Thursday, September 9, 2021

Avani Hastham .. Thiruvallikkeni Sri Varadha Rajapperumal

Today 9th Sept 2021 is Avani Hastham – and in normal times, there would have been purappadu of Sri Varadha Rajar at Thiruvallikkeni   We miss Emperuman purappadu and other religious functions due to Covid restrictions, though everything else seemingly is open. 


கோவில்களில் கட்டுப்பாடு ! - புறப்பாடுகள் இல்லையே என்று துக்கமாக உள்ளதா !? - மனிதர்களுக்கு பல கவலைகள்.  கவலையே இல்லாத  மனிதர் என்று யாரையுமே  சொல்ல முடியாது !!  மனிதர்கள் அனைவருக்குமே  ஏதோ ஒருவிதத்துல கவலைகள்  உள்ளன - அதுவும் இந்த கொரோனா காலத்தில் பலருக்கு உடல் உபாதைகளும், சிலருக்கு பண தட்டுப்பாடும் அதிக கவலைகளை தந்துள்ளன.    துக்கம் என்பது மனிதரின்  அடிப்படையான உணர்வுகளில ஒன்று ஆகும் -  மற்றவை இன்பம், கோபம், ஆச்சரியம், பயம், வெறுப்பு எனலாம். 

துயரம் அல்லது துக்கம் (sorrow or sadness) என்பது ஒரு வகை வலியினால் வரும் சோகமான உணர்ச்சியாகும். இது ஒரு தோல்வி, நட்டம், இயலாமை, சோகம், என்பன ஏற்படும் போது வரும் உணர்வு. ஈடு செய்ய முடியாத இழப்பினால் ஏற்படக்கூடிய துன்பம், துக்கம் எனப்படும். அவ்வாறே ஈடு செய்யக்கூடிய இழப்பால் ஏற்படும் துன்பம், சோகம் எனப்படும்.


In Forests, animals too fight and kill – they kill their prey too .. .. but mankind kills others and animals for food, pleasure, sport and more .. they seemingly do not think that other animals too would grieve ! too !! – every year thousands of elephants are killed for their tusks.    In the Southeast Asian nation of Myanmar (formerly Burma) the jumbos are killed for their skins, to which locals ascribe medicinal properties.  When humans  kill elephants, they kill highly social and intelligent beings. Not only that, but by killing some elephants mankind causes  lasting grief to others. The jumbos, scientists argue in a study, mourn their dead in a way. The pachyderms, it seems, grieve over their late-lamented relatives, herd mates and companions.

It is painful even to read -  the ability to experience pain is something we have to feel to be considered moral. It can result from something such as a wound or abuse causing physical pain. Animals can also experience pain mentally, such as experiencing grief as well as sadness due to anxiety. Animal pain can be understood once we understand the nature of a certain animal.  Grief is a natural response to losing someone or something that’s important to you. You may feel a variety of emotions, like sadness or loneliness. And you might experience it for a number of different reasons.  Everyone grieves differently.  

Grief is “a multifaceted response to loss, particularly to the loss of someone or something that has died, to which a bond or affection was formed”. A common emotion amongst humans, grief is also apparent in other animals, known as animal grief.   Elephants have long been known to linger at the carcasses of other jumbos. They have been observed trying to lift or pull dead elephants as if seeking to raise them.   

At Thiruvallikkeni divaydesam - Sri Devathirajar [Varadharaja Perumal] is very unique in the sense that the moolavar is seen here in Nithya  ‘Garuda vahanam’ – usually you get to see vahanam purappadus for Uthsavar – here Moolavar Himself is on Garuda vahanam as He presented Himself to sage Saptharoma.  

எம்பெருமான் ஆனைக்கு அருள் செய்த பெருமாள்.  .. .. திருமங்கை மன்னன் திருவல்லிக்கேணி மங்களசாஸனத்தில் 'ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து  ஆழி தொட்டவன்' !!  - சுவாமி அண்ணங்கராச்சாரியாரின் அற்புத விளக்கம் :  இங்கு “ஆனையின் துயரம்” என்றது உயிர்போகிறதேயென்ற துயரத்தையன்று; வருந்திப் பறித்த இத்தாமரை மலர்களைச் செவ்வியழியாமல் எம்பெருமானது திருவடியிற் சாத்தப் பெறுகின்றிலோமே என்ற துயரத்தையாம்!!. “ஆழி விட்டானை” என்னாது “ஆழி தொட்டானை” என்றது காரியத்தின் லாகவத்தைத் தெரிவித்தவாறு. 

Thirumangai mannan in his Periya Thirumozhi describes of the incident of Lord rushing to save His devotees.... –  the elephant desirous of plucking fresh lotus flower for worshipping the Lord entered the fish-pond; the crocodile that was waiting caught his leg and its jaws pained the elephant – who in total surrender to the Lord made a tumultuous should calling out the Lord as the primordial Lord – to rid the elephant of the distress, Sri Varadhar descended swiftly on Garuda vahanam and through His Chakra provided relief. 

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு  சென்றிழிந்த*

கானமர் வேழம் கையெடுத்தலறக் கராவதன் காலினைக்கதுவ*

ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்றுநின்றாழி தொட் டானை,*

தேனமர் சோலை மாடமாமயிலைத்   திருவல்லிக்கேணிக் கண்டேனே.* 

மீன்கள் நிறைந்த ஒரு அழகான தடாகத்திலே, புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன் எனும் விலங்குகளின் அரசனாகிய பெரிய யானை  தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக முதலையானது அதன்   காலைத் கௌவிக்கொள்ள,  அவ்வாறு யானை 'ஆதிமூலமே' என்றழைத்தவுடன்  அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி  பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு (பொய்கைக் கரையிலே) எழுந்தருளி அங்கே நின்று தம்  திருவாழியை (அந்த முதலையின்மீது) பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய மாடமா மயிலை திருவல்லிக்கேணி யில் கண்டேன் என உரைக்கிறார்  திருமங்கை ஆழ்வார்.

Reminiscing the good olden days – here are some photos of Sri Varadhar Hastham purappadu on 7.9.2013.    

adiyen Srinivasa dhasan

Mamandur veeravalli Srinivasan Sampathkumar

9th Sept 2021.

பாசுர விளக்கம் : கச்சி ஸ்வாமி  ஸ்ரீ உ.வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை  - கட்டற்ற சம்பிரதாய களஞ்சியம் திராவிட வேதாவில் இருந்து !! 










1 comment: