Friday, December 1, 2023

Swami Manavala Mamunigal pushpa pallakku 2023

It has rained heavily for the past couple of days as Chennaites read more, fear more the ‘Cyclone Michaung’.  Weather reports put that the  cyclone is likely to move west-northwestwards, intensify into a deep depression by December 2 and further into a cyclonic storm over Southwest Bay of Bengal around December 3. Further, it would move northwestwards and reach near south Andhra Pradesh and adjoining north Tamil Nadu coasts by December 4 forenoon. Thereafter, it would move nearly northwards almost parallel to south Andhra Pradesh coast and cross South Andhra Pradesh during forenoon of December 5 between Nellore and Machilipatnam ! giving more rains to Chennai. 


This year during our Acharyan Uthsavam it was not raining so heavily – though Karthigai is a month of monsoon.  For us  Srivaishnavaites, attachment and following the steps of our Acaryan is the most important thing in life.  The leading light is our great Acaryar  Swami Manavala Mamunigal who has shown us the way in his Upadesa Rathinamalai highlighting and delivering the message   of Sri Vachana Bhushanam i.e. "Acharya Abhimanam alone is Uddhaarakam" ("ஆசார்ய அபிமானமே உத்தாரகம்").    AchArya's mercy is the ultimate benediction for our upliftment.  ..  

நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.  . 

'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு' 

என்ற குறளில் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு என்பது பாடலின் பொருள். நறுமணத்தை குறிக்கும் வேறு சொற்கள், வாடை, நறுநாற்றம், வாசனை.  

Sri Manavala Mamunigal, is the most reverred matchless Acharyar of our Srivaishnavaite philosophy, practised by Thennacharya Srivaishnavas.  Mamunigal the incarnation of Sri Adisesha,  is known as ‘Yathindra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar known as ‘Yatheendrar’.  He lived for 73 years on this earth performing many Kainkaryams  at Sri Rangam and undertook many pilgrimages to many  Sri Vaishnava Divyadesams spreading knowledge and bakthi culture.   His patent style was to elucidate the pramanams fully   ‘following the words of the Purvarcharyas without deviating a wee bit’.   

நமது பைந்தமிழ் ஒரு அற்புத மொழி.  ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.  கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன் மேற்குத் திசையில் மறைகிறதுஇந்த மறைதல் நேரத்தை,பொன் மாலை என கவிஞர்கள் சிலாகிப்பர்.   ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம்  என்கிறார்கள்.   உழிஞை மாலை என்பது  சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை முற்றுகையிடல் உழிஞை.  ஆற்றின் குறுக்கே கற்களைப் போட்டுக் கலிங்கு செய்து தடுப்பது போலக் கோட்டைக்குள் இருக்கும் மக்களைத் தடுத்தலால் இதனை இச்சொல்லால் குறிப்பிடலாயினர் என்கிறது தமிழ் விக்கிபீடியா.

 

கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும். மலர்கள் சில நறுமணம் கமழ்பவை. திருமங்கை மன்னன்  : -  * பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் * எனுமிடத்தில் 'மாலை' என்பது சர்வேஸ்வரனான எம்பெருமானையே குறிக்கிறது.   கலியன் அருளிச் செய்தது போல :  அருமையான அமிருதம் போன்றவனும், பசுமைதங்கிய திருத்துழாயை  உடையவனுமான, இவ்வுலகோர்களாலே  தியானிக்கப்படுபவனுமான  மாலை (ஸர்வேச்வரனை) திருவாலி மற்றும் அணைத்து திவ்யதேசங்களில் சென்று சேவித்து உய்வோமாக*.   

                        15.11.2023    அன்று திருவல்லிக்கேணியில்  பொய்யிலாத மணவாள மாமுனிகள் மாலை நேரத்தில் அழகான நறுமணம் தரும் மலர்களாலான  புஷ்ப பல்லக்கில் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.  அன்று மாலையில் இருந்தே மழை பொழிந்து கொண்டிருந்தது.  ஆச்சார்யர் வாகன மண்டபத்துக்கு எழுந்தருளி லேசான தூறலில் வெளியே வந்து, சற்று மழை வலுக்கவே - தெற்கு மாட வீதி ஆரம்பத்தில் திரும்பி  கோவிலுக்குள் எழுந்தருளினார்.

 
~adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1st Dec 2023 











No comments:

Post a Comment