Thiruvallikkeni Chithirai Brahmothsavam day 7 - 29042024
Sri Parthasarathi Perumal thiruther
At Thiruvallikkeni divydesam day 6 is Yanai vahanam (ie., 28.4.2024
night)
Here is a sneak preview of Emperuman Sri Parthasarathi Yanai
vahanam
ஆர்மலியாழி சங்கொடு பற்றி ஆற்றலையாற்றல் மிகுக்கும் கார்முகில் வண்ணன்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்
பாண்டியன் கொண்டை தரித்து, செங்கோலுடன் சேவை சாதிக்கும் அவசரம். இன்று
27.4.2024 சித்திரை ப்ரஹ்மோத்சவம் 5ம்
நாள் மாலை பத்தி உலா - வாகன மண்டபத்துக்கு புறப்பாடு
Answer to Yesterday’s Q – it resembles an ornament worn on head or looked like an ornate kolam on roof ! yet – I saw it in a totally unexpected place.
Today (27.4.2024) is day 5 of Sri Parthasarathi Perumal chithirai brahmothsavam and evening would be Hanumantha vahanam. This beautiful ornate work was found in the knees of Hanumantha vahanam
“ஆஞ்சநேய
மதி பாடலானனம், காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம், பாவயாமி பவமான நந்தனம்"
கம்ப இராமாயணத்தில் - அனுமந்தனின் சாகசங்களை சொல்லும் படலம் - சுந்தர காண்டம். சுந்தர காண்டம் முதல் சர்க்கத்தின் தொடக்கம், அனுமன் மகேந்திர மலையின் மீது எறி பெரிய உருவம் எடுத்து, உயரே எழும்பிப் பறப்பதுடன் தொடங்குகிறது.
மனோ எண்ணங்களை விட வேகமானவரும்,
ஐம்புனல்களை அடக்கியவரும், புத்திமான்களில் மிக சிறந்தவரும், வாயு குமாரனான சிரஞ்சீவி ஸ்ரீ ராமதூதனான ஹனுமன்
இன்று எம்பெருமானை தன் தோள்களில் சுமந்து திருவீதி வலம் வருவார்.
திருவல்லிக்கேணியின் கம்பீரமான அனுமந்த வாகனத்தின் முழந்தாள்களில் கண்ட
அழகு சிற்பமே அது.
Q for Triplicane devotees ?
Chithirai Brahmothsavam is grandly being conducted and today is
day 4 – Can you identify what this is ? or where would you find this !
Clue: Because its colour
is a simple give-away, have changed the colour to Sepia !! – answer by tomorrow
around 10 am !!
@10.26pm on 26.4.2024
மண்ணும் மலையும்
மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்
திண்ணம் விழுங்கி
உமிழ்ந்த தேவன் எங்கள்
ஸ்ரீபார்த்தசாரதி
எம்பெருமான் சந்திரப்ரபை பத்தி உலாவுதல் அவசரம்
இன்று 26.4.2024
கதிரவன்
எழுந்தான், கன இருள் அகன்றது !
திருவல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் சூர்யபிரபை புறப்பாடு
நீ நடந்தால் நடை அழகு
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் எம்பெருமான் திருவீதி வலத்தின் அழகுகளை பட்டியலிட்டு மாளாது. எம்பெருமான் சாற்றுப்படி, நறுமண மாலைகள், திருவாபரணங்கள், திருக்குடைகள், வாகனங்கள், பட்டர் முதலான கைங்கர்யபரர்கள், ஸ்ரீபாதம்தாங்கிகள், அருளிச்செயல் & நான்மறை வல்லார்கள், இன்னிசை பல்வேறு கைங்கர்யங்கள் செய்வோர், அழகு கோலங்கள் .. மேலும், மேலும் - இன்றைய சிறப்பு - ஒரு வாரமே ஆன அழகு குட்டிக்குதிரை.
அஞ்சன வண்ணன் ஆயர்கோலக் கொழுந்து, எம்மையாளுடை எம்பெருமான்
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஏகாந்த சேவை இன்று 25.4.2024
சேரும் கொடைபுகழ் எல்லை இலான், ஓர் ஆயிரம் பேர்கள் உடைய ஒப்புயர்வற்ற திருவல்லிக்கேணி
திவ்யதேச ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்
இன்று 24.4.2024
சிம்ம வாகனத்துக்கு பத்தி உலாவி எழுந்தருளிய போது
See the exuberance on the face of this kid at Thiruvallikkeni
divyadesam – holding Thiruvalavattam almost
of his size, he is gleeful in doing
kainkaryam.
The essence is service at such an young age – and .. .. giving
opportunity to those who are younger !!
Poliga, poliga, poliga !!
Today 23.4.2024 – is Full Moon day (Pournami in Tamil) – it is
full moon day in the month of Chithirai – with special significance as ‘Chitra
Pournami’ – a unique festival observed on the full moon day (Pournami –
Poornima) in the month of Chithirai. Some associate this day with
Chitragupta, the official keeper of deeds in the abode of Yama. In most temple towns, today is celebrated
with people going to temples and eating on the banks of rivers. It
is believed that bathing in holy rivers and temple ponds on this day will wash
away the sins committed.
இன்று 23.4.2024
சித்திரா பௌர்ணமி. சித்திரையில் சித்திரை - மதுரகவிகள் சாற்றுமறை. இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி
எம்பெருமான் வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக புன்னை கிளை வாகனத்தில் புறப்பாடு கண்டருளினார். எம்பெருமான் வாஹன மண்டபத்துக்கு பத்தி உலாவி எழுந்தருளிய
போது எடுக்கப்பட்ட படங்கள் சில இங்கே.
உப்புக்கடல், கருப்புக்கடல், கள்ளுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நீர்க்கடல் என்ற ஏழுகடல்களாலுஞ் சூழப்பட்ட எழுதீவுகளுக்கு, முறையே ஜம்பூத்வீபமென்றும், பலக்ஷத்வீப மென்றும், சால்மலத்வீப மென்றும், குசத்வீப மென்றும், குரெளஞ்சத்வீப மென்றும், சாகத்வீபமென்றும், புஷ்காத்வீப மென்றும் பெயர். இவற்றுள் ஜம்பூத்வீகம் மற்ற எல்லாத்தீவுகளுக்கும் நடுவிலுள்ளது; அதன் நடுவில், மேரு என்னும் பொன் மலையுள்ளது; அதனைச் சுற்றியுள்ள இளாவருக வருஷத்தில் ஸ்ருஷ்டிக்கப் பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு மரங்களுள்ளன; அவற்றிலொன்றாகிய நாவல் மரம்-ஜம்பூத்வீப மென்று இத்தீவின் பெயர் வழங்குதற்குக் காரணமாயிற்றென்று புராணங்கூறும். [ஜம்பூ என்றால் நாவல் பழம் ]
நமது சரித்திரத்தில் ஜம்புத் தீவு பிரகடனம் முக்கிய இடம் பெற்றது. தென்னிந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரி திரட்டலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினர். முத்து வடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருதிருவர் ஆட்சிப் பொறுப்பேற்றனர். அக்காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி திருச்சிக் கோட்டையில் ஒட்டப்பட்டது.
18-ம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் ஆக இருந்த முகம்மது அலி-க்கும் அவரது சகோதரியை மணந்த சந்தாசாகிப் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, முகம்மது அலி ஆங்கிலேயர்களின் ஆதரவை நாடினார். சந்தாசாகிப் பிரான்ஸ்-ன் ஆதரவை நாடினார். இந்தப் போரில் முகம்மது அலி வெற்றி பெற்றதை அடுத்து, அவர் ஆற்காடு கோட்டையையும், திருச்சி கோட்டையையும் கைப்பற்றினார். போரில் வெற்றி பெற உதவிய ஆங்கிலேயர்களுக்கு அதாவது வங்கத்தில் ஆளுநராக இருந்த ராபர்ட் கிளைவுக்கு, பாளையங்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை தானமளித்தார் முகம்மது அலி. இதையடுத்து ஆங்கிலேயர்கள் வரி வசூலில் ஈடுபடத் தொடங்கினர். இதனை எதிர்த்த மருதுபாண்டியர்கள், ஆங்கிலேயர்களை நாட்டில் இருந்து விரட்ட திட்டமிட்டனர். இதற்கானபிரகடனமே "ஜம்புத்தீவு" பிரகடனம் என்று அழைக்கப்பட்டது.
ஜம்புத் தீவு பிரகடனத்தில், அகண்ட பாரதம் என்ற உன்னத நோக்கத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தனர் மருது சகோதரர்கள். அதில், ‘ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நவாப் முகமது அலி, முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். இந்த ஈனர்கள் ஆளும் பகுதிகளிலெல்லாம், மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. துன்பப்படுவது தெரிந்திருந்தும் எதனால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும்
மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால் ஜம்புத்தீவு வாசிகள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும்.
இந்த ஈனர்களின் பெயர்கள்கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான்
ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழ முடியும். இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம்
செய்து சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
ஆதலால், மீசை வைத்த அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால், இந்த ஈனர்களை அழித்து விடவேண்டும்.
இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்கிபவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான்
உறுதியாகக் கூறுவேன். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள். என மருது பாண்டியர்கள் அறிவித்தனராம்.
இந்த நாவலம் தீவு பெரியாழ்வார்
திருமொழியில் கூறப்படுகிறது. கண்ணனது வேய்ங்குழல்
ஓசை சிறப்பை பரவசமாக கூறும் பட்டர்பிரான் பாசுரம் இவ்வாறு தொடங்குகிறது.
நாவலம்
பெரிய தீவினில் வாழும், நங்கைமீர்கள்
இது ஓர் அற்புதம் கேளீர்
தூ
வலம்புரி உடைய திருமால் , தூய வாயிற்
குழல்-ஓசை வழியே
இணையத்தில் மேலும் தேடியதில், ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவு, இந்து, பௌத்தம் மற்றும் சமண சமய அண்டவியல் கோட்பாடுகளில் மனிதர்களும், மற்ற சீவராசிகளும் வாழும் உலகத்தைக் குறிக்கிறது. ஐரோப்பா கண்டத்தினர் இந்திய துணைக்கண்டத்தைக் கைப்பற்றி அதற்கு இந்தியா என்ற பெயரை வைத்து அது பயன்பாட்டுக்கு வரும் வரை உள்ளூர் மக்களாலும் அருகில் உள்ள இலங்கை போன்ற தீவு மக்களாலும் தீபகற்ப இந்தியாவைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட ஒரு பெயராகும். சமணம் மற்றும் இந்து சமய புராண அண்டவியல் வரைபடங்களின் படி, அண்டம் ஏழு பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; ஜம்புத் தீவு, இலட்சத் தீவு, சல்மாலி தீவு, குசத் தீவு, கிரவுஞ்சத் தீவு, சகத் தீவு மற்றும் புஷ்கரத் தீவு ஆகும். இந்த ஏழு தீவுக்கண்டங்களிடையே உள்ள பெருங்கடல்கள் உப்பு நீர், கரும்புச் சாறு, திராட்சை ரசம், நெய், தயிர், பால் மற்றும் நன்னீர் ஆகியவைகளால் நிரம்பியுள்ளன.
இந்த ஏழு கண்டங்களில்
சுதர்சணத்தீவு என்றும் அழைக்கப்படும் ஜம்புத் தீவு முழுவதும் ஜம்பு ஆறு நிறைந்து பாய்கிறது.
ஜம்புத் தீவு ஒன்பது மண்டலங்களும், எட்டு பெரு மலைகளும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியில்
ஜம்பு என்பதற்கு நாவல் மரம் ஆகும். எனவே தமிழில் ஜம்புத் தீவினை நாவலந் தீவு என தமிழ்
இலக்கியங்களில் குறிப்பர். சூரிய சித்தாந்த சோதிடச் சாத்திரங்கள், வட துருவத்தை ஜம்புத்
தீவு என்றும்; தென் துருவத்தை பாதாளம் அல்லது பாதள உலகம் என்றும் குறிப்பர். கடலடியில்
உள்ள பாதாள உலகில் நாகர்கள் வாழ்வதாக இந்து, சமணச் சாத்திரங்கள் கூறுகின்றன.
சித்திரா பௌர்ணமி அன்று கண்ட அழகு நிலாவும், அதை விட அற்புத அழகு படைத்த ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளின் புல்லாங்குழலோடு சேவை சாதிக்கும் சிறப்பு திருக்கோலமும் - சில படங்கள் இங்கே
From Tues 23.4.2024 starts Chithirai Brahmothsavam at Thiruvallikkeni divyadesam ~ for those residing far and away, some lensmen capture photos & videos of Perumal with some difficulty and share on social media.
Here is how they
look like – a photo depiction century ago :
those cameras, mounted on sturdy
tripods, required a level of skill and patience that turned photograph into a masterpiece. Each photograph
required setting up the shot meticulously, adjusting the lens manually for the
perfect focus, and waiting for the right moment to capture a slice of life or a
piece of history.
எம்பெருமானை ஆச்ரயிக்கப்பெற்றவர்களில் ஆரேனும் துன்பப்படுவார்
உண்டோ !?!? இன்று சிறப்பு நாள் - ஏகாதசி – 19.4.2024, வெள்ளிக்கிழமை
(சித்திரை மாதம் 6, சுக்ல பக்ஷ
ஏகாதசி). திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு
கண்டருளினார்.
It is summer time and the heat is unbearable ! Over the past couple of weeks, Chennai has been experiencing very hot weather and there were fears of mercury shooting up further - today was a holiday being Election day at Tamil Nadu - being first phase of 18th Lok Sabha Elections 2024.
The Nation has come a long way from the first General elections that were held 25 October 1951 and 21 February 1952. Voters elected the 489 members of the first Lok Sabha, the lower house of the Parliament of India. Elections to most of the state legislatures were held simultaneously. Madras was a composite state with many parts of Andhra and Madras was a single constituency. Mr TT Krishnamachari won – there were 369299 eligible voters of whom 52.9% voted and TTK garnered 195370 votes. Not many would know that there was a party called - Commonweal Party that existed in Tamil Nadu between 1951 and 1954, started by M. A. Manickavelu Naicker. The party won three seats in the 1952 Lok Sabha election and six seats in the Madras State legislative assembly elections.
In the Madras Assembly elections, no single party obtained a simple majority to form an independent government. C. Rajagopalachari (Rajaji) of the Indian National Congress became the Chief Minister after a series of re-alignments among various political parties and Independents. Rajaji resigned in 1954 and in the ensuing leadership struggle, Kamaraj defeated Rajaji's chosen successor C. Subramaniam and became the Chief Minister on 31 March 1954.
Today the voting was between 7 am to 6 pm – there are couple of Polling booths in the mada veethi – NKT Boys High School and Samarao school – periya mada veethi purappadu started around 5.45 pm.
ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங் கடலை,- நேரே
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து.
மேகங்கள் நிறைந்த பெரிய கடலை தானே முன்னின்று கடைந்தவனும் ஸகல ஜகத்காரண
பூதனுமானவனும், திருப்பாற்கடலில்
ஆதிசேஷனாகிற அனந்தன் மேல் பள்ளிக்கொண்டிருப்பவனுமான எம்பெருமானை நாடோறும்
பணிபவர்கள் ஒருபோதும் ஒருவிதமான துக்கங்களையும் அனுபவிக்கமாட்டார்கள்
- - அவ்வாறு துயருற்றோர் எங்குமில்லை ! யாருமில்லை!!
In this World, there exists sufferings and sorrow ~ Can there ever be people bereft of sorrow and eternally blissful – our Peyalwar shows us
the way in his Moonram thiruvanthathi. Peyazhwar’s advice to
the Universe is simple – to those who offer worship everyday to the Lord who
reclines in Sesha sayanam, who churned the ocean, who is the cause of all
- there would seldom by any misery .
At Thiruvallikkeni divyadesam, we are fortunate to have darshan
of Emperuman on most days and today being Shukla paksha Ekadasi in the
month of Chithirai - we were fortunae to
have the divyadarshan of Sri Parthasarathi Emperuman
இன்று அற்புத நாள் ~ ஜகம்
புகழும் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நல்நாள். நன்மையளிப்பவனும், இணையற்றவனும், தாமரைக்கண்ணனும்,
பூசிக்க தக்கவனுமாகிய - இராமபிரானின் அருள் பெறாதவர் - இருந்தும், என்ன செய்தும் என்ன
பயன் என வினவினாராம் தியாகய்யர். ஸ்ரீ ராமபிரான் முடி சூட வந்தபோது,
அவரை பார்த்த அயோத்தி மக்கள் :
‘உய்த்தது
இவ்வுலகம்’ என்பார்; ‘ஊழி காண்கிற்பாய்’ என்பார்;
‘மைந்த!
நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்’
~ “செய்ய முடியாத
தவத்தை செய்து இப்படி ஒரு செம்மலைப் பெற்றெடுத்த தசரத மன்னனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்,?” என
புகழ்ந்து மகிழ்ந்தனாராம் அயோத்தி மக்கள்.
Today (17th
Apr 2024) is the holy Sree Rama
Navami – the day on which Lord Sri Ramachandra
murthy, the supreme avatar was born in the blessed land of
Ayodhya. Lord Rama descended on earth for the purpose of upholding
righteousness and rewarding virtue. The Greatest of Ithihasa purana ‘Sri Ramayanam’
is the undiluted history of the Greatest Person who descended on this
Universe.. .. .. ~ and there is also the great character – a
warrior, mightily powerful, whose body was as hard as a diamond, whose speed
equalled those of fastest flying eagles, who possessed great wisdom, who could
organize a group of roaming ones, who can jump hundreds of miles, yet who
remained at the feet of his Master, totally committed thinking of their welfare
alone – unassuming, yet capable of telling the right things at the right moment
– that is Pavana Puthra Hanuman – Aanjaneya, who is called ‘siriya thiruvadi’ –
bearer of Lord Rama – who carried Rama on his shoulders during the war in which
the demon was killed.
As he traversed the
samudra and landed at Lanka, in search of Sita Mata, he trailed destruction
killing demons and devastating the property of Ravana. Getting the
news of the power of Hanuman, Ravana ordered Rakshasas known as
Kinkaras, Valmiki describes them to be 80000 – mighty, big and powerful demons.
They too were killed – later as Hanuman decided to stop the fighting
and meet Ravana, he was over-powered and taken to the courtyard of
Ravana where he introduced himself thus,
अहं
तु हनुमान्नाम मारुतस्यौरसस्सुतः । सीतायास्तु कृते तूर्णम् शतयोजनमायतम् ।
समुद्रं
लङ्घयित्वैव तां दिदृक्षुरिहागतः । भ्रमता च मया दृष्टा गृहे ते जनकात्मजा ॥
அஹம்
து ஹநுமாந்நாம மாருதஸ்யௌரஸஸ்ஸுத: ।
ஸீதாயாஸ்து
க்ருதே தூர்ணம்
ஸதயோஜநமாயதம்
। ஸமுத்ரம் லங்கயித்வைவ ॥
My name is Hanuman, born
to the mighty Vayu. I came here searching for Seetha matha, I hopped
over 100 yojana wide ocean and as I roamed around, I saw the daughter of Janaka
in your house .. …… ……….
கம்ப இராமாயணத்தில் - சுந்தர
காண்டம் ஒரு முக்கிய அவகாசம். சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள்
அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு;
காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. ஆஞ்சநேயருக்கு அவர் தாயார் அஞ்சனை
வைத்தப் பெயர் சுந்தரன். அவரின் சாகசங்களை சொல்லும் படலம் என்பதாலும் இப்பெயர்.
சுந்தர காண்டம் முதல் சர்க்கத்தின்
தொடக்கம், அனுமன் மகேந்திர மலையின் மீது எறி பெரிய உருவம் எடுத்து, உயரே
எழும்பிப் பறப்பதுடன் தொடங்குகிறது. முதலில் பர்வதத்தின் மேல் எறி நின்றார், ராம நாமத்தை
சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் உருவம் உயர தொடங்கியது. ஆகிருதியோடு அவர்
மேலெழும்பினார், அந்த அதிர்வில் அவரை சுற்றியுள்ள மரம் செடி கொடிகளும் கற்களும்
அவருடன் எழும்பி சிறிது தூரம் அவரை வழியனுப்பவது போல மேலே அவருடன் சென்று பின் கீழே
இறங்கின. ராம நாமத்தை சொல்லி அவர் உருவம் உயர்ந்தது, நாம் ராம நாமத்தைத் தொடர்ந்து
ஜபித்து வந்தால் நம் பக்தி பெருகும். எப்படி அனுமான் எந்த இடரையும் ராம நாமத்தை வைத்து
வெற்றி பெற்றாரோ அது போலே எந்தத் துன்பத்தையும் தைரியத்துடன் எதிர்கொள்ள, நம் மன வலிமை
பெருக ராம நாமம் உதவி செய்யும்.
அனுமன் பிறந்த பொழுதே
இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல், அதனைப் பிடிக்கச்
சென்ற வீரர். கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே
படைத்துக் காட்டுகிறார் – அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம், அஸ்திரம், வியாதி போன்ற
வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
“வெப்புறு
செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு
தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”
Here
are some photos of Sri Ramar Hanumantha vahanam at Thiruvallikkeni divyadesam
this evening.