Friday, March 8, 2024

Maha Sivarathiri 2024

இன்று 8.3.2024 மகா சிவராத்திரி   உலகளவில் பரந்து வாழும் இந்துக்கள் இன்று  சிவபெருமானை வணங்கி மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.  மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி விரதநாள்  மகா சிவராத்திரி 

 


ஜோதி வடிவான சிவனை நோக்கி இன்றைய தினம் விரதம் நோற்பவர்களும், சிவனை நினைத்து பூஜை, வழிபாடு செய்பவர்களும் ஆசை, சோம்பல், கோபம், குரோதம், வஞ்சகம் முதலான தீய குணங்கள் நீங்கி நன்மையும் மேலான குணங்களையும் பெறுவர் என்பதே சிவராத்திரி விரத பலனாகும்.

 

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்

காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன் .. ... 

காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி,    சாம்பலை  உடல் எல்லாம் பூசி பக்தர்கள்  உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  அவனே.  நடராஜர் பற்றிய  திருவருட்பா பாடல்  ஒன்று:  

அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி

மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி. 

திருவருட்பா - ஆறாம் திருமுறை  

     அகர சிகரங்களாகிய சிவாகாரத்துக்கு அளவிடப்படாத கனக சபாபதியும், மகர உகரங்களாகிய பிரணவாகாரத்துக்கு மேலான தலைவனுமாகிய உண்மையான சபாபதியுமாவார் நடராஜ தாண்டவமாடிய சிவபெருமான். அவர்தம் தாள்கள் பணிந்து போற்றுவோம் !. 

No comments:

Post a Comment