Tuesday, September 14, 2021

Thiruvallikkeni Thirupavithrothsavam Angurarpanam 2021 - ஒருவிடமொன்றின்றி என்னுள் கலந்தானுக்கே

Today 14.11.2021 (Avani 29) is Thirupavithrothsava Angurarpanam at Thiruvallikkeni divaydesam – the 7 day Pavithrothsavam starts tomorrow and sarrumurai is on 21.9.2021 – in normal times, there would be veethi purappadu on all these days and then Thiruvaimozhi goshti inside the temple in the yagasalai.

நம் எம்பெருமானுடைய  கடாக்ஷம் பெறப்பெறின்    எத்தகைய மனக்களிப்பு உண்டாகும் ?  முத்துக்களோ, வைரங்களோ, நன்பொன்னோ  ~ வேறு ஏதும் விலை மிக அதிகமான பொருளோ ? - நமக்கு எதிலே நாட்டம் ?? ஐயம் கிஞ்சித்தும் உளதோ ??  :  சுவாமி நம்மாழ்வாரின் வைர வரிகள் :  

*பெருங்கேழலார் தம்  பெருங்கண் மலர்ப்புண்டரீகம்  நம்மேல் ஒருங்கே பிறழுவதே **   ~  அன்று  பிரளய  வெள்ளத்திலழுந்தின பூமியை மீட்டு எடுத்த மஹாவராஹ ரூபாய மயமானவர்,  எம்பெருமான் தம்முடைய பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை, தன்னை குளிர நோக்கினமை நம்மாழ்வார் கூறியவாறு,  நம்மேல் வைத்த கடாக்ஷத்தை பற்றி மட்டுமே பேருவகை கொள்தல் நலம்.  

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.  




திருவல்லிக்கேணியில் நடைபெறும் பல்வேறு உத்சவங்களில் சிறப்பானது -  ஆவணி மாதம் ஏழு நாட்கள் விமர்சையாக நடக்கும்  திருப்பவித்ரோத்சவம்.  இவ்வுத்ஸவம் ஆண்டாள் சன்னதி முன்பு யாகசாலை அமைத்து நடக்கிறது.  நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், பெரிய  அழகு மலர் மாலையுடன், கிரீடம்,  புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத சேவை அளிக்கிறார்.  படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.   பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.  

இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும்,  அத்யாபகர்களால்  திவ்யப்ரபந்த திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடும் நடக்கிறது; இந்த வருடம் கொரோனா  தீ நுண்மி காரணமாக புறப்பாடு மட்டும் கிடையாது.   கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ரமாலை சாற்றப்படுகிறது.



திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப்படுகிறது. திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திரலோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)   

முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது.  ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும்  தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன்.  சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும்  தன்னகத்தே கொண்டவன். எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை.  எம்பெருமானின் திருவடிகளையே சரணாய் கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம் கொள்கிறோம்.   

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரை கண்கைகமலம்,

திருவிடமே மார்வம் அயனிடமே  கொப்பூழ்,

ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,

ஒருவிடமொன்றின்றி என்னுள்  கலந்தானுக்கே  

சுவாமி நம்மாழ்வார் ~ எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தம்மிடம் வந்தடைந்ததை - 'ஒருவு இடம் ஒன்று இன்றி' -  நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்) தன்னோடு சேர்ந்தவனாய் உள்ள எந்தை என அதிசயிக்கிறார். அதிஅத்புதமான நம் எம்பெருமான் - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது.  திருக்கண்கள் செந்தாமரை மலர்களாயிரா நின்றன; திருக்ககைகள் - தாமரை மலர்களாயின ; அவரது திருமார்பு - பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று; திருநாபியோ ப்ரம்மதேவனுக்கு  உறைவிடமாயிற்று;  அத்தகைய சிறந்த எம்பெருமானே நாம் அனுதினமும் வணங்கும், நம்மை உய்விக்கும் ஸ்ரீமன் நாராயணன். 

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.  It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.  

Here are some photos of Sri Parthasarathi Perumal taken  earlier  of Thiru Pavithra Uthsava purappadu at Thiruvallikkeni in the evening of 4.9.2014. 

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14th  Sept. 2020.

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம். 







1 comment: