Wednesday, June 2, 2021

Only faith in Emperuman will cure - வல்வினை நோய்காள், இங்குப் புகேன்மின்! புகேன்மின் !!

Year 2021 started off well, hopes soared as seemingly life was limping back to normalcy  – the previous year  2020 shook the globe  badly ~ but as months progressed by Apr – May 2021, it was second wave and people were too worried.   We are back to stricter lockdown and more – when will all these end ? – when will humans live peacefully again ??



இந்த கடின காலம் என்று முடியும் ?  பொதுமக்களின் இடர் என்று தீரும் ?? ஊரூராக சுற்றி வந்த நாம் இன்று வீட்டுக்குள் மனிதர்களிடம் இருந்து விலகி, யாரவது அருகில் வந்தால் மனம் பயந்து, முகம் சுளித்து, எண்ணங்கள் எரிந்து - தனிமைப்படுத்தல் வலித்து .. .. என்று இவையெல்லாம் மாறும் !

பல்லாயிரக்கணக்கான வருட சரித்திரத்தில் - மனித இனம் கொள்ளை நோய்கள், பெரும் போர்கள், இயற்கை சீற்றங்கள், விலங்குகளின் தாக்குதல், கடல் கொள்ளுதல், வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற பற்பல பேரழிவுகளை பார்த்துள்ளது.  மற்றும் சாதாரண அசாதாரண மரணங்களும் சம்பவிக்கின்றன ! கடந்த 20 ஆண்டுகளில், நாம் ஆறு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்திருக்கிறோம் - சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் - ஆகியவற்றை சந்தித்துள்ளோம் -  எனினும் தீநுண்மி,  இந்த சொல் உலகத்தை ஆட்டிப்படைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக தினமும் நாம் கேட்பது இதை பற்றியது தான்.  இன்று உலகமே பயந்து போய் வாழ்க்கை முறையும் மாறி இருப்பதும் இதனால்தான்.

இப்போது மனித சமுதாயத்தின் வெற்றி கொடிய கொரோனா நோயை அழிப்பதே ! ~ அதற்கு அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.  கோவிட்-19 பெருந்தொற்று  என்பது கடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 என்ற தீநுண்மி காரணமாக ஏற்படுகிறது. இந்தியாவிலும் நம்   தமிழகத்திலும்  கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை உலுக்கி விட்டது.  கொரோனா உலகத்தை கலக்கியுள்ளது.  

Even under worst Corona times, our faith in Emperuman only  will save us.  Worship him and be rid of diseases.  It is the bakthi and the words of Sri Periyazhwar that should guide us. 




பெரியாழ்வார் எப்பொழுதும் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனையே  தம் சித்தத்தில் கொண்டிருந்தவர்.  பூமாலையோடு பாமாலைகளையும் சூட்டியவர்.  உடலை வருத்தும் நோய்கள் பற்றி இதோ இங்கே அவரது பாசுரம்.  நமது உடம்பில் பல நோய்கள் ஒவ்வொன்றாக வரிசையாக வந்து சேருகின்றன. நெய்க்குடத்தில் எறும்புகள் வரிசையாக வந்து அப்பிக்கொள்வதுபோல நமது உடம்பிலும் நோய்கள் வரிசையாக அப்பிக் கொள்கின்றன.  ஆனால், நேற்று வரை இருந்த நிலைமை வேறு இன்றைய நிலவரம் வேறு!  இன்று பண்டல்ல !  இபோது தன மெய்  எம்பெருமான் உறையுமிடம்.  அவனே என்னுள் இருந்து என்னைக் காவல் காக்கிற போது நோய்களே உங்களுக்கு இங்கே என்ன வேலை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய் விடுங்கள்  என்று நோய்களை எச்சரிக்கிறார் பெரியாழ்வார். 

எம்பெருமானிடத்தில் பரம ஈடுபாடு கொண்டவர்கள் தங்களைப்பற்றியும் தங்களது உடம்பு, ஏனைய பொருள்கள் மீது பற்று இல்லாதவர்கள்.  பெரியாழ்வாரின் அழகிய உவமை :  நெய் வைத்திருக்கும் குடத்தை  பற்றிக்கொண்டு அக்குடத்தின் மேல்  ஏறுகின்ற எறும்புகள் போல்  உடம்பு முழுவதும் பரவி  வசப்படுத்திக்  கொல்லவல்லது நோய்கள்.  நம்மைக் காப்பாற்ற எம்பெருமான் நித்யவாசஸ்தலங்களான ஸ்ரீவைகுண்டம், திருப்பாற்கடல் இவற்றை எண்ணி அங்கே பள்ளிகொள்ளும் எம்பெருமானிடம் சரணம் புகுதல் வேண்டும்.   பெரியாழ்வார் நோய்களை விளித்து  - இங்கு புகேன்மின் என அவற்றுக்கு அறிவுறுத்துகிறார். :-

மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்

இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்

சிங்கப்பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்

பங்கப்படாது   உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே.

நமக்கு முக்கியமானதான ஆத்துமா உருத்தெரியாதபடி மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான முற்பிறவி, இப்பிறவி, வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த வியாதிகளே,  உங்களுக்கும் கூட  ஓர் வல்வினை  [கடினமான தீமை]  நேர்ந்தபடியே பாருங்கள்.  இவ்விடத்தும் - புகேன்மின் புகேன்மின்  [வரவேண்டா, வரவேண்டா] ஏனெனில் - இனி நீங்கள் என்னை பீடிப்பது கொஞ்சமும் எளிதன்று.  எமக்குத் தலைவனுமான எம்பெருமான் [சிங்கப்பிரான்] எழுந்தருளியிருப்பதற்கிடமான திருக்கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்;  பரிபவப்படாமல்  பிழைத்துப்போங்கள், என்று 'பட்டினம் காப்பு' எம்பெருமான் உறையுமிடம் தமக்கு நோய்களில் இருந்து காப்பாக பாசுரமுரைக்கிறார் நம் விஷ்ணுசித்தன் தம் பெரியாழ்வார் திருமொழியில்.

கஷ்டங்கள் எல்லாம் விலகி எவ்வெப்போதும் அவரது அருளால் அவரை தினமும் சேவிக்கப்பெறும் பாக்கியத்துடன்,  எம்பெருமானுக்கும்  அவர்தம் அடியார்க்கும் கைங்கர்யங்கள் செய்யும் வாய்ப்புகளை தடையில்லாமல் தர  சிங்கப்பிரானாகிய திருவல்லிக்கேணி   ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாளை  வணங்குவோம்.




We fall at the feet of Singapiran – Thiruvallikkeni Sri Azhagiya Singar to reside in our hearts and save us from all evils.  Let us pray that sooner all evils vanish and people lead a happy, contented, healthy, peaceful life. Here are some photos of Sri Azhagiya Singar taken on theerthavari day – the 9th day of Special brahmothsavam at Thiruvallikkeni divyadesam on 10th Mar 2021.

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன்.
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
2nd  June 2021
பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.









  

1 comment: