


Most of us do visit temples regularly. 

For Sri Vaishnavaites (followers of Lord Vishnu) – “Kovil” refers to Thiruvarangam (Srirangam). Located near Trichy, this sacred place is a small island formed by river Kaveri and its tributary Kollidam (Coleroon). The Sri Ranganathaswaky temple is a temple dedicated to Lord Ranganatha in a reclining form.

The temple occupies an area of 156 acres (6,31,000 m²) with a perimeter of 1,116m (10,710 feet) making it the largest temple in India. It actually a very small city with inner columns surrounded by compound walls and outer columns known as Madaveethi.

As most of you would know, in temples, the Moolavar idol is inside Sanctum sanctorum to whom all rites are performed. There would be a Uthsavar vigraham (idol which is taken out on procession). On important days, this Uthsava vigraham is taken out on the streets surrounding the temple, enabling the devotees to have darshan of the Lord. In vaishanavaism, this form is called ‘archai or idol worship’.

In traditional temples, once a year a grand Brahmotsavam is performed. Brahma is believed to have originated this festival which is celebrated for 10 days during which period, the beautifully decorated Lord embellishes various vahanas. At Srirangam, there are three important brahmotsavams, one of which falls in the month of Chithirai. Generally, on the 7th day the Lord is taken out on magnificent wooden chariot, pulled by hundreds of devotees. The Chithirai ther thiruvizha is a famous function at Srirangam as devotees, primarily peasants offer the new grains and other agricultural produce, herds of cattle to the Lord.


Here is a write up (in tamil) about this Srirangam, Chithirai Car Festival and some photos (taken during my visit to the temple during 2008)

With regards
S Sampathkumar.

********************************************************************************


திருவரங்கம் சித்திரை திருத்தேர் சமீபத்தில் நடை பெற்றது. இரண்டு வருடங்கள் முன்னால் திருவரங்கனின் சித்திரை திருத்தேரை தரிசிக்கும் பேறு கிடைத்தது. அப்போது எடுத்த சில படங்களுடன் ஸ்ரீரங்கத்தை பற்றி சில வார்த்தைகளும்  -  (பல வலைகளிலிருந்து தொகுத்தது)







வைணவத் தலங்களில் முதன்மையானதும்,​​ பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் பல நூறு ஆண்டுகள் முந்தியது. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜிகள் என்று பலபேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம். சங்க நூல்களிலும் அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்)  திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.

ஸ்ரீரங்கம் முதலாவது திவ்ய க்ஷேத்திரம் . அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

க்ஷீராப்தியில் ப்ரணவ வடிவான விமானத்துடன் தோன்றிய அரங்கனை ப்ரம்ம தேவர் ஆராதித்தார்; பின்னர் மாமன்னர் இக்ஷ்வாகுவுக்கு அளித்தார்; சூரிய குலத்தோன்றல்கள் வழிவழியாக ப்ரணவாக்ருதி விமானத்தை ஆராதித்து வந்தனர்.இரகுவீரன் மைதிலியுடன் வழிபட்டார்; அவரிடமிருந்து விபீஷணாழ்வான் அதைப் பரிசாகப் பெற்றார்; இலங்கை செல்லும் வழியில் அரங்கனை ஆராமம் சூழ்ந்த காவிரியின் இடைக்குறை கவர்ந்தது; அங்கேயே கோயில்கொள்ளத் திருவுள்ளம் பற்றினான் என்பது இந்த ஸ்தல புராணம்.

காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். காவிரி கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது; கொள்ளிடம் வைணவ மரபில் ’வட திருக்காவேரி’ என்று பெயர் பெறுகிறது. இந்த இடைக்குறையின் மறுபெயர் ”திருவரங்கம்”. ’வண்டினமுரலும் சோலை, மயிலினமாலும் சோலை’ என்றபடி இயற்கை எழில் மலிந்து தோன்றும் இத்தீவின் நடுவில் திருப்பொலிய நிற்பதுதான் ‘அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்’ என்னும் நம் பெருமாள் இனிதுறையும் ‘பெரிய கோயில்’

இத்தலம் புராணம் போற்றும் பெருமை பெற்றது; ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாஸநம் செய்யப் பெற்றது. (மங்களம் - நற்பேறு,மேன்மை,வளம். கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இச் சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதானஇராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.

‘தென்னாடும், வட நாடும் தொழநின்ற திருவரங்கம்’ எனவும், ‘பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே’ எனவும் அடியார்கள் இதைப் புகழ்ந்துள்ளனர்.இங்குதான் உடையவர் கத்யத்தை அருளினார். ஈடு விளைந்த இடம்; பெரிய நம்பிகள், பட்டர், சீராமப்பிள்ளை, லோகாசார்யர் போன்ற மஹநீயர்களின் அவதார ஸ்தலம் இது.






அரங்கனுக்கு மூன்று பிரம்மோத்சவங்கள் நடக்கின்றன. இவற்றுள் விருப்பன் திருநாள் எனும் சித்திரை உத்சவமும், குடியானவர்களும் பயிரிட்டோரும் சீராட்டும் சித்திரை தேர் திருவிழாவும் மிக பிரசித்தி. திருவுடை மன்னரை காணில் திருமலை கண்டேனே என்னும் ஆழ்வார் பாடலின் படி மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் அழகிய மணவாளனை திருத் தேரில் ஏளப் பண்ணி கொண்டடினராம். ஸ்ரீரங்கம் வீதிகள் மதில் சூழ்ந்து அகலமாக தென்னை மரங்களுடன் சிறப்பாக உள்ளன.


                        திருவீதி (உத்திர வீதி)



                        அரங்கன் திருத்தேர்








                         மக்கள் கூட்டம்

திவ்ய பிரபந்த கோஷ்டி
கோவில் யானை
திருதேரின் பின்னால் கட்டை போடுகின்றனர்

திருத்தேர் சக்கரம்
ஊர் கூடி தேர் இழுத்தல்



என் அரங்கனை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே என பாடப்பெற்ற திருவரங்கம் திகழும் திசை நோக்கித் தொழுவதே ஸர்வ பாபங்களையும் நிவர்த்திக்க வல்லது.

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா:

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

No comments:

Post a Comment