22.1.2022 ஓர் சீரிய நாள்
- ஸ்ரீவைஷ்ணவ உலகம் கொண்டாடும் ஓர் அற்புத நாள். பகல் பத்து பத்து நாள்கள்
நிறைவுற்று, வைகுண்ட ஏகாதசி அன்று துவங்கி, பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும்
எம்பெருமான், சடகோபராகிய நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையாம் திருவாய்மொழியை
அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை 'திருவடி தொழல்' எனும்
நிகழ்வில் ஸ்வாமி நம்மாழ்வார்
திருநாட்டுக்கு சென்று அலங்கரித்து, மண்ணவர் விண்ணப்பிக்க நமக்கு திருப்பி தந்து அருளப்பட்ட
அற்புத நாள்.
ஸ்ரீவைகுந்தத்தின் எம்பெருமான் வீற்றிருக்கும் பரமபதத்தில் நிலவும் இன்பம் எப்படி இருக்கும் ? இவ்வையகமே நிலையற்றது. ஸ்ரீவைணவர்கள் விரும்புவது என்ன ~ 'வீடு பேறு' - எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உறையும் இடமான பரமபதம் சென்று, பரமபதநாதன் வீற்று இருக்குமிடத்திலே அத்தாணி சேவைகள் செய்வதே !.
நம்மாழ்வார் திருவடி தொழலை பல திவ்யதேசங்களிலே கண்டு சேவித்து இன்புற்று இருப்பீர்கள் .. .. எங்கள் சிலருக்கு இவ்வருஷம் திருமயிலை ஸ்ரீமாதவப்பெருமாள் சன்னதியில் இந்த சேவை கிடைக்கப்பெற்றது. எப்பொழுதையும் விட மாதவர் மந்தஹாஸத்துடன், அற்புதமான திவ்ய சேவை சாதித்தார். - மிக அழகான சாற்றுப்படி (ஸ்ரீ அஷ்வின் சுந்தரராஜ பட்டர்)
இந்த கடின காலத்தில் - நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எப்போதும் எழும் ? பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் பணித்துள்ளதுபடி எம்பெருமானுக்கே திருத்தொண்டுகள் செய்து எக்காலங்களிலும் வணங்கி சரணடைவதே நமது கடமையாக கொள்ள வேண்டும் - இது ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழி பாசுரத்தில் கூறப்பட்டுள்ள கருத்து : செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்று வினவ, நெடுங்காலம் பல தவங்கள் புரிந்து, பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றேனென்கிறார். அத்தகைய கீதாச்சார்யனான எம்பெருமான் கமல மலர்பாதத்தை கண்டபோதே, நம் தீவினைகள் எல்லாம் விட்டுவிட்டு ஓடோடி போய்விடுமாம். எம்பெருமானின் தாமரைத் திருவடிகளைக் கண்டேன், அவ்வாறு கண்டதும் என்னுடைய வினைகள் அனைத்தும் விண்டுபோயின, முன்பு அந்தப் பரமன் எனக்கு வகுத்த முறைப்படி அவருக்கு என்றும் தொண்டுசெய்தேன், அவரைத் தொழுது அவருடைய வழியில் நடந்தேன், அதனால் அவருடைய திருவடிகளைக் கண்டேன் என்கிறார் சுவாமி நம்மாழ்வார் இந்த பாசுரத்தில்.:
கண்டேன்
கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*
விண்டே
ஒழிந்த* வினையாயின எல்லாம்*
தொண்டேசெய்து
என்றும்* தொழுது வழியொழுக*
பண்டே பரமன் பணித்த* பணிவகையே.
For sure Carnatic connoisseurs have heard "Nithi sala sukhama", one
of the famous Telugu of Thiyagarajar. Saint
Thiyagaraja (Thiyagayya) saw the reigns of four kings of Maratha
dynasty but served none of them. He was so fond of Sree Rama that his
keerthanas exude bakthi rasam of the highest order. At a time when King’s
servants came searching to pick Thiyagayya to sing in the Court, he reportedly
refused – his family which was in penury asked him to forego principles and
earn money for their livelihood – Thiyagayya asks his heart which answered
‘nidhi sala sukhama’ -- !! தியாகய்யர்
இராமனை நெக்குருகி பாடும் ஒரு கீர்த்தனை
:
நிதி சாலா சுக மா ராமு நி சந
நிதி சேவ சுகமா நிஜமுக ப ல்கு மநசா
Nithi Sala Sukhama, Ramuni , SAnnidhi seva Sukhama
செல்வம் முதலியவை மிகுந்த இன்பத்தை aஅளிக்கக் கூடியவையா? அல்லது ஸ்ரீராமனின் சன்னதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே! உண்மையாக இதைக் கூறுவாய். தயிர் வெண்ணை, பால் முதலியன சுவை தருமா? அல்லது தயரதன் மைந்தனைத் தியானித்து பஜனை செய்வது ருசி தருமா?
Thiyagarajar queries and finds a definite answer – ‘are riches more required or the worship of Lord Rama that would be more pleasant’. .. .. .. in this material world, it would be impossible to lead the life of Saints like Thiyagayya – at least let us understand the essence and immerse ourselves in devotion and do kainkaryam to Emperuman.
Here are some photos of beautiful Sri Madhava Perumal at Thirumylai taken on Irapathu sarrumurai on 22.1.2022
Very nice nice photos.
ReplyDelete