Wednesday, November 30, 2022

Karthigai Thiruvonam - Sri Parthasarathi Emperuman - karumugai - கருமுகை பூக்கள்

நறுமுகை  என்றால் என்ன ?  - கருமுகை என்றால் என்ன ??  நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.    .. .. and can you identify this flower / flowering plant ?!?!?

 





Cananga odorata may not exactly ring a bell !!  it  is a tall tree growing typically up to a height of 30–70 feet.  The fruit is greenish-black in color initially turning to yellow on maturity. It produces a  highly fragrant flower, greenish-yellow initially turning to deep yellow/yellowish-brown on maturity. The flowers are axillary and umbellate in shape with three sepals and six petals of about 8 cm in length.  

Cananga odorata, known as ylang-ylang is a tropical tree that is native to the Philippines, Malaysia, Indonesia, New Guinea, the Solomon Islands, and Queensland, Australia.  It is valued for the essential oils extracted from its flowers (also called "ylang-ylang"), which has a strong floral fragrance. In India, it is grown in gardens and is known by different local names such as Karumugai, Chettu sampangi, and Apurvachampaka !!  he name ylang–ylang is a translation of the Philippine expression “Along-Ilang” which means hanging or fluttering item. As the flowers of this tree droop, the tree was named ylang–ylang.  This flower finds a mention in Sangam literature and in Divyaprabandham too.  

அதிகம் ஓடாத இருவர் என்ற பட பாடல் நினைவிருக்கலாம்.  பாடல் வரிகள் :  நறுமுகையே நறுமுகையே… நீயொரு நாழிகை நில்லாய்…  அற்றைத் திங்கள் அந்நிலவில்…  நெற்றிதரல நீர்வடிய… கொற்றப் பொய்கை ஆடியவள்  -  “அற்றை திங்கள் என்றால் என்ன?”  

Confusion !!  -  long long ago or Once upon a time   என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.   இது ஒன்றும் மெட்டுக்கு பாட்டு போடும் புலவர் சொந்தமல்ல !!  

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்; எந்தையும் உடையேம்

எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின் –  வென்றெரி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே  

சங்க இலக்கிய புறநானூறு பாடல் வரிகள் -  இப்பாடலைப் பாடியவர்கள் பாரி மகளிர் ஆவர்.  பாரி மகளிர் இருவர் - அங்கவை, சங்கவை என்று  கூறுவர்  - அத்தகைய அழகிய தமிழ் வல்லுனர்களை - தமிழ் பட்டி மன்ற முதியவர் கூட நடிக்க படு கேவலமாக,  நகைச்சுவை என்ற பெயரில் மிக ஆபாச வசனத்தை காட்டியது ஒரு பிரபல தமிழ் படம்.     “மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”.  மூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக் கொன்றதை உணர்த்த வென்றெறி முரசின் வேந்தர் என இகழ்ச்சியாற் குறித்தனர் பாரி மகளிர்.   

நிற்க இது சினிமா பதிவல்ல !!  .. .. ஒரு நறுமலரை (கருமுகை) பற்றிய பதிவு !!

'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளது ஒன்று  உண்டு'  திருக்குறள் : 1274 - கற்பியல் 

என்ற குறளில் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு - அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது., என்பது பாடலின் பொருள். நறுமணத்தை குறிக்கும் வேறு சொற்கள், வாடை, நறுநாற்றம், வாசனை. 

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற ஸ்ரீமன் நாரணன் மட்டுமே உபாதாந காரணம்;  திருப்பாற்கடலில் சயனித்து இருக்கும்  பரமபுருஷன் மட்டுமே நம்மை காக்கவல்லன்.  






இன்று  (29.11.2022) திருவோணம் - திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்   அழகு பொலிந்திட திவ்யமான நகைகளுடன்  தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டு அருளினார்.  மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, கனகாம்பரம் என மிக அழகிய நறுமண மாலைகளோடு சேவை சாதித்தார்.   பெருமாளுக்கு முதல் வரிசையில் முல்லை மொட்டுகள் இடையே சற்று வித்தியாசமான மஞ்சள் பூக்களை இன்றைய படங்களிலே காணலாம்.  அவை மிக மிக மனமானவை. மற்றைய மலர்களுடன் – கருமுகைப்பூ  [மஞ்சள் வர்ணத்தில் உள்ள புஷ்பம்],   மலர்கள் மம் வீசி பொலிவுற்றன.

காட்டு சம்பகம் அல்லது கருமுகை   மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல், இலைகளைப் போலவே பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றன. இம்மலர்க்கொடியில் பச்சைப் பாம்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !  எம்பெருமானுக்கு பலர் நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர்.  பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -  செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ  - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.  

·        முகை என்ற பெயர்ச்சொல்லுக்கு : மொட்டு, அரும்பு என பொருள்.  மலர்களின் பருவநிலையை பைந்தமிழில் : அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை

·        நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை

·        முகை - நனை முத்தாகும் நிலை

·        மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)

·        முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்

·        போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

·        மலர் - மலரும் பூ

·        பூ - பூத்த மலர்

·        வீ - உதிரும் பூ

·        பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

·        பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்

·        செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை என விளக்குகின்றனர் [விக்கிப்பீடியாவில் இருந்து]

 

இதோ இங்கே நம் பெரியாழ்வாரின் ஒரு அற்புத பாசுரம் :

அண்டத்தமரர்கள் சூழ அத்தாணி  உள்ளங்கிருந்தாய்

தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய் தூமலராள்  மண வாளா

உண்டிட்டு உலகினை யேழும்   ஓராலிலையில் துயில்கொண்டாய்

கண்டு  நான் உன்னையுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.

 

மிக உயர்ந்த பரமபதத்திலே  தேவர்கள் சூழ்ந்திருக்க மிக சிறந்த அரியாசனத்தில் வீற்றிருப்பவனே! உந்தம் அடியார்களுடைய ஹ்ருதயத்தில் அதைவிட சிறப்பாக வசிப்பவனே!; பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாகவுடைய பிராட்டிக்கு கொழுநனே!   ஏழு உலகங்களையும் உண்டுவிட்டு  ஓர் ஆல் இலையில் யோக நித்திரை கொண்டவனே!  நான் நீ பூச்சூடி வரும் அழகை ரசித்து  மகிழும்படி 'கருமுகைப்பூ' சூட்டவாராய் என பலக்கண்ணனை பரிவன்புடன் அழைக்கின்றார் நம் பெரியாழ்வார்.

               இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்   சூடியுள்ள பல மலர்களையும் முக்கியமாக மஞ்சள் வண்ணத்தில் திகழும் கருமுகை பூக்களாலான மாலையும் கண்டு களியுங்கோள்.  இன்று மாலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
29.11.2022







 

  

Tuesday, November 29, 2022

Holy Thiruvallikkeni where cows and people co-exist !!

 திருவல்லிக்கேணி தனிலே  - ஆவினமும் அருளிச்செயலும்

அனுதினமும் போற்றுவது அகில லோக நாயகன்  கண்ணபிரானையே ! -



Annakoota Uthsavam - Sri Chenna Kesava Perumal - Govardhana giri 2022

Govardhana (गोवर्धन) is a 8km long hill located near the town of Vrindavan, in the Mathura district of Uttar Pradesh – it is the sacred hills of Braj.   Lord Krishna was born in Mathura, brought up in Gokulam, played in Vrindavan and surroundings and thus many of His Leelas were in and around these areas ~ ‘lifting of the Govardhana Giri’ is a very important event.  The greatness of the hills of Govardhan is appreciated by Periyazhwar in 10 hymns.  

At Thiruvallikkeni divyadesam on day  9  of Irapathu uthsavam is Govardhanagiri Gopala.  Bhagwan Sri Krishna  right from  His childhood days exhibited magical qualities revealing and making those close to Him aware  that He is the Supreme Power;  yet He mingled with cowherds and all other folks treating all as equals ~ such is the great quality (Saulabhyam) of Lord Krishna,  being accessible to mighty and meek without disparity.  It was his Govardhanagiri prabhavam – protecting cowherds and humanity by lifting the hillock.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே  இராப்பத்து உத்சவத்திலே 9ம் நாள் - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு 'கோவர்தன கிரி' சாற்றுப்படி.  

மழைக்கும் மேகத்துக்கும் அதிபதி இந்திரன். அவனே தேவர்களுக்கும் அதிபதியானதால் தேவேந்திரன் என்ற திருநாமத்தைப் பெற்றான். இந்திரனின் பெருங்கருணையால் மாதம் மும்மாரி பெய்து நிலங்களில் பயிர் செழுமையாக விளைந்து, மக்கள் பசிப்பிணியின்றி வாழ்ந்து வந்தனர். இந்த நன்றியை இந்திரனுக்குத் தெரிவிப்பதற்காக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் முதல் பயிரை அவனுக்கே படைத்தனர். இதனை ‘இந்திர விழா’ என்று கோலாகலமாகக் கொண்டாடினர்.  நான் மட்டுமே அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறேன். என்னையன்றி மக்களுக்கு நன்மைகள் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை!’ என்ற அகம்பாவம் இந்திரனுக்கு மிக அதிகமாக இருந்தது. இந்தச் செருக்கை அடக்கிட பரந்தாமனானகண்ணபிரான்,  ஒரு விருத்தாந்தம் அருளினார்.  



ஒரு வருஷம் விருந்தாவனவாசிகள் ஒன்றுகூடி பசுக்களை அலங்கரித்து அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள். கோபியர்களும் விமரிசையாக ஆடையணிந்து மாட்டு வண்டிகளில் அமர்ந்து கிருஷ்ணரின் லீலைகளைப் பாடியபடி பவனி வந்தார்கள். கோவர்த்தன பூஜையை நடத்தி வைத்த அந்தணர்கள் கோபாலர்களையும் கோபியரையும் ஆசீர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின் கிருஷ்ணர் மிகப்பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடுமில்லை, ‘இரண்டும் ஒன்றே’ என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும் கிருஷ்ணர் உண்டார்.  கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்பது இன்றும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்மலையிலிருந்து கற்களை எடுத்துச்சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றை பாவித்து பூஜிக்கிறார்கள். 

கர்வத்தில் தன் மதி இழந்த பலவகையான மேகங்களுக்கு அதிபதியான இந்திரன் ‘ஸாங்வர்த்தக’ என்ற கொடிய மேகத்தை அழைத்தான். இந்த மேகம், பிரபஞ்சம் முழுவதையும் ஒரே மூச்சில் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்திரன், விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும்படி ‘ஸாங்வர்த்தக’ மேகத்திற்குக் கட்டளையிட்டான். இந்திரனின் கட்டளைப்படி பலவகையான அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின்மேல் தோன்றி, தம் பலம் முழுவதையும் பிரயோகித்து அழிவை ஏற்படுத்தத் தொடங்கின. ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன. அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும்  மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன. மின்னல்களும் இடிகளும் கசையடிகளாகத் தாக்க, அந்த அடிக்குப் பயந்தவைபோல், மேகங்கள் திக்குகள் அதிரும்படி கர்ஜித்தன. ஆரம்பத்தில் கூரிய அம்புகள்போல் நீர் தாரை தாரையாகப் பெய்தது. பிறகு தூண் பருமனில் மழையைப் பொழிந்து, விருந்தாவனத்தில் நிலப்பகுதிகளை மேடு பள்ளம் தெரிய வொண்ணாமல் நீரால் நிரப்பின. உலகமே இருள் மயமானது. 


மாடுகளும், கன்றுகளும் கஷ்டப்பட, மனிதர்கள் பெரும்பயத்துடன் கிருஷ்ணனைசரணடைந்து, ‘‘கிருஷ்ணா, நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று தீனக்குரலில் வேண்டினர்.   இடி, மின்னல், மழையோடு பெருங்காற்றும் வீசியதால் ஒவ்வொரு ஜீவராசியும் கடுங்குளிரால் நடுங்கின.  ‘பக்தர்களே! நீங்கள் யாவரும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்ச வேண்டாம். அதை நான் இந்த மலையைத் தூக்கிப் பிடித்துத் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள இடங்களில் அவரவர் விருப்பம்போலச் சுகமாக இருக்கலாம். மலை மேலே விழுந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்!’’ என்று கூறியபடியே மலையைத் தனது விரலாலே கிருஷ்ண பகவான் தாங்கிப்பிடித்துக்கொண்டார்.  தமது இடதுகையின் சுண்டுவிரலின் நுனியில் நிறுத்தியிருந்ததைக் கண்டும், பசி, தாகம், வேறு எந்தவிதமான கவலையுமில்லாமல்  அவர் முகம் ஒளிவிட்டதை எண்ணியும் ஆச்சர்யமடைந்தார்கள், அவ்வூர் மக்கள். . ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய, சுவாமியும் அந்த கோவர்த்தனகிரி மலையை குடைபோல ஏந்தி அனைவரையும் காத்தருளினார். அன்னக்கூட உத்சவத்தன்று  'கோவர்தனகிரி'  பிரபாவம்   நினைவு கூறப்படுகின்றது. 

Understand that in Northern part, hundreds of sweet dishes are offered to Lord Krishna on this day.    In various places,  people pray to Lord Govardhan for protecting us from hardships of life. On this day people also bathe  bulls and cow and decorate them with garlands and saffron.  The ones that were dear to Lord Krishna as he grew up are reverred. The preparation of 'Annakoot' is an integral part of the Govardhan Puja.  It is  ‘mountain of food’. Therefore on the auspicious day of Govardhan Puja, devotees offer 56 or 108  varied preparations of food / fruits / sweets as  ‘Bhog’ to Lord Krishna. The idols of Lord Krishna are bathed in milk and adorned with beautiful and dazzling clothes and jewelry.   

 


Chenna Kesava Perumal Temple, better known as Pattanam Kovil, and the conjointed Chenna Mallesswarar temple have  a rich history and are now prominently placed in the bustling area of Flower Bazaar, lying closer to NSC Bose Road,  Rattan Bazaar, Sowcarpet, Broadway, High Court and more……. – being a prominent landmark by itself. The temple was moved to its present place a few centuries ago and built with the grant of the Council, Manali Muthukrishna Mudaliyar contributed 5,202 pagodas, and subscriptions from the congregation amounted to 15,652 pagodas. With this the work on the Chennakesava Perumal temple began in 1767, was completed in 1780.    

On 27.11.2022 Annakkoota uthsavam was grandly celebrated at Sri Chenna Kesavar Thirukovil in Georgetown area – here are some photos of Emperuman holding Govardhana giri containing cows, birds, elephants and all living things.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.11.2022






 

  

Monday, November 28, 2022

Sri Bairagi Mutt Karthikai Brahmothsavam 2022 - அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன்

In the ongoing Karthigai Brahmothsavam – it is day 8 – and at Sri Bairagi Mutt, Chennai 79 – it was Hanumantha vahanam for Sri Padmavathi thayar.

       

சிறை இருந்தவள்  ஏற்றம் சொல்வது அற்புதமான 'இராம காவியம் - ஸ்ரீ இராமாயணம்'.  கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன்  அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது.   ராம இலக்குவணர்களை முதன்முதலில் காணும் சுக்ரீவன் தனக்குத் துன்பம் செய்ய வந்த வாலியின் ஆட்கள் என்று எண்ணி அஞ்சுகிறான். அவனின் அச்சத்தைப் பார்த்த அனுமன் தான் அவர்களைக் கண்டு வருவதாய்க் கூறி வந்து பார்க்கிறார். முதற் பார்வையிலே ராம இலக்குவணர்கள் தருமமும் தகவும் என்னும் தகைமை உடையவர்கள், கிடைத்தற்கரிய அருமருந்து போன்ற ஒன்றினைத் தொலைத்து விட்டுத் தேடி வருபவர்கள் போல் உள்ளது என்று உணர்கிறார்.  

அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்.  ராம பிரானே! நான் அஞ்சனை வயிற்றில் வந்தவன். என்னுடைய பெயர் அனுமன் என்று குறிப்பிடுகின்றான்.மேலும் இம்மலையில் இருந்து வாழும் சுக்ரீவன் என்பவனின் அமைச்சன் என்றும் கூறுகின்றான்.  

“மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்

நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்

கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்”  

“அனுமன் அறிவும், ஆற்றலும், கல்வியும், ஞானமும் நிரம்பியவன்” என்பதை அவன் சொல்லால் இராமன் தெரிந்துகொண்டான்.




சிறப்புற நடந்து வரும் கார்த்திகை ப்ரஹ்மோத்சவத்தில் - சென்னை பைராகி மட திருக்கோவிலில் - ஸ்ரீ பத்மாவதி தாயார் அனுமந்த வாஹனம்.  ஹனுமான் அழகிய மலர் மாலைகள்,  பவள மாலை மற்றும் சீதா ராம பதக்கங்களை அணிந்துள்ளதை இந்த படங்களில் காணலாம்.  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
28.11.2022

Saturday, November 26, 2022

Bairagi Mutt - Sri Padmavathi Ammavaru kuthirai vahanam 2022

 Sri Padmavathi thayar brahmothsavam kuthirai vahanahm  @ Bairagi Mutt, Chennai  

திருச்சானூர்: பத்மாவதி தாயார் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது. சென்னை பைராகி மடத்து திருக்கோவிலில் இன்று 26.11.2022  ஸ்ரீ பத்மாவதி தாயார் குதிரை வாகனத்தில் எழுந்து அருளி அருள் பாலித்தார்.:



Thursday, November 24, 2022

Ornate Singa Peruman - Belur Chenna Keshava Temple - slaying of Hiranya by Narasimha

எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று !!  - எம்பெருமான் நரசிம்மன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் .. அண்ணாந்து பார்த்தால்  விட்டத்திலும்  இருப்பான்.

 


The ornate carving of Narasimha slaying Hiranya .. .. depicted vividly in the ceiling of Belur Chenna Keshava Temple .. 

Wednesday, November 23, 2022

Sri Parthasarathi Emperuman Karthigai Amavasai 2022 - செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே !!

செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே !!




கோகுலத்தில் வளர்ந்த பால கண்ணனுக்கு - அசுரர்களால்  ஏதாவது ஆகிவிடுமோ என அனைவரும் பயந்திருக்க, 

எம்பெருமான் கண்ணனுக்கோ  பரமபதத்தை விட, ஆவினங்களை  மேய்ப்பதுதான் பிடித்திருந்ததாம்.

 
Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman – Karthigai  Amavasai purappadu today.
23.11.2022
 

 
Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman – Aippaisi Amavasai purappadu today.
23.11.2022 

Tuesday, November 22, 2022

Sri Thelliya Singar Aippaisi Swathi purappadu 2022

 Thiruvallikkeni divaydesam Aippaisi Swathi purappadu

Sri Azhagiya Singar.


நம்பனே! நவின்றேத்த வல்லார்கள் நாதனே! நரசிங்கமதானாய்!*

உம்பர் கோனுல கேழும் அளந்தாய்  ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி*

.. ..  ……..  ……..               ஏழையேனிடரைக் களையாயே.

 


திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே இன்று (22.11.2022)  மாலை ஸ்வாதி

 ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு

how to be peaceful ? where is peace ??

அமைதிக்கு பெயர்தான் சாந்தி !! 

அமைதி!  = சாந்தி ??   தமிழ் படங்களில் அதிகமாக காணும் cliché  (அசல் சிந்தனையின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ள ஒரு   கருத்து.)  பணக்காரன் அமைதியை தேடி அலைவான்; அவனால் நன்றாக தூங்க முடியாது !  - ஏழை எப்போதும் சந்தோஷமாக இருப்பான் - எந்நிலையிலும் நன்றாக தூங்குவான் !  - இது எனக்கு ஏற்பு உடையதல்ல !!


பணத்தின் மூலம் உடல் ரீதியாக  சவுகரியங்களை செய்து கொள்ள முடியும்,  சில வலிகளை குறைக்க முடியும், உடல் அளவில் திருப்தியை ஏற்படுத்த முடியும். பெயர், பலம் மற்றும் புகழ் இவை பல சமயங்களில் சந்தோஷத்தையே தரும்.  நாம் அனைவருமே அவற்றை தேடி அலைகின்றோம். 

உலக வாழ்வு அமைதியற்றது - கொள்ளை நோய்கள், பண போராட்டம், போர் மற்றும் எந்த ஒரு பேரழிவும் மக்கள் மனதில் பயம்,பதட்டம், காட்டிக் கொடுக்கும் உணர்வு ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழி செய்கின்றது. அடுத்தவர் ஆழ்ந்த வெறுப்பும், பொறாமையும்,  பழிவாங்கும் உணர்வும் தோன்றுகின்றன.  

தொல்லைகளும், துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றமடையாமல் எதிர்கொள்வதே உண்மையான அமைதி. நடு ரோட்டில நாற்பது வண்டிகள் போனாலும் - அமைதியாக அசை போடும் (இங்கே உணவை அல்ல !!  நினைவுகளை !!)  மாடுகள் இங்கே !!  



நாமும் சும்மா இருந்து யோசித்தால் இது போன்ற அற்புத கருத்துகள் தோன்றும் என்று காலை வணக்கம் கூறும் உங்கள் சுவாமி சும்மார்  குமார் !!  

22.11.2022 

Monday, November 21, 2022

Gadikachalam .. .. .. view of Sholinghur periya malai

  

"கடிகை' என்றால் ஒரு முகூர்த்த நேரம்; அதாவது 24 நிமிடம் என்பதாகும். "அசலம்' என்றால் மலை. இத்திருத்தலத்தில் ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக்கனி எம்பெருமானை [மூலவர் மலைமேல் யோக நரசிம்மர் / கீழே உத்சவர் பக்தோசிதன்] தர்சனம் செய்தல்,   அனைத்து நல்வளங்களையும், நல்ல சிந்தனைகளையும் தரும்.

 


A view of ‘Kadikachalam’ – Sholinghur (Cholasimhapuram) hills from the road !

Thursday, November 17, 2022

Karthigai masapravesam 2022 - the Big Bang Theory !!

                                    கார்த்திகை மாதம் ஒரு சிறப்பான மாதம்.  திருமங்கை மன்னன், திருப்பாணாழ்வார், சாற்றுமுறைகள்  - கூடவே திருக்கார்த்திகை தீப உத்சவம்.  வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு  :  பஞ்சபூதங்களும், சந்த்ரஸூர்யர்களும், மேகமண்டலங்களும், ஜீவராசியும், எண்டிசைகளும், ஆவரணங்களும் அண்டமுமெல்லாம் ~ இவையெல்லாம் யாவை, யாவருடையவை - என்பதில் ஏதாவது சந்தேகமோ  மனக்கிலேசமோ  கிஞ்சித்தும் உள்ளதா உங்களுக்கு ! 



Science is sound knowledge ~ yet there could be no denial of the fact, that even the most astounding accepted facts have changed over centuries with newer findings !  

What is your address ?  -  you may tell your street, area, city, and the like -   we reside in ‘The Milky Way galaxy’   .. ..  just as Earth orbits the sun, the Solar  system orbits the center of the Milky Way. Despite hurtling through space at speeds of around 515,000mph (828,000kmph) our solar system takes approximately 250 million years to complete a single revolution !!  last time our planet was in this position, dinosaurs were just emerging and mammals were yet to evolve. Our Milky Way Galaxy was once thought to comprise the entire known universe. Today our universe encompasses many billions of galaxies, and its history can be recounted back to its earliest moments.  

For centuries scientists thought the Universe always existed in a largely unchanged form, run like clockwork thanks to the laws of physics. But a Belgian   scientist called George Lemaitre put forward another idea. In 1927, he proposed that the Universe began as a large, pregnant and primeval atom, exploding and sending out the smaller atoms that we see today. His idea went largely unnoticed. But in 1929 astronomer Edwin Hubble discovered that the Universe isn’t static but is in fact expanding. If so, some scientists reasoned that if you rewound the Universe's life then at some point it should have existed as a tiny, dense point. Critics dismissed this: the celebrated astronomer Fred Hoyle sarcastically called this concept the “Big Bang” theory, a phrase that would later be adopted by its proponents.  

Our universe was born about 13.7 billion years ago in a massive expansion that blew space up like a gigantic balloon. That, in a nutshell, is the Big Bang theory, which virtually all cosmologists and theoretical physicists endorse. The evidence supporting the idea is extensive and convincing. The  universe is still expanding even now, at an ever-accelerating rate.  

Our universe began with an explosion of space itself - the Big Bang. Starting from extremely high density and temperature, space expanded, the universe cooled, and the simplest elements formed. Gravity gradually drew matter together to form the first stars and the first galaxies. Galaxies collected into groups, clusters, and superclusters. Some stars died in supernova explosions, whose chemical remnants seeded new generations of stars and enabled the formation of rocky planets. On at least one such planet, life evolved to consciousness. And it wonders, “Where did I come from?”  

The theory accounts for the creation of the lightest elements in the universe—hydrogen, helium, and lithium—from which all heavier elements were forged in stars and supernovas. An extension of the Big Bang, known as cosmic inflation, even explains why the universe is so homogeneous (evenly composed) and how galaxies are distributed across space. The concept of a Big Bang doesn’t indicate whether the universe will continue to expand and cool or whether it will eventually contract to another super-hot singularity, perhaps restarting the entire cycle. The ultimate fate of the universe likely depends on the properties of two mysterious phenomena known as dark matter and dark energy. Further study of both could reveal whether the universe will end in fire—or ice.  

Nevertheless, the way the universe began would have been determined by the laws of physics, if the universe satisfied the no boundary condition. This says that in the imaginary time direction, space-time is finite in extent, but doesn't have any boundary or edge. The predictions of the no boundary proposal seem to agree with observation. The no boundary hypothesis also predicts that the universe will eventually collapse again. Howsoever, sound all these theories could be – only a time travel either to millions of years of the past ! or to the future can only perhaps tell with accuracy – what is true and what is Science, what is believable !! 





திருமழிசை மன்னன்  வரிகளில்: 

வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,

தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு

கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,

அண்டந் திருமால் அகைப்பு.

 

ஆகாசம், தீ, உலவுகின்ற வாயு,  பெரிய நீர்பரப்பான  பெருங்கடல்கள்,  அண்ட வெளியில் நாள்தவறாமல் திரிகின்ற வெம்மையான சூரியன்,  குளிர்ச்சியை அளிக்கும் வெண்மதியான சந்திரன்,  மழை சுமந்து திரியும் மேகங்கள், இதர சேதனங்கள்,  திசைகள் எட்டு,   ஆவரணங்கள்,  அனைத்தையும் தன்னுள் அடக்கிய அண்ட சராசரம் - இவை எல்லாமே -  ஸர்வேச்வரனான  ஸ்ரீமன் நாராயணின்  ஸங்கல்பத்தினாலேயே  உருவானவை.  அவனுக்கு மட்டுமே ஆட்பட்டவை.  

The forces of nature as observed and seen – the sky, fire, Oceans, mountains, the hot Sun, cool Moon, rain bearing clouds, eight directions, the Universe, the open that surrounds the galaxies  - all are manifestations of Lord Sriman Narayana.   Lesser mortals like us need not worry  about the future uncertainties, bad things and  sins of life – Thirumazhisai Azhwar shows us the path of having in our hearts – that beautiful Lord Krishna reclining on the riverside of the holy Kaveri, who will protect us all the time.   

Thursday 17th Nov 2022  (today) is the day 1 of Tamil month of Karthigai and there was Masa Pravesam purappadu of Sri Parthasarathi Swami at Thiruvallikkeni today.  

This year karthigai nakshathiram aka Thirumangaimannan sarrumurai is on 22nd day of Karthigai ie., 8.12.22 and  next day is Rohini – sarrumurai of Thiruppanazhwar, as also Thirukarthigai deepa uthsavam – from that day it would be thailakappu and no darshan of moolavar till 28.12.2022  which would be day 6 of pagalpathu uthsavam – sthala pasuram.   

Here are some photos of today’s purappadu at Thiruvallikkeni divaydesam

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.11.2022