Thursday, January 27, 2022

Thai Velli - Ekadasi Purappadu 2022 - பணி நெஞ்சே, நாளும் பரம பரம்பரனை,

இன்று  28.01.2022 -  தை  வெள்ளிக்கிழமை - கேட்டை நக்ஷத்திரம், ஏகாதசி ! 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட ஆட்சிப் பணி அதிகாரிகள், இந்திய அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப மத்தியப் பணிகளுக்குச் செல்வது வழக்கம்.  இவ்வாறு உள்ள நடைமுறையை மாற்றி 1954 ஆம் ஆண்டு ஆட்சிப் பணி விதி 6ல் புதிய திருத்தம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.  .   இது குறித்து சிலர் சர்ச்சை செய்து வருகின்றனர்.  

"பணி" என்ற  பெயர்ச்சொல்லுக்கு  :  பாம்பு, வேலை, சேவை, செயல், தொழில், தொண்டு,  நுகர்பொருள், அணிகலன்,  வேலைப்பாடு, கட்டளை, என பல்வேறு அர்த்தங்கள் உண்டு.  "பணி" என்ற வினைச்சொல்லுக்கு  -  பணிதல், எதிர்ப்புத் தெரிவிக்காமல் சொன்னவாறு நடத்தல் என பொருள்.  பணிந்தால், பிணி போகும் !!  ஸ்வாமி நம்மாழ்வார் நமக்கு அளித்துள்ள அற்புத கோட்பாடு! 

We have seen remarkable changes happening in one scene in movies – within a song, child would turn adult, hero and take revenge on those who did bad !  - something akin happened in life .. Jan & Feb of 2020 were normal, though we were reading some news of a new virus affecting people in China – none imagined that it would turn a global disease and threaten humanity.  For the past 2 years, humanity has lived in constant fear, fear of uncertain future !! – we are afraid of affliction, new variants and .. .. .. fear !! 

Statistically, Covid is playing havoc globally.  Confirmed cases of COVID-19 have passed 362.5 million globally, according to Johns Hopkins University. The number of confirmed deaths has now passed 5.62 million. More than 9.98 billion vaccination doses have been administered globally, according to Our World in Data. Moderna has announced a mid-stage study to test a booster dose of its COVID-19 vaccine specifically designed to target the Omicron variant. The news comes a day after Pfizer and BioNTech announced a trial of their own Omicron-specific jab. 

Numerous countries around Europe have reported record daily COVID-19 cases. Germany crossed the 200,000 mark for the first time, with 203,136 confirmed infections in the previous 24 hours. This represents 69,600 more cases than the same day a week before. Countries across Eastern Europe also set records, with Poland, the Czech Republic, Hungary, Bulgaria and Romania all reporting their highest confirmed COVID-19 cases of the pandemic on Wednesday. 

Today read an article in National Geographic on how most powerful Xrays revealed Corona damage to body .. .. When Paul Tafforeau saw his first experimental scans of a COVID-19 victim’s lung, he thought he had failed. A paleontologist by training, Tafforeau had been laboring with a team strewn across Europe for months to turn a particle accelerator in the French Alps into a revolutionary medical scanning tool. It was the end of May 2020, and scientists were anxious for a better view of the ways human organs were being ravaged by COVID-19. Tafforeau had been tasked with developing a technique that could make use of the powerful x-rays generated at the European Synchrotron Radiation Facility (ESRF) in Grenoble, France. He’d pushed boundaries on high-resolution x-rays of rock-hard fossils and desiccated mummies as an ESRF staff scientist. Now, he was dismayed by a lump of soft, squishy tissue. But when his colleagues caught their first glimpse of the lung scans, they felt something else: awe.  

The images presented them with richer detail than any medical CT scan they’d seen before, allowing them to bridge a stubborn gap in how scientists and doctors can visualize—and make sense of—human organs.  Ackermann and Jonigk suspected that SARS-CoV-2 was somehow attacking the lungs’ blood vessels. As the disease spread through Germany in March 2020, the duo began conducting autopsies of COVID-19 victims. They soon tested their blood-vessel hypothesis by injecting tissue samples with resin and then dissolving the tissues in acid, which left behind faithful casts of the original vasculature. “If you go through the human body and you take all the blood vessels in one line, you come up with [60,000] to 70,000 miles, double the distance around the Equator,” says Ackermann, who is also a pathologist at Wuppertal, Germany’s HELIO Clinics. If just one percent of these blood vessels gets attacked by a virus, he adds, the blood’s flow and ability to absorb oxygen can be impaired, with potentially devastating consequences across entire organs.  

Jonigk and Ackermann needed the unprecedented: a series of x-rays, all done on the same organ, that would let researchers zoom into portions of the organ down to the cellular scale.  The team published its first full description of the HiP-CT method in November 2021, and the researchers also have published a detailed look at how COVID-19 affects certain kinds of blood circulation in the lungs. The scans also yielded an unanticipated bonus: helping the researchers convince friends and relatives to get vaccinated. In severe COVID-19 cases, many of the lungs’ blood vessels look dilated and bloated, and at smaller scales, abnormal bundles of tiny blood vessels form.  

Back home, the Home ministry extended validity of its order for compliance of evidence-based Covid containment measures until February 28, home secretary Ajay Bhalla on Thursday wrote to all the state and UT administrations saying that the current positivity rate of over 10% in 407 districts across 34 states and UTs was a matter of concern and required exercise of caution and vigilance. Advising all the states and UTs to continue taking all precautions and not let the guard down, the Ministry asked  the local or district administration should continue to take prompt and appropriate containment measures.  

The TN Govt  notification of 27.1.2022 has done away with most stringent guidelines,  Multiplex / cinema theatres can have 50% of their capacity .. .. sports and other activities at indoor auditoriums can happen with 50% of capacity; so also entertainment and amusement parks - for marriages only 100 persons are allowed !  

Schools for 1st to 12th standard are set to open from 1st of Feb 2022 – the night time curfew presently vogue is removed effective 28.1.22; no lockdown on Sunday 30.1.2022 – other than the stated restrictions, rest are removed and that infers that there would be no restriction in Temples.  Would that pave way for Thiruveethi purappadu remains to be seen.  


பணிந்தால், பிணி போகும் !!  ஸ்வாமி நம்மாழ்வார் நமக்கு அளித்துள்ள அற்புத கோட்பாடு - இதோ இங்கே சடகோபனின் திருவாய்மொழி பாசுரம் :  

பணி நெஞ்சே, நாளும் பரம பரம்பரனை,

பிணி ஒன்றும் சாரா, பிறவி கெடுத்து ஆளும்

மணி நின்ற சோதி, மதுசூதன், என் அம்மான்,

அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே. 

நீலமணிபோன்ற சுடர்வீசும் எம்பெருமான், மதுசூதனன், என் அம்மான், அழகிய, சிவந்த பொன் போன்ற, போர் ஆற்றல் மிகுந்த சக்ராயுதத்தை ஏந்திய பெருமானை வணங்கினால் நோய்கள் வாராது, பிறவித்துயரத்தைக் கெடுத்து அருள்வான் அவன், ஆகவே, நெஞ்சே, உயர்ந்த பரம்பரனாகிய எம்பெருமானைத் தினந்தோறும் பணிவாயாக. 

Today being Ekadasi, there would have been periya mada veethi purappadu – hopefully, sooner we would be able to have darshan of Emperuman purappadu  at Thiruvallikkeni and other divyadesams.  Reminiscing the glorious past and praying Emperuman that situation turns normal sooner, here are some photos of Thai Ekadasi purappadu of Sri Parthasarathi Perumal at Thiruvallikkeni divyadesam in Feb 2018.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.1.2022







Wednesday, January 26, 2022

Nithi sala sukhama !! - *கண்டேன் கமல மலர்ப்பாதம்*

22.1.2022  ஓர் சீரிய நாள் -   ஸ்ரீவைஷ்ணவ உலகம் கொண்டாடும் ஓர் அற்புத நாள். பகல் பத்து பத்து நாள்கள் நிறைவுற்று, வைகுண்ட ஏகாதசி அன்று துவங்கி,  பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும் எம்பெருமான்,  சடகோபராகிய நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையாம்  திருவாய்மொழியை அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை 'திருவடி தொழல்' எனும் நிகழ்வில்     ஸ்வாமி  நம்மாழ்வார் திருநாட்டுக்கு சென்று அலங்கரித்து, மண்ணவர் விண்ணப்பிக்க நமக்கு திருப்பி தந்து அருளப்பட்ட அற்புத நாள்.

 

ஸ்ரீவைகுந்தத்தின் எம்பெருமான் வீற்றிருக்கும் பரமபதத்தில் நிலவும்  இன்பம் எப்படி இருக்கும் ?   இவ்வையகமே  நிலையற்றது.  ஸ்ரீவைணவர்கள் விரும்புவது என்ன ~ 'வீடு பேறு' - எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உறையும்  இடமான பரமபதம் சென்று, பரமபதநாதன் வீற்று இருக்குமிடத்திலே அத்தாணி சேவைகள் செய்வதே !.  

நம்மாழ்வார் திருவடி தொழலை பல திவ்யதேசங்களிலே கண்டு சேவித்து இன்புற்று இருப்பீர்கள் .. .. எங்கள் சிலருக்கு இவ்வருஷம் திருமயிலை ஸ்ரீமாதவப்பெருமாள் சன்னதியில் இந்த சேவை கிடைக்கப்பெற்றது.  எப்பொழுதையும் விட மாதவர் மந்தஹாஸத்துடன்,  அற்புதமான திவ்ய   சேவை   சாதித்தார்.  - மிக அழகான சாற்றுப்படி  (ஸ்ரீ  அஷ்வின் சுந்தரராஜ பட்டர்) 



இந்த கடின காலத்தில்  -   நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எப்போதும் எழும் ?  பகவான் ஸ்ரீகிருஷ்ணர்  பகவத் கீதையில் பணித்துள்ளதுபடி எம்பெருமானுக்கே திருத்தொண்டுகள் செய்து எக்காலங்களிலும் வணங்கி சரணடைவதே நமது கடமையாக கொள்ள வேண்டும் - இது ஸ்வாமி  நம்மாழ்வார் திருவாய்மொழி பாசுரத்தில் கூறப்பட்டுள்ள கருத்து :  செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்று வினவ, நெடுங்காலம் பல தவங்கள் புரிந்து,  பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றேனென்கிறார்.  அத்தகைய கீதாச்சார்யனான எம்பெருமான் கமல மலர்பாதத்தை   கண்டபோதே, நம் தீவினைகள் எல்லாம் விட்டுவிட்டு ஓடோடி போய்விடுமாம்.   எம்பெருமானின் தாமரைத் திருவடிகளைக் கண்டேன், அவ்வாறு கண்டதும் என்னுடைய வினைகள் அனைத்தும் விண்டுபோயின, முன்பு அந்தப் பரமன் எனக்கு வகுத்த முறைப்படி அவருக்கு என்றும் தொண்டுசெய்தேன், அவரைத் தொழுது அவருடைய வழியில் நடந்தேன், அதனால் அவருடைய திருவடிகளைக் கண்டேன் என்கிறார் சுவாமி நம்மாழ்வார் இந்த பாசுரத்தில்.:  

கண்டேன் கமல மலர்ப்பாதம்*  காண்டலுமே*

விண்டே ஒழிந்த*  வினையாயின எல்லாம்*

தொண்டேசெய்து என்றும்*  தொழுது வழியொழுக*

பண்டே பரமன் பணித்த*  பணிவகையே.  

For sure Carnatic connoisseurs have heard "Nithi sala sukhama",  one of the famous Telugu of Thiyagarajar.   Saint Thiyagaraja (Thiyagayya)  saw the reigns of four kings of Maratha dynasty but served none of them.  He was so fond of Sree Rama that his keerthanas exude bakthi rasam of the highest order.  At a time when King’s servants came searching to pick Thiyagayya to sing in the Court, he reportedly refused – his family which was in penury asked him to forego principles and earn money for their livelihood – Thiyagayya asks his heart which answered ‘nidhi sala sukhama’ -- !!      தியாகய்யர் இராமனை நெக்குருகி பாடும் ஒரு கீர்த்தனை  :   

நிதி சாலா சுக மா ராமு நி சந

நிதி சேவ சுகமா நிஜமுக ப ல்கு மநசா

Nithi Sala Sukhama, Ramuni , SAnnidhi seva Sukhama 

செல்வம் முதலியவை மிகுந்த இன்பத்தை aஅளிக்கக் கூடியவையா? அல்லது ஸ்ரீராமனின் சன்னதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே! உண்மையாக இதைக் கூறுவாய். தயிர் வெண்ணை, பால் முதலியன சுவை தருமா? அல்லது தயரதன் மைந்தனைத் தியானித்து பஜனை செய்வது ருசி தருமா?  

Thiyagarajar queries and finds a definite answer – ‘are riches more required or the worship of Lord Rama that would be more pleasant’. .. .. .. in this material world, it would be impossible to lead the life of Saints like Thiyagayya – at least let us understand the essence and immerse ourselves in devotion and do kainkaryam to Emperuman. 

Here are some photos of beautiful Sri Madhava Perumal at Thirumylai taken on Irapathu sarrumurai on 22.1.2022 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar. 











Tuesday, January 25, 2022

Sri Andal Neeratta Uthsavam 2022 – @ Thiruvallikkeni

Sri Andal Neeratta Uthsavam 2022 – thiruveethi purappadu @ Thiruvallikkeni



திருவல்லிக்கேணிவாசிகளுக்கு  இன்று ஓர் அற்புத நாள். மார்கழி 21 (ஜனவரி 5) 2022 - திருவோணம் திருதியை சேர்ந்த நன்னாள்  - இன்று முதல் ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட உத்சவம் ஆரம்பம். விடியல்  என்பது என்ன ? - எப்போது பகல் வரும் ?  - 'இரவு கழிந்தது ! - இரவி எழுந்தான் ?  எப்போது இருள் விலகும் ?  -  சூரிய உதயத்திலா !! - இல்லை !!  

ஏப்ரல் மாதம் 9ம் தேதி - எம்பெருமானார் இராமானுஜர் உத்சவம் ஆரம்பித்தது .. .. முதல் நாள் மட்டும் புறப்பாடு இனிதே நடந்தது.  பின் அரசாங்க கோவிட் விதிமுறைகளால் திருவீதி புறப்பாடு நடைபெறவில்லை.  நடுவில், திருக்கோவில்களில்  வாரத்தில் சில நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  அண்மையில் ஓர் நாள் பட்டணம் கோவில் கோஷ்டிக்கு சென்று இருந்தேன்.  பெரிய பிரகாரத்தில் ஆண்டாள் சன்னதி முன்பு பெருமாளை ஏளப்பண்ணி அருளிச்செயல்  கோஷ்டி ஆனது.  பூக்கடை காவல் நிலையத்தில் அருகில் இருந்து மனித வெள்ளத்தில் நீந்தி சென்று கோவில் வாசலை அடைய சுமார் இருபது நிமிடங்கள் ஆனது !  .. ..

திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் - பட்டர், கைங்கர்யபரர் என விரல் விட்டு எண்ணும் அளவில் பக்தர்கள் . .. .. கோவில் வாசல் அடைக்கப்பட்டு திட்டி வாசல் வழியாக கைங்கர்யபரர்கள் மட்டும் !  .. .. நிற்க, அதே சமயம் - அருகில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெரு, தங்கசாலை தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் - அங்குள்ள பிரபல உணவகங்களின் முன் நூற்றுக்கணக்கானோர் !  'கொரோனாவும் - கோவிலும்' - வீதிகளில் மாந்தர்களுக்கு எவ்வித தடையும் இல்லை, பெரும்பாலானோர் முகக்கவசம் கூட அணியவில்லை !! 

19.11.2021  கார்த்திகையில் கார்த்திகை நாள் -  கார்த்திகை தீப நன்னாள். திருமங்கைமன்னன் சாற்றுமுறை.   திருவல்லிக்கேணிவாசிகள் ஆனந்தத்தில் திளைக்க ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் கலியன் - கோபுரவாசலை கடந்து 36 கால் மண்டபத்தில் எழுந்தருளி -  தீமை எல்லாம் ஒழிய சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.    

அதன் பின் பல மாதங்கள் பின் இன்று  5.1.2022 ஸ்ரீஆண்டாள் திருவீதி புறப்பாடு.  சேவித்த பக்தர்கள் அனைவருக்கும் ஆனந்தம்.  இது கூட முழுதாக புறப்பாடு இல்லை.  திருக்கோவில் வாசலில் திருப்பாவை கோஷ்டி ஆரம்பித்து, அங்கேயே சேவித்து, சில அடிகள் கடந்து திருத்தேர் முன்புள்ள நீராட்ட மண்டபம்.  இங்கே திருமஞ்சனம் கண்டருளி திரும்பி திருக்கோவிலுக்கு - மாட வீதிகள், திருகுளக்கரை புறப்பாடு கிடையாது !!

To those of us in Thiruvallikkeni divyadesam today (5.1.2022) dawned beautifully – today being day 1 of Sri Andal Neeratta Uthsavam.  Momentous – joyous moment at as it was  first thiruveethi purappadu after few months.  ..  . .. the  last purappadu  was day 1 of Udayavar Uthsavam way back on 9.4.2021     –   ever since there has been no veethi purappadu.

கோதைப்பிராட்டியின் திருப்பாவை ஒரு அற்புத காவியம். திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத் தமிழ்மாலை. முப்பது பாடல்களுமே எம்பெருமானை மட்டுமே விளித்து, அவனது குணாதிசயங்களை அதிசயித்து, தோழியர்களை அதிகாலை துயில் எழுந்து, நன்னீராடி - அவனை அடைய உபாயங்களை சொல்லும் வைர வரிகள்.  

** சிற்றஞ் சிறுகாலே, வந்து உன்னைச் சேவித்து .. ..  **  ஆண்டாள் தம்முடைய தோழிமார்களை எழுப்பி பறை போன்றவற்றை பேணி, கண்ணனிடத்திலே பேறுகொள்கிறார். மற்றைய பாசுரங்களுக்கு மகுடம் போன்றது இப்பாசுரம்.   ஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே வேண்டியது உறவு அல்ல - ஏழேழு ஜென்மங்களிலும் பிரிக்க முடியாத உற்றதோர் உறவு.  குற்றேவல்? குறு + ஏவல் = சின்னச் சின்ன வேலை!  எம்பெருமானிடத்திலே செய்யும் சிறிய கைங்கர்யங்கள் ! ~ அல்லாமல் அவனிடத்தில் நாமாட்பட்டு  செய்யும் அந்தரங்க கைங்கர்யங்கள் தாமே !! 

In tradition, a Srivaishnava is supposed to chant all the 30 verses of Thiruppavai daily, if not possible,  chant this 29th  verse considered to be the quintessence, if even that is not possible one need to at least remember that Andal sung 30 verses and our preceptors dwelled in the meanings of this divine work every day.   

(ettraikkum ēzhēzh piavikkum undannōu uttrōmē yāvōm unakkē nām āt ceyvōm) [எற்றைக்கும், ஏழேழ்  பிறவிக்கும், உன் தன்னோடு உற்றோமேயாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்].   When Bagwan Lord Sri Kṛṣṇa said: — "I have now understood that You desire to serve me this day alone;  those damsels of Thiruvayarpadi responded stating  — “No, not to-day only! But for ever more and for all births to come, we shall not only do service to You and only You, but also will remain related to You.”   The Lord takes innumerable incarnations,  the gopikas aspire to take birth every time with Him to render eternal service;  and  that service is not for pleasure of self but only for pleasure of thyself ; bringing joy to Kṛṣṇa. 

Here are some photos of the glorious purappadu  of Kothai piratti at Thiruvallikkeni divyadesam this morning. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5.1.2022 (posted belatedly now)













  

Monday, January 24, 2022

இராப்பத்து சாற்றுமுறை - ஸ்வாமி நம்மாழ்வார் 'திருவடி தொழுதல்' 2022

இராப்பத்து சாற்றுமுறை  - ஸ்வாமி நம்மாழ்வார் 'திருவடி தொழுதல்'  2022

இன்று (22.1.2022)  ஓர் சீரிய நாள் -   ஸ்ரீவைஷ்ணவ உலகம் கொண்டாடும் ஓர் அற்புத நாள். பகல் பத்து பத்து நாள்கள் நிறைவுற்று, வைகுண்ட ஏகாதசி அன்று துவங்கி,  பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும் எம்பெருமான்,  சடகோபராகிய நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையாம்  திருவாய்மொழியை அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை 'திருவடி தொழல்' எனும் நிகழ்வில் காரிமாறனை திரும்ப அளித்து நமக்கு அருள் செய்வான்.  பத்து நாட்கள் பகல் பத்து உத்சவம் முடிந்து, பத்து நாட்கள் -  இராப்பத்து.  இன்று இராப்பத்து சாற்றுமுறை.  ஸ்வாமி  நம்மாழ்வார் திருநாட்டுக்கு சென்று அலங்கரித்து, மண்ணவர் விண்ணப்பிக்க நமக்கு திருப்பி தந்து அருளப்பட்ட அற்புத நாள்.


ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவாய்மொழியைகேட்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட உத்சவம் அத்யாயன உத்சவம்.  எம்பெருமானின் பரிபூர்ண அருளை பெற்ற நம்மாழ்வார்  'திருவடி தொழுதல்' என  திருநாட்டுக்கு சென்று அலங்கரித்துமண்ணவர் விண்ணப்பிக்க நமக்கு திருப்பி தந்து அருளப்பட்டவர்.  

ஸ்ரீவைகுந்தத்தின் எம்பெருமான் வீற்றிருக்கும் பரமபதத்தில் நிலவும்  இன்பம் எப்படி இருக்கும் ?   இவ்வையகமே  நிலையற்றது.  ஸ்ரீவைணவர்கள் விரும்புவது என்ன ~ 'வீடு பேறு' - எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உறையும்  இடமான பரமபதம் சென்று, பரமபதநாதன் வீற்று இருக்குமிடத்திலே அத்தாணி சேவைகள் செய்வதே !.   பூலோகத்துக்கு அப்பாற்பட்ட பரமபதம் எனும் திருப்பதியிலே - எம்பெருமான் பரமபத நாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் , பெரிய பிராட்டியுடன்  அநந்தாங்க விமான நிழலில் சேவை சாதிப்பார்.  இந்த க்ஷேத்திரத்தின்  நதி, விரஜா நதி என்பர்.  அனந்தன், கருடன், விஷ்வக்சேனர், முதலான நித்ய சூரிகளும், முக்தர்களும் இங்கே கைங்கர்யங்கள் செய்வார்கள்.   எம்பெருமானுடைய ஐந்து நிலைகளில் - பர; வ்யூஹ; விபவ; அர்ச்சை ;  அந்தர்யாமி நிலைகளில் பரத்வம் நிறைந்து நிற்குமிடம் 'திருபரமபதம்".   

திருமங்கை ஆழ்வார் ஏற்படுத்திய இந்த அத்யயன  உத்சவத்தை, நாம் இன்று குறையில்லாமல் அனுபவிக்க முக்கியமான காரணம் நம் ஆசார்யர் ஸ்வாமி மணவாள மாமுனிகளே! .. அத்யயன உத்சவத்தின் சிறப்பு - எம்பெருமான் முன்பே அனைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்தருளப்பண்ணி அருளிச்செயல் சேவை சாதிப்பதே. 

கழிமின்  தொண்டீர்கள் கழித்துத்*  தொழுமின்   அவனைத் தொழுதால்

வழிநின்ற வல்வினை மாள்வித்து*  அழிவின்றி ஆக்கம் தருமே. 

தொண்டர்களே!  - ஒரு பயனும் இல்லாமல் கழிந்து செல்லும் பிரயோஜனமில்லாத  இதர   விஷயாந்தர பற்றை அகற்றி விடுங்கோள்; அவற்றை  கழித்துவிட்டு - அற்புத பூதனான ஸ்ரீமன் நாரணனை தொழுங்கள்;  அவ்வாறு அவனை  தொழுதமாத்திரத்தினால் , ஜன்ம பரம்பரையாய்த் தொடர்ந்து நின்ற வலிய பாவங்களை ஒழித்து  சாச்வதமான சிறந்த அற்புத செல்வத்தை தனது பக்தர்களுக்கு தந்தருள்வன் நம் எம்பெருமான் என்கிறார் சுவாமி நம்மாழ்வார்.

பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில், ஏனைய திவ்யதேசங்களிலும், பற்பல அபிமான ஸ்தலங்களிலும், இன்றளவும் பெரிய பெருமாளின் ஆக்யைப்படி… ஒவ்வொரு ஆண்டும் பெரிய திருநாளின் இராப்பத்து பத்தாம் நாள் உற்சவமாக நம்மாழ்வார் மோக்க்ஷம் சிறப்புற கொண்டாடப்படுகிறது.   திருவரங்கத்திலே  அரையர் ஸ்வாமி விண்ணப்பிக்க, மற்றைய திருத்தலங்களில் அத்யாபக ஸ்வாமி  எம்பெருமானிடத்திலே - மாறன் சடகோபனை இந்த பூவுலகத்திற்கே திரும்ப தந்தருள வேணுமென வேண்டி எம்பெருமானும் அவர்தம் அவாவை பூர்த்தி செய்து மகிழ்விப்பன். … 

இராப்பத்து  புறப்பாடு முடிந்து திருவாய்மொழி சேவிக்கப்பெறும்.  சாற்றுமுறையான இன்று (22.1.2022)  பத்தாம் பத்து பாசுரங்கள்.  முதலில் தாளடைந்தோர் தங்கட்கு தானே வழித்துணையாம் என நம் சுவாமி மணவாளமாமுனிகள் அனுசந்தித்த, 'தாள தாமரை தடமணி வயல்' எனும் திருவாய்மொழி.  ஒன்பதாம் திருவாய்மொழி - சூழ்விசும் பனி முகில்,  தூரியம்  முழங்கின - பரஜ்ஞானத்தை பெற்ற ஆழ்வார், எம்பெருமானால் அர்ச்சிராதிகதியை  காட்டப்பெற்று, திருநாட்டுக்கு சென்று, அங்குள்ள முக்தர்களோடு சேர்ந்தமையை, மயர்வற்ற மதிநலத்தால் கண்டு அருளிச்செய்தமை.  இந்த பத்து பாசுரங்கள் சேவிக்கும்  போது, அர்ச்சகர்கள் கைத்தலங்களில், நம்மாழ்வாரை ஏந்தி எம்பெருமானின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள்.  ஆழ்வாரும் திருத்துழாயில் முற்றிலும் மூழ்குவார்.  எம்பெருமான் திருவடியில்,  நம்மாழ்வாரை சூழ்ந்த அத் திருத்துழாய் பிரசாதமாக கிடைத்தல் பரம பாக்கியம். 

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்

வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று

வைகுந்த்தமரரும் முனிவரும் வியந்தனர்

வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

மன்னவர் விதி இந்த பூவுலகம் நீங்கி, எம்பெருமான் அருளுடன் அவனிடம் சேர்தலே !  அவ்வாறு வந்த நம்மாழ்வாரை - கின்னரர் கெருடர்கள் கீதங்கள் பாடியும்,அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழங்கவும், முனிவர்கள் இருமருங்கிலும், தோரணங்கள் நிறைத்து தொழ, திருமாமணி மண்டபத்து அடியரோடு சேர்ந்து அந்தமில் பேரின்பத்தை அடைந்த சடகோபனை - திரும்ப தந்தருள வேணும் என கண்ணீருடன் உலகத்தோர் வேண்டினர்.  

இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர எம்பெருமானிடத்திலே விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் விமர்சையாக நடைபெறுகின்றது. 

எம்பெருமானை அலங்கரித்த (திருவரங்கத்திலே நம்பெருமாளை தழுவிய) மலர் மாலை, களைந்து ஆழ்வாருக்கு சாற்றப்படுகிறது.   தன் பெருவீட்டுக்கு அற்புதமான அருளிச்செயல் அந்தாதி பாடிய ஆழ்வாரை நமக்கே திரும்ப கொடுத்து,  பரமபதத்துக்கு சென்ற முக்தனுக்கு பகவான் அருள்புரிவது காட்டப்படுகிறது.  

இதை நேரில் கண்டோர் அளவிலா ஆனந்தத்தில் கண்ணீர் மல்குவர்; நாத்தழுதெழ ஆழ்வார் தம் பெருமை மறுபடி மறுபடி நினைவுறுவர். 22.1.2022    அன்று திருமயிலை ஸ்ரீமாதவப்பெருமாள் திருக்கோவிலில் சிறப்புற நடந்தேறிய 'நம்மாழ்வார் திருவடி தொழல்' வைபவத்தின் சில புகைப்படங்கள் இங்கே.  

இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் திருவடிகளே சரணம்.

திருக்குருகை மாறன் சடகோபன் திருவடிகளே சரணம் !!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
இராப்பத்து சாற்றுமுறை - 22.01.2022