Thursday, June 3, 2021

Sree Ramapiran Pattabishekam : பூண் உற்ற திரள் தோள்வீரன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி

நமக்கு பெருமையும் சிறப்பும் நம் இதிஹாச புராணங்களாலே ! ~  இராமாயணம் க்ஷத்ரிய வீர இராமனின் அருமைகளை இயம்பும் காதை.  தந்தை சொல் கேட்டு சிறப்பான நகரத்தை துறந்து வனம் ஏகிய நம் அண்ணல் இராமபிரான்.

 


Mere chanting of the name ‘Sree Rama’ would provide everything to us ~ he is the greatest benefactor ~ the Maryadha Purush ~ the greatest epitome of all virtues Lord Rama.  The greatest of the Ithihasa puranamn * Sri Ramayanam * has had its influence across centuries, countries and cultures -    Maryadha Purush Sri Rama  has illuminated the lives of millions imparting lessons in various spheres.  Pleasant things give happiness to everyone and there cannot be more pleasant sight than that of Sri Rama Pattabishekam ~ the eternal state of bliss- the most complete picture of happiness to everyone in the Kingdom.      



இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்டவுடன், அயோத்தி நகரத்து மாந்தர் அனைவரும் கிடைத்தற்கரிய தேவாமிர்தம் பெற்று உண்டவர்கள்போல் பெருமகிழ்ச்சி கொண்டனர்.   எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அமர்ந்திருந்த அழகை கம்பநாட்டாழ்வார் இவ்வாறு விவரிக்கின்றார் :

மாணிக்கப் பலகை தைத்து,  வயிரத்தின்  கால்கள் சேர்த்தி,

ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,

ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின்மீது

பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ.

அரசர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியான  ஸ்ரீராமபிரானுக்கு :  - மாணிக்கத்தால்  செய்த பலகைபொருத்தப்   பெற்று அதிலே வைரத்தால்  வலிய  கால்கள்  செய்தமைத்து;  உயர்ந்த பொன்னால் சுற்றும் பூர்த்தி செய்யப் பட்டு எழிலாக உருவாக்கிய பீடத்தை   பெருமை சான்ற பளிங்கு மாடத்தில் அமைத்தனர்;    மிக அழகாக அமைந்த அப்பீடத்தின்  மேல்  அற்புதமான    அணிகலன்கள்  அணிந்த  திரண்ட  தோள்களை  உடைய வீரனாகிய  இராமபிரான்   சீதாப்பிராட்டியோடும் அழகுற வீற்றிருந்தான். 


10th Apr 2016 was Thavanothsavam for Sree Ramar at Thiruvallikkeni and it was such a bliss to have His darshan in Pattabisheka thirukolam.     Here are some photos of the  purappadu in the evening inside Thavana uthsava bungalow.   

Praying Sree Ramapiran that World returns to normalcy sooner and we back to our celebrating such uthsavams at Thiruvallikkeni and every other divyadesangal.

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன்.
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
3rd   June 2021
















1 comment: