Monday, May 3, 2021

Theppothsavam at Chithiraikulam - Thirumylai Sri Adhi Kesava Perumal

Last year, Corona came in waves – there was lockdown, temples were closed – then 2021 started well .. .. sadly, we have not learnt at all – the 2nd wave is far worser than the first – more people are affected and yet !!

ஒரு நாவாயை - அன்னப் பறவைகள் நாணப்படும் படியான,     நங்கையர் நடை என உருவகப்படுத்தும் பாடல்தனை கேள்வியுற்று இருக்கிறீர்களா ?





In normal times, Thiruvallikkeni divyadesam beckons with festivities .. ..  Grand Celebrations ’ throughout the year....    On the Full moon [Pournami day and Magam Nakshathiram] in the month of Masi,  Sri Parthasarathi perumal visits the shores of Marina, famously known as Masi Magam.   On Masi New moon [Amavasyai] starts the float festival at Thiruvallikkeni.   The tank of Sri Parthasarathi Swami is famous ~ it is‘Kairavini Pushkarini.’  The first three days, Sri Parthasarathi would embellish the theppam; the rest four days are for Sri Azhagiyasingar, Sri Ramar, Sri Ranganathar and Sri Varadarajar.  

The adjoining Thirumylai is described as ‘Mylai Thiruvallikkeni’ in the pasurams of Azhwargal.  Mylai is famous for Sri Kapaleeswarar temple which is connected with the Saivite Nayanmars.   The famous Saivaite trio - Appar, Sambandar and Sundarar, who lived in the 7th & 8th centuries have sung about Mylapore .. .. apart from Kabali kulam, there is another beautiful one ~ Chandra pushkarini (sarva theertham) popularly known as Chithirai kulam.  Sri Adhi Kesava Perumal Devasthanam better known as ‘ Mylai Kesava Perumal Kovil’ is near Mylai Kapaleeswarar Temple and the Chithirai kulam belongs to this Temple. 

ப்ரஹ்மோத்சவத்திலே கருட சேவை மற்றும் தேர் திருவிழாக்களுக்கு பக்தர்கள் குவிவர்.  மற்றோரு சிறப்பு உத்சவம் தெப்பத்  திருவிழா. இத்திருவிழாவின் பொழுது எம்பெருமானை மிதக்கும் தெப்பத்தில் ஏளப்பண்ணி , நீராழி மண்டபத்தினைச் சுற்றி  வலம் வருவார்கள்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தின் படிகளில் அமர்ந்து பெருமானை சேவித்து மகிழ்வர்.

தமிழரின் கடல் வாணிபம் மிகத் தொன்மையானது. தமிழர்கள் பெரிய பாய்மரக் கப்பல்களிலே சரக்குகளை ஏற்றிக்கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்துள்ளனர். தமிழர் நாவாய் வைத்து வாணிபம் செய்ததற்கு ஆதாரமாகப் பானை ஓடுகள், காசுகள், சுவரோவியங்கள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் இலக்கியங்களும் தமிழரின் கடலோடிய ஆற்றலைப் பறைசான்றுகின்றன. நாவாய் என்பது கடலில் ஓடும் மரக்கலக் கப்பல்.  வாய்நீரில் கிடக்கும் நாக்கு போல் நுனி குறுகி நீரில் ஓடும் கலத்தை நாவாய் என்றனர். இந்த நாவாய் வங்கம், கலம் என்னும் சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாவாயின் தோற்றம் பற்றியும், அவை இருந்த துறைமுகங்கள் பற்றியும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

எம்பெருமான் ஸ்ரீராமன் தந்தை சொல் காக்க - கூற்றுத்தாய் சொல்ல கொடியவனம் ஏகியவன். அவரது வனவாசத்திலே முதன் முதல் அறிமுகமானவனும் துணை செய்தவனும் குகன் ஆவான். அவனது பண்பு நலன்களைக் கண்ட இராமன், அவனைத் தன் தம்பியருள் ஒருவனாக ஆக்கிக் கொண் டான்.  குகன், வேட்டுவர் குலத் தலைவன்; அரையில் ஆடையும் காலில் தோல் செருப்பும் அணிந்தவன்; இடுப்பைச் சுற்றிக் கட்டிய ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்; வீரக் கழலுடன் அணிகலன்கள் பல அணிந்தவன்; இருளைத் தொடுத்தது போன்ற கருத்த தலைமயிர் கொண்டவன். பாறை போன்ற பரந்த மார்பும், இந்திரனது வச்சிராயுதத்தைப் போன்ற இடையும், நீண்ட கைகளும், கொடிய பார்வையும், பித்தன் போலத் தொடர்பில்லாத பேச்சும், கருமையான நிறத்தை கொண்டவன்.  கங்கையாற்றின் பக்கத்திலே அமைந்த சிருங்கிபேரம் என்று சொல்லப்படும் நகரத்தில் வசித்து வந்தவன். பொய் நீங்கிய மனத்தினன்.  ; யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன்; அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்.

ஸ்ரீராமபிரான்  குகனை  ஓடத்தை கொண்டுவருமாறு பணித்தான்.  வேடுவர் தலைவன்  குகன், விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர்போலும் கண்களை உடைய இராமன் அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிவிட்டு, அழகு திகழ் சீதையோடும் இலக்குவனோடும் படகில் இனிதாக ஏறினான். 

கம்ப இராமாயணத்தில் அயோத்திய காண்டத்தில் குகப்படலம் அமைந்துள்ளது.   இராமபிரானை மறுபடி அயோத்தி திரும்ப வேண்டி, பரதன் கங்கைக் கரை சென்றடைந்தபோது  அதன் தென்கரையில் நின்ற குகன், ”இராமபிரானோடு போர் செய்வதற்குத் தான் இந்தப் படை திரண்டு வந்திருக்கின்றது” என்று நினைத்துச்  சினம் கொண்டானாம்.  மரவுரி  தரித்த நிலையில், இராமனிருக்கும் திசை நோக்கித் தொழுதவண்ணம் பரதன் வரக் கண்ட குகன், இராமனுக்குப் பின் பிறந்தார் பிழை செய்யார் எனக்கூறி படகில் ஏறி, பரதனின் அருகில் வந்து வணங்கினான்.

தன்னையும் கங்கை கரையை கடக்க உதவி செய்யுமாறு குகனை பரதனும் வேண்ட, அவன் கொணர்ந்த ஓடங்களை பற்றி கம்ப நாட்டாழ்வாரின் அற்புத வரிகள் இங்கே :

நங்கையர் நடையின் அன்னம்*      நாண் உறு செலவின் நாவாய்.

கங்கையும் இடம் இலாமை மிடைந்தன -     கலந்த எங்கும், -

அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின்,*      அமரர் வையத்து

இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும்*      இருவினை என்னல் ஆன,-

அழகு மிளிர்ந்த மங்கையர் ஒய்யார நடையை  ஒத்த,   அன்னப் பறவைகள்  கண்டு நாணப்படும் படியான, நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்;   அக்கரையில் உள்ளாரை  இக்கரையிலும்;   ஏற்றி இறக்கும்தன்மையினால்; தேவருலகமாகிய அவ்வுலகத்தோடு;  இவ்வுலகில் உள்ளாரை; ஏற்றி இறக்கும்; இருவினை - புண்ணியம்,  பாவம் என்னும் இருவினை;  என்று  சொல்லும்படியாக இருந்தனவாய்;   கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி நெருங்கின;  எங்கும் கலந்தன - எல்லா இடங்களிலும் சேர்ந்தன.




On 13th Feb 2021 had the fortune of worshipping Sri Adhikesava Perumal theppothsavam – thirumanjanam alongwith Sri Peyazhwar at Chithirai kulam.  Here are some photos taken during that grand occasion.

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3rd May 2021. 












No comments:

Post a Comment