Tuesday, June 4, 2024

Sri Varadha Rajar - day 9, 2024 : பழம் மீக்கூறும் பலாஅ போல

Where do you live ? – what is your place famous for ! -  how old is the history of Chennai metropolis !  .. .. how were the geographical positions drawn and redrawn over the years ! – all these might offer lot of interesting historical information !!

 



வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்  தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து.. ..

 

என்றார் ஒளவையார் -  தொண்டை மண்டல சதகம்.  ஆம்,  இந்த தொண்டைநாடு என்பது யாது ?

1000 வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தின் வடபகுதி 'தொண்டை மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில், புழற்கோட்டம், புலியூர்க்கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம், மணவிற்கோட்டம், வேலூர்க்கோட்டம் என 24 கோட்டங்கள் இருந்துள்ளன. இந்தக் கோட்டங்களுள் புலியூர்க்கோட்டம் நிர்வாக ரீதியாக சிறப்புற்று விளங்கியது. இன்று கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் புலியூர்க்கோட்டம்,   மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக இருந்தது. அன்றைய புலியூர்க்கோட்டத்தின் ஒரு பகுதியான குன்றத்தூர் வளநாட்டில்தான் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் தோன்றினார்.  

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்

நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்

தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி

காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும், திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருக்கும் தாமரையின் பொகுட்டு போலவும் அமைந்திருக்கும் - காஞ்சிமா நகரம் தாமரை என்றால் அரசன் திரையனின் அரண்மனை அதன் பொகுட்டு. தாமரைப் பூவில் உள்ள நடுமேடு (அரசன் பிரமன் போன்றவன்) 

இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி

கொழு மென் சினைய கோளியுள்ளும்

பழம் மீக்கூறும் பலாஅ போல

காஞ்சிமாநகரம் எப்போதும் விழாக் கோலமாக இருக்கும். காஞ்சிமா நகரத்தின் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. கிளையில் பழுக்கும் பழங்கள் பலவற்றுள்ளும் பலா சிறந்தது. அதில் ஈ மொய்க்கும். இழுமென் புள் என்பது ஈ. பலாப்பழத்தின் சுளைகளில் பழம் தின்னும் ஈக்கள் மொய்ப்பது போல உலகின் பல்வேறு திசைகளிலுள்ள மக்கள் விழாக் காலத்தில் காஞ்சிமா நகருக்கு வந்து தொழுவர். விழாக் கொண்டாடுவதில் பழம் பெருமை கொண்டது காஞ்சிமாநகரம்.

இவை 500 அடிகளைக் கொண்டு அமைந்த பெரும்பாணாற்றுப்படை இலக்கிய நூலில் இருந்து சில வரிகள்.  பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது   கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் இயற்றிய நூல்.  ஆற்றுப்படை என்பது ஒரு கொடையாளியிடம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோர்க்கு அவ்வள்ளலிடம் சென்று தாம் பெற்றவாறு அவர்கள் பெறுமாறு வழிப்படுத்தல்.   இந்நூல் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.  269 அடிகள் கொண்ட சிறுபாணாற்றுப் படையை நோக்க இது பெரியது என்பது பற்றி இப்பெயர் பெற்றதாகவும் கொள்வர்.   இந்நூல்  சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தது. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது.  

For a  Srivaishnavaite, Perumal Koil refers to “Sri Varadharaja Swamy temple’ at Kanchipuram.  Legend has it that Brahma performed Asvamedha yaga at mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma himself. Indira’s white elephant Iravatham took the form of a hill called Hastigiri on which shrine of Varadharajar is located. This Swami is known by various names, prominent among them being : Devarajar, Devathirajar, Thepperumal, Varadhar, PerArulalar … 

வைகாசி திருவோணம் தீர்த்தவாரியாக கொண்டு   ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ வரதராஜர் உத்சவம் நடைபெறும்.  திருவல்லிக்கேணியில் பத்து நாள் உத்சவ புறப்பாடு உண்டு.  திருக்கச்சி தேவாதிராஜரின் ப்ரம்மோத்சவம்  மிக பிராபல்யம்  - மேலே கண்டது   திருக்கச்சி மூதூரின் சிறப்பும் சில சங்க இலக்கிய சரித்திரமும். 

May 28.5.2024 (Vaikasi 15)  was  9th day of Sri Varadharajar  Uthsavam.. the day being  Thiruvonam [the first Thiruvonam after the Chithirai Brahmothsavam],  Varadhar had purappadu in the morning and in the evening there was  purappadu of Sri Parthasarathi perumal.  Here are some photos of Sri Devathi Rajan purappadu at Thiruvallikkeni divyaesam. 

adiyen Srinivasadhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar 









No comments:

Post a Comment