Monday, November 28, 2022

Sri Bairagi Mutt Karthikai Brahmothsavam 2022 - அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன்

In the ongoing Karthigai Brahmothsavam – it is day 8 – and at Sri Bairagi Mutt, Chennai 79 – it was Hanumantha vahanam for Sri Padmavathi thayar.

       

சிறை இருந்தவள்  ஏற்றம் சொல்வது அற்புதமான 'இராம காவியம் - ஸ்ரீ இராமாயணம்'.  கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன்  அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது.   ராம இலக்குவணர்களை முதன்முதலில் காணும் சுக்ரீவன் தனக்குத் துன்பம் செய்ய வந்த வாலியின் ஆட்கள் என்று எண்ணி அஞ்சுகிறான். அவனின் அச்சத்தைப் பார்த்த அனுமன் தான் அவர்களைக் கண்டு வருவதாய்க் கூறி வந்து பார்க்கிறார். முதற் பார்வையிலே ராம இலக்குவணர்கள் தருமமும் தகவும் என்னும் தகைமை உடையவர்கள், கிடைத்தற்கரிய அருமருந்து போன்ற ஒன்றினைத் தொலைத்து விட்டுத் தேடி வருபவர்கள் போல் உள்ளது என்று உணர்கிறார்.  

அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்.  ராம பிரானே! நான் அஞ்சனை வயிற்றில் வந்தவன். என்னுடைய பெயர் அனுமன் என்று குறிப்பிடுகின்றான்.மேலும் இம்மலையில் இருந்து வாழும் சுக்ரீவன் என்பவனின் அமைச்சன் என்றும் கூறுகின்றான்.  

“மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்

நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்

கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்”  

“அனுமன் அறிவும், ஆற்றலும், கல்வியும், ஞானமும் நிரம்பியவன்” என்பதை அவன் சொல்லால் இராமன் தெரிந்துகொண்டான்.




சிறப்புற நடந்து வரும் கார்த்திகை ப்ரஹ்மோத்சவத்தில் - சென்னை பைராகி மட திருக்கோவிலில் - ஸ்ரீ பத்மாவதி தாயார் அனுமந்த வாஹனம்.  ஹனுமான் அழகிய மலர் மாலைகள்,  பவள மாலை மற்றும் சீதா ராம பதக்கங்களை அணிந்துள்ளதை இந்த படங்களில் காணலாம்.  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
28.11.2022

1 comment: