Tuesday, August 6, 2024

Andal Thiruvadipuram 8 - 2024 : Memecylon umbellatum ~ 'காயாம் பூ".

Memecylon umbellatum, may not exactly ring a bell ! ~ most unlikely that we have seen this too !!  interestingly, it is mentioned in detail in Andal Nachiyar thirumozhi pasuram.

 


Memecylon umbellatum, commonly known as ironwood, anjani (Marathi) or alli (Telugu), ‘Kaaya’ in Tamil  is a small tree found in India, the Andaman islands and the coastal region of the Deccan. In  Sri Lanka,  it is called blue mist, kora-kaha (Sinhala language) and kurrikaya (Tamil language). The leaves contain a yellow dye, a glucoside, which is used for dyeing the robes of Buddhist monks and for colouring reed mats (Dumbara mats). Medicinally, the leaves are said to have anti-diarrhoeal properties. Historically, this plant was burnt as fuel in the production of Wootz steel. 

Wootz steel is a crucible steel characterized by a pattern of bands and high carbon content. These bands are formed by sheets of microscopic carbides within a tempered martensite or pearlite matrix in higher-carbon steel, or by ferrite and pearlite banding in lower-carbon steels. It was a pioneering steel alloy developed in southern India in the mid-1st millennium BC and exported globally.  The steel  made in   Telangana & some other parts of Southern India   was exported as cakes of steely iron that came to be known as "wootz".  The method was to heat black magnetite ore in the presence of carbon in a sealed clay crucible inside a charcoal furnace to completely remove slag. An alternative was to smelt the ore first to give wrought iron, then heat and hammer it to remove slag.  It is suggested that Lankans adopted the production methods of creating wootz steel from the Cheras by the 5th century BC. 

 


கோதைப்பிராட்டியாம் ஆண்டாள் :  "தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற" என அரும்புகளையுடைய கொடி முல்லைகள்,  அழகர்  பெருமானின்  வெளுத்த புன்சிரிப்பை காட்டுகின்றதாய் கூறுகின்றார்.    பிறிதொரு இடத்தில்  "கருவிளையொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உருவொளி காட்டுகின்றீர்" என  அழகிய கருவிளை மலர்கள் மற்றும் காக்கணம் பூக்கள்,  எம்பெருமானுடைய திருமேனியின் நிறத்தை நினைப்பூட்டுவதாக பகர்கிறார். 

Andal laments that the  cool dark clouds, the karuvilai, the Kaya and the lotus flowers, haunt her urging her to go and merge with Sriman Narayana – so in her pasuram she requests that she be taken to the land -    Bhaktavilochanam, where HE  resides.

                          குறிஞ்சிப்பாட்டு என்னும் இலக்கிய நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள்  கூறப்பட்டுள்ளன.  பத்துப்பாட்டு  நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. இதை இயற்றியவர்  கபிலர்  - இந்நூல்  அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும்.  

சங்க நூல்களிலும் ஆண்டாள் பாசுரங்களிலும் பற்பல பூக்கள் சொல்லப்பட்டுள்ளன.  இவற்றுள் ஒன்று நீல நிற 'காயாம் பூ".  காயா மரத்தின் பூக்கள் நீல நிறத்தில் இருப்பதால்,  ஸ்ரீமன் நாரணனுக்கு “காயாம்பு வண்ணன்’ என்ற பெயருண்டு. குறைந்த நாட்கள் மட்டுமே மலரக்கூடிய தன்மை கொண்டது. அதை நல்ல நிமித்தமாகக் கருதிக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்திருப்பதைப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.  

காயா (Memecylon umbellatum) காய்ப்பது இல்லை. எனவே இதனைக் 'காயா' என்றனர் என்கிறது ஒரு குறிப்பு !!  இம்மரம் இலங்கையில் காயான் என அழைக்கப்படும். இது அநேகமாக கத்தி கைபிடி, கோடரி கைபிடி, விறகிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.  'காயாம்பூ மேனியன்'  மாயோனைத் தெய்வமாகக் கொண்ட முல்லை நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று காயா-மலர். காயா, காயாம்பூ, காகா, காசாம்பூ, அஞ்சனம், அல்லி, புன்காலிவச்சி என்ற பல தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்படுவது காயா.  

இதோ இங்கே கோதை நாச்சியாரின் 'நாச்சியார் திருமொழி' 12ம் திருமொழி பாசுரம் :  

கார்த்தண்முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்

ஈர்த்திடுகின்றன  என்னை வந்திட்டு  இருடிகேசன்  பக்கல் போகேயென்று

வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசில்  உண்ணும் போது,  ஈதென்று

பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசநத்து  உய்த்திடுமின்!!

 

கறுத்துக் குளிர்ந்த மேகங்களும் கருவிளைப் பூவும் காயாம் பூவும் கண்ணபிரானுடைய திருமேனியை போலே,  தாமரைப்பூக்கள் அப்பிரானுடைய திவ்யாவயவங்கள்  போலே உள்ளபடியால்,  அந்த மேகம் முதலியவற்றைக் காணும்போதே கண்ணபிரானுடைய ஸ்மரணம் மிகுந்து,  உடனேயே அவனை சேரவேணுமென்கிற குதூஹலம் கிளர்கின்றபடியை ஒரு சமத்காரமாகப் பேசுகிறாள் முன்னடிகளில்.  அவ்வாறு எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனையே சிந்தித்த கோதைப்பிராட்டி  பக்தவிலோசநம்  எனும்  புண்யதேஸத்திலே தன்னைக் கொண்டு போய்விட வேணுமென்கிறாள்  

Here are some photos of siriya mada veethi of Sri Andal at Thiruvallikkeni divyadesam on day 8  [5.8.2024] of Thiruvadipura Uthsavam.
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5.8.2024    









No comments:

Post a Comment